Wednesday, November 24, 2010

Kingdom Of கிழிஞ்சபுறம்

அது 2006ம் ஆண்டு விஜயதசமி நேரம் சரியாக சரஸ்வதி பூஜை தொடங்கி 4வது நாள் இருக்கும்.பாடசாலையில் விஜயதசமி நாள் நிகழ்வுகளுக்காக நிகழ்ச்சிகள் சேகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன...அப்போது நாங்கள் G.C.E O/L பரீட்சைக்காக தயாராகிக்கொண்டிருந்தோம்.
அன்று இரவு நாங்கள் ஆங்கில வகுப்பில் இது சம்பந்தமாக கலந்துரையாட வேண்டிய நிலை ஏற்பட்டது..அப்போது எங்கள் ஆசிரியை எங்களையும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை வழங்குமாறு ஆலோசனை வழங்கினார்...என்ன செய்யலாம் என நீண்ட நேர கலந்துரையாடலுக்கு பிறகு வழக்கம் போல "கல்வியா செல்வமா வீரமா"எனும் தலைப்பில் ஒரு நாடகத்தை அரங்கேற்றிவிடலாம் என நண்பன் ஒருவன் Idea தர அதே நினைவோடு வீடு நோக்கி சென்றோம் நாங்கள்.

மறுநாள் நிகழ்ச்சிப்பொறுப்பாசிரியரிடம் சென்று இந்த விஷியத்தை சொன்னதும் அவர் அதிபரிடம் போய் அனுமதி பெற்று வருமாறு அனுப்பிவிட்டார்..தொடர்ந்து அதிபரிடம் அனுமதி வாங்கும் படலத்திற்காக நாங்கள் நண்பர்கள் சில பேர் அதிபரின் அலுவலகம் சென்று அதிபரிடம் அனுமதி வழங்குமாறு கேட்டோம்..அதற்கு அவர் நாடகத்தின் கதையை கேட்டார்..அதிபரிடம் கதையின் தலைப்பை சொன்னதுமே அவர் எங்களை நிறுத்தச்சொல்லிவிட்டு அவரே கதையை சொல்லி முடித்தார்..!!(இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.காரணம் நாங்கள் கொண்டு சென்ற கதை வழக்கமாக எல்லா விஜய தசமி மேடைகளிலும் அரங்கேறுவது தானே???)கதையை சொல்லி முடித்ததும் அவரே தொடர்ந்தார்...."வேறு ஏதும் புதுசா நல்ல கதையா கொண்டு வாங்க இது சரி வராது"

சினிமா தயாரிப்பாளரிடம் சான்ஸ் கேட்டுச்சென்ற இயக்குனரின் நிலை போல் ஆகி விட்டது எங்கள் நிலையும்...அன்று படிப்பை துறந்து கதை கலந்துரையாடலுக்காக நேரத்தை செலவிட்டோம்...நீண்ட நேர செலவளிப்புக்கு பின் சிக்கியது ஒரு கதை...கதை என்றால் அது கதை அல்ல ஒரு கதைக்கான கரு....

அதாவது இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படம் வெளிவர தயாராக இருந்த சமயம் தான் அது...அதனை நினைவில் கொண்டு ஒரு நண்பன் "ஒரு அரச சபைய மையமா வச்சு கதையை கொண்டுபோனா என்ன?"என்றான்....idea நன்றாக இருக்க எல்லோரும் சம்மதித்தனர்...அந்த நொடியில் இருந்து நாடகம் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற ஆரம்பித்தது...கதைக்கு Script என்று தனியாக எதுவும் இல்லை...அப்போதைய சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற வாறு வாயில் வருவதை சொல்லி சொல்லி கதையை ஓரளவு கட்டி எழுப்பி விட்டோம்.அந்த நேரத்தில் சொல்லப்பட்ட சொற்கள் குறித்து வைக்கப்பட்டு அவையே வசனங்களாக மாறின...3 நாட்கள் தொடர்ந்து கஷ்டப்பட்டு ஒருவாறு நாடகத்தை முழுவதுமாக தயார்படுத்தி விட்டோம்.

எல்லாம் சரியாக இருந்தும் ஏதோ ஒன்று மட்டும் குறையாக இருந்தது...அது வேறொன்றும் இல்லை பின்னணி இசை தான்.Yamaha Keyboard இன் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாக பின்னணி இசையும் உருவானது....குறிப்பாக சொல்லப்போனால் மன்னனுக்காக உருவாக்கப்பட்ட பின்னணி இசை மன்னனின் நடைக்கு கனகச்சிதமாக பொருந்தியது...நாடகத்திற்கான பின்னணி இசையும் தயாரித்தாகி விட்டது.இனி மீதமாக இருந்தது அதிபரின் அனுமதி தான்..
அதிபரிடம் சென்று கதையை சொன்னோம்...அவர் அனுமதியை அளித்து விட்டு "எதுக்கும் சசி மிஸ் கிட்ட ஒரு தடவ நடிச்சு காட்டிருங்க"என்றார்...

விஜய தசமி தினத்திற்கு முதல் நாள் மாலை 4 மணியளவில் பாடசாலைக்கு சென்று சசி மிஸ் முன்னிலையில் நாடகத்தை நடித்துக்காட்டினோம்...நாடகம் அவருக்கு பிடித்துப்போக "நான் தான் உங்களிண்ட Teacher In-Charge OK வா"என்றார்...இது எங்கள் நாடகத்திற்கு கிடைத்த அங்கீகாரம்....சந்தோஷமாக "சரி"என்று சொல்லி வீடு நோக்கி கலைந்து சென்றோம்.
மறுநாள் காலை பாடசாலைக்கு சென்றதும் தனியான இடத்தில் வைத்து ஒரு முறை நாடகத்தை நடித்துப்பார்த்தகிவிட்டது.எல்லோரும் தயார் நிலையில் இருக்க விஜய தசமி விழா நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக மேடையில் அரங்கேறிக்கொண்டிருந்தன எங்களது நாடகம் தான் இறுதி நிகழ்வு...நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் "இப்போது நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வாக தரம் 11 மாணவர்கள் வழங்கும் Kingdom Of கிழிஞ்சபுறம் நகைச்சுவை நாடகம் இடம்பெறும்...தொடர்ந்து நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவுறும்"என்றார்.
எமது நாடகம் மேடையேற்றப்பட்டது.

நகைச்சுவை நாடகம் என்பதால் மாணவர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் ஆசிரியர்கள்,சிறப்பு விருந்தினர்கள் மத்தியிலும் வரவேற்பு பலமாகவே இருந்தது...நாடகத்தின் ஒவ்வொரு கதா பாத்திரங்களின் அறிமுகத்தின் போதும் கைத்தட்டல்கள் அதிக அதிகமாக கிடைத்தன.நாடகம் முடிவடைந்த பின் அனைத்து ஆசிரியர்களும் (அதிபர் உட்பட) எம்மை பாராட்டினர்...அந்த 3 நாட்கள் நாம் பட்ட கஷ்டத்திற்கு பரிசாக சக மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் கரகொஷங்கள் கிடைத்தன.
அப்படி என்னதான் கதை என்று யோசிக்கின்றீர்களா?
முதலில் ஒரு அரச சபையை காட்டுகின்றோம்.அந்த அரச சபையில் ஒரு சிம்மாசனம்,வலது பக்கம் 4 ஆசனங்கள்,இடது பக்கம் 4 ஆசனங்கள் இந்த 8 ஆசனங்களில் ஒரு ஆசனத்தில் மட்டும் அமைச்சர் ஒருவர் தூங்கிக்கொண்டு இருக்கிறார்.சிறிது நேரத்தில் ஒவ்வொரு அமைச்சர்களாக வந்து தத்தமது ஆசனங்களில் அமர்ந்து கொள்கின்றனர்...அமைச்சர்களின் வருகைக்கு பின் கடைசியாக அரசன் அரச சபைக்கு வருகின்றார்...அரசன் தன் அரியாசனையில் அமரும் முன்பே அரச சபை பிரதான காவலன் பதற்றத்துடன் ஓடி வருகின்றான்.பதற்றம் மாறாமல் 2 புலவர்கள் ஒன்றாக சபை நோக்கி வருவதை கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு செல்கிறான்.புலவர்கள் வருவதை அறிந்த மன்னன் சுதாரித்துக் கொண்டு ஆசனத்தில் அமர்கின்றான்.
புலவர்கள் இருவரும் சபைக்கு வந்து மன்னனுக்கு மரியாதையளித்து நாட்டு நடப்புகளை பற்றி பாடலாக பாடிவிட்டு செல்கின்றனர்...அவர்கள் பாடலாக பாடியது மன்னனுக்கு சாதகமாக இருக்கவில்லை மாறாக பாதகமாகவே இருந்தது.நீண்ட நேர சிந்தனைக்கு பிறகு நாட்டை அழிவில் இருந்து எப்படியாவது காப்பாற்றவேண்டும் என முடிவெடுத்து அமைச்சர் சபையுடன் கலந்துரையாடுகிறான்.......அவர்கள் இதற்கு ஒரு யோசனை கூறுகின்றனர்...அதாவது நாட்டில் பிரபலமான துப்பறியும் நிபுணர்கள் இருவரை வரவழைத்து நாட்டு நிலைமை இவ்வாறு சென்றதற்கான காரணத்தை அறிவதே அமைச்சர்களது திட்டமாகும்...யோசனை கூறப்பட்ட சமயத்தில் அவ்விடத்தில் முதலமைச்சர் இருக்கவில்லை....எங்கள் கதை பிரகாரம் முதலமைச்சர் ஒரு உளறுவாயன்..அதனால் இந்த விடயத்தை பற்றி முதலமைச்சரிடம் யாரும் மூச்சு கூட விடக்கூடாது என்பது அரசன் கட்டளை.

துப்பறியும் தொழிலில் சிறந்து விளங்கும் 2 துப்பறியும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விடயம் பற்றி தெளிவாக விளக்கமளிக்கப்பட்டு உண்மையை அறிந்து வருமாறு அரசனால் அனுப்பப்படுகின்றனர்....
அரசனின் கட்டளையை ஏற்று அவர்களும் சபையை விட்டு வெளியே செல்ல அந்த இடத்தில் திரை மூடப்பட்டு மீண்டும் திறக்கப்படுகிறது.
திரையில் அந்த நிபுணர்கள் இருவர் மட்டும் தோன்றுகின்றனர்.எவ்வாறு இதை கண்டுபிடிப்பது என அவர்களுக்குள்ளேயே பேசிக்கொண்டு அரசசபை காவலனின் வீட்டை கடந்து செல்லும் போது உள்ளே இரண்டு பேர் பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்கிறது....
பேசிக்கொண்டிருந்தது காவலனும் காவலனின் மகனும் தான்....அதாவது இந்த காட்சி என்னவென்றால்;காவலின் மகன் தன் படிப்பை தொடர தன் அப்பாவிடம் பணம் கேட்கின்றான்...ஆனால் காவலனிடமோ பணம் இல்லை,என்ன செய்வது என்று அறியாமல் தவிக்கின்றான்...அதற்கு மகன் மன்னன் ஏழைகளின் படிப்புச்செலவுக்காக நிறைய செலவளிக்கின்றார் என வெளியே எல்லோரும் பேசிக்கொள்கின்றனர் எனக்கூற,மனக்குமுறலை அடக்க முடியாதவனாய் காவலன் தனக்குத்தேரிந்த உண்மைகளை மகனிடம் கூறுகின்றான்....அதாவது அரசன் தெரிந்தோ தெரியாமலோ பல நல்ல காரியங்களுக்காக செலவிடும் பணத்தை எல்லாம் அந்த முதலமைச்சர் அரசனுக்கு தெரியாமல் ஆட்டையை போடுவதுதான்.....
இதை வெளியில் நின்று கேட்டுவிட்டனர் உளவாளிகள் இருவரும்....மன்னன் கொடுத்த வேலை சுலபமாக முடிந்துவிட்டது எனினும் அதனை நிரூபிக்க தற்போதைக்கு எம்மிடம் தகுந்த ஆதாரங்கள் எதுவும் இல்லை...அதை திரட்டி மன்னனிடம் சமர்பித்து அந்த முதலமைச்சருக்கு தகுந்த தண்டனை பெற்றுக்கொடுப்போம் என சபதம் மேற்கொண்டு ஆதாரம் திரட்ட கிளம்பினர் இரண்டு உளவாளிகளும்.
இருவரும் முதலமைச்சர் வீட்டுப்பக்கம் சென்று தம் வேலைகளை தொடங்கினர்....நாளடைவில் தேவையான ஆதாரங்களை திரட்டி விட்டு மன்னனிடம் சென்று அவற்றை சமர்ப்பித்து நிகழும் குற்றங்களுக்கு யார் காரணம் என்பதை கூறினர்....செய்வதறியாது குற்றத்தை முதலமைச்சருக்கு ஒத்துக்கொள்ள வேண்டியதாயிற்று
குற்றத்தை ஒத்துக்கொண்ட முதலமைச்சருக்கு தன் பாணியில் தண்டனை வழங்கிவிட்டு இனி இந்த ராஜ்ஜியத்தில் நல்லாட்சி மட்டுமே நிகழ வேண்டும் என Message கூறிவிட்டு சபை இத்துடன் கலையட்டும் என கட்டளையிட்டு அந்த இடத்தை விட்டு நீங்குகிறான் அரசன்.
ஆரம்பத்தை போல ஒவ்வொருவராக சபையை விட்டு கிளம்ப சபை திடீரென அரசன் மட்டும் திரும்பி வருகிறார்.வந்து (ஆரம்பத்தில் சொன்னேனே ஒரு அமைச்சர் மட்டும் தூங்கிக்கொண்டிருக்கிறார் என்று) அமைச்சரை எழுப்பி "நாடகம் முடிந்துவிட்டது வா கிளம்பலாம்"என தன்னுடன் அழைத்துக்கொண்டு செல்கிறார்.....திரை மூடப்படுகிறது..

இது தான் எங்கள் கதை.....இதை வாசிக்கும் போது அந்த அளவு சுவாரசியம் இருக்காது என்பது எனக்குத்தெரியும்...இருந்தாலும் முடிந்தால் நாடகத்தை நேரில் பார்த்த சக மாணவர்களிடம் கேட்டுப்பார்த்தால் சொல்வார்கள்.....இதில் முக்கிய விடயமே வசனங்கள் தான்....4 வருடங்கள் பழமையான வசனங்கள் என்பதால் எங்களில் யாருக்கும் எல்லா வசனங்களும் நினைவில் இல்ல....இந்த நாட்கள் அந்த கால கட்டத்தில் எங்கள் நகரத்தில் பிரபலமாக பேசப்பட்டற்கான காரணம் மேலே கூறப்பட்ட கதையுடன் நகைச்சுவையை தாராளமாக தெளித்துவிட்டிருந்தது தான்.குறிப்பாக மன்னனிடத்தில்.....

பின் குறிப்பு-அந்த கால கட்டத்தில் எங்கள் வயது வெறும் 16 தான்.அதனால் இப்போதெல்லாம் உள்ளது போல நல்ல குவாலிட்டி யான கேமரா,செல்போன் இருக்கவில்லை....அந்த நேரம் எங்களிடம் வெறும் VGA கேமரா Mobile தான் இருந்தது....அதனால் தான் பிரசுரிக்கப்பட்ட படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு தெளிவில்லை என்பதை தாழ்மையோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

கதாபாத்திரமேற்று நடித்தவர்களின் விபரமும் அவர்களின் Facebook Profile பெயரும்.
மன்னன்---------------மணி முடி மகாராஜா---------------Ratheesh Shreeni
முதலமைச்சர்--------மலை முழுங்கி மகாதேவன்------Sujeevan Wijai
புலவர்-1---------------விஜய் முத்துப்பாண்டி--------------Mithoon N-Cage (அட நான் தாங்க)
புலவர்-2--------------அஜித் அருணாசல தேவர்-----------Hariharan Anandarajah
அமைச்சர்-1-----------குடுமித்தேவர்------------------------Kaushigan Kaushi
அமைச்சர்-2-----------வெள்ளைத்தேவர்(தூங்குபவர்)----kawshick Prasanna
காவலனின் மகன்----பெயர் இல்லை-----------------------Selvarajah Nitharshan
முதலமைச்சரின் மகன்---பெயர் இல்லை------------------Kisho Kumar
உளவாளி-1-------------கருத்து கந்தசாமி-------------------Maiuran Ncage
உளவாளி-2-------------நொண்டி லொடுக்கு பாண்டி------Thushanthan Ncage
காவலன்----------------நொண்டி குப்பம் வவ்வாலு--------Prince Viki
இன்னும் நிறைய பேர் நடிச்சாங்க சத்தியமா நினைவுக்கு வரல......

பின்னணி இசை,இயக்கம்------------------------------------Shan Dhanu.
மீண்டும் என் மற்றொரு இனிய அனுபவத்தோடு சந்திப்போம்-இவன்--Mithoon.J

3 comments: