Saturday, December 13, 2014

சூரியன் எப்.எம் வழங்கும் உதவும் கரங்கள் - ஓர் பார்வை


சூரியன் எப்.எம் தொடர்ந்து பல வருடங்களாக வருட இறுதியில் டிசம்பர் மாதத்தில் நத்தார் சமயத்தில் ஏழை எளியவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும், அநாதரவாக கைவிடப்பட்டவர்களுக்கும் உதவும் நோக்கோடு முன்னெடுத்து வரும் அற்புதமான உதவித்திட்டமே இந்த உதவும் கரங்கள் ஆகும்

இந்நிகழ்ச்சித்திட்டமானது அரசியலுக்கு அப்பாற்பட்டு உண்மையான பரிவாலும் , பாசத்தாலும் , அவர்களுக்கு உதவும் நோக்கோடு கருணையும் கரிசனையும் கொண்டு நடாத்தப்படுவதால் பலராலும் பாரட்டப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது,

இம்முறை இவர்களின் உதவும் கரங்கள் மலையகத்தை நோக்கி திரும்பியுள்ளமை ஓர் விசேடமான அம்சமாகும்,

ஆம், கடந்த சில மாதங்களுக்கு முன் பாரிய மண்சரிவால் தம் உற்றாரையும் உறவினரையும் இழந்து பொருட்களையும் உடமைகளையும் இழந்து தவிக்கும் சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைக்களுக்கு உதவும் முகமாக சூரியன் எப்.எம் தன் தீர்மானத்தை திசை திருப்பியுள்ளமை பாராட்டத்தக்க விடயமாகும்

சூரியன் எப்.எம் இன் தரமான நிகழ்சிகளிலும், பிரத்தியேகமாகவும் இந்நிகழ்ச்சி தொடர்பில் கூறி உதவி கோரும் போதும், அச் சிறுவர்கள் தம் பிஞ்சுக் குரல் கொண்டு தமக்கு தேவையானவற்றை சொல்லும் போதும், மனதில் ஒருவித நெருடல் உண்டாவது மறுக்க முடியாத உண்மையாகிறது,

மேலும் இத்திட்டதிற்கு வருடா வருடம் தம் அளப்பரிய ஆதரவினை அளித்து வரும் இலங்கை வாழ் , வெளிநாட்டு வாழ் , தமிழர்கள் , மற்றும் ஏனையவர்கள் பாராட்டுதலுக்குரியவர்களே,

பாதிக்கப்பட்ட மக்கள் , மக்கள் பிரதிநிதிகள் சார்பில் சூரியன் எப்.எம் இன் இந்த நிகரில்லா முயற்சி என்றென்றும் வெற்றி பெற வேண்டும் என்ற அவா கொண்டு மலையகத்தை சேர்ந்த ஓர் தமிழனாய் நன்றிகளை தெரிவித்துக்கொண்டு விடைபெறுகின்றேன்

இவன்
Mithoon.J

Sunday, September 21, 2014

ஆட்டம் ,,, ஓர் அலசல்


குருநாகல் மாநகர வீதிகளின் வாகன நெரிசல் என்பது இன்றைய நாட்களின் தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது,,அளவுக்கு அதிகமாகவே வாகனங்களின் நடமாட்டம் அந்நகர சாலைகளை ஆக்கிரமிக்க துவங்கி வெகுநாட்களாகிவிட்டன, வழமை போலவே அன்றும் அதிக பட்ச வாகன நெரிசலில் சிக்கி செய்வதறியாது முழித்துக்கொண்டிருந்தேன்.

"வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா முகம் நனைக்கும்" - இசைஞானி பாடல்  காதுகளில் மெதுவாய் மெருகேற்ற, பாதையின் மறுமுனையில் நடந்து சென்ற இரண்டு நபர்கள் என் கண்ணில் பட்டனர்,

இது....இவர்களை நான் எங்கேயோ...ஆங்...இது அவர்களே தான்,,, சென்ற வாரம் என் நண்பன் கோகுலனின் குறும்படத்தில் நடிதிருந்த கோகுலனின் நண்பர்கள் தான் இவர்கள்!!!

இதற்கு முன் அறிமுகமில்லாத இரண்டு பேரை பார்ததும் அடயாளம் கண்டு கொள்ள வைத்த அந்த குறும்படம்,,,,,,,



ஆட்டம்,,எனக்கு தெரிந்து இது கோகுலனின் மூன்றாவது குறும்படமாக இருக்க வேண்டும், இதற்கு முன் ராதாவின் காதல், ஸ்விட்ச் என இரு வேறுபட்ட கதைக்களங்களை மையமாக கொண்டு இரு குறும்படங்கள் வெளிவந்திருக்கின்றன,,

ஆட்டம் - ராகுல்,ஷிவா,சுருளி,ஏகா,கவிதா(தொலைபேசி வாயிலாக) கிங் பின் ஆகிய பாத்திரங்களை மையமாக கொண்டு நகர ஆரம்பிக்கின்றது கதை, ராகுல் - சிலபல வருடங்களாக தன் தகுதிக்கேற்ற வேலை தேடி கிடைக்காமல் ஆறு வருடங்களுக்கு பிறகு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கவும் வீசா மற்றும் கடவுச்சீட்டை பர்ஸில் வைத்து தொலைபேசியில்  தன் நண்பி/காதலியுடன் கதைத்தபடி பஸ்ஸில் ஏறுகின்றான்,, இறங்கும் போது பர்ஸ் மிஸ்ஸிங்!!!

பதட்டத்தின் உச்சியில் ராகுல் நண்பன் ஷிவா விற்கு தகவல் அளித்து வழமையாக சந்திக்கும் இடத்திற்கு வர சொல்லி, ஷிவா வும் அவ்விடம் வர கதை அதன் பிறகு சற்று வேகமாகவே நகர ஆரம்பிக்கிறது ஆட்டம்...

ராகுலின் பர்ஸ் மீண்டும் கிடைத்ததா/? என்ன ஆனது என்பதை நான் கிறுக்கி தெரிந்து கொள்வதை விட நீங்களே பார்த்து ரசிப்பது அதி உத்தமம்,

படத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத லாஜிக் குகள்\ இருக்கத்தான் செய்கின்றன,, அதில் கிங் பின் எதற்காக ராகுலின் பாஸ்போர்ட், வீசாவை ஆட்டயப்போடனும்? ஏகா விற்கும் கிங் பின் இற்கும் இடையிலான சம்பந்தம்??
இது போல நிறைய இருக்கின்றன,,இவை அனைத்தும் கோகுலனின் அடுத்த குறும்படத்தை இன்னும் கூர்மயாக்கும் கேள்விகளாக இருக்கும் என நம்புகின்றேன்,

கோகுலனை தவிர ஏனையவர்களுக்கு இது முதல் படம் என நினைக்கின்றேன்,எதிர்வரும் காலங்களில் அவர்களின் நடிப்பில் தேர்ச்சி அதிகமிருக்கும் என நினைக்கின்றேன்,,

கிளைமாக்ஸ் டுவிஸ்ட் சூப்பர் டூப்பர் ரகம்,, ஏகாவிடம் ராகுல் எதிர்ப்பார்க்கா நேரம் துப்பாக்கியை நீட்டுவதும்,அந்த துப்பாக்கி ராகுலின் கையில் எப்படி வந்தது என்பதற்க்கு சிறிய பிளாஷ்பேக், என்பன இலங்கை வாழ் மலையக தமிழர்களின் தரமான சிந்தனைக்கு ஓர் எடுத்துக்காட்டு,,

இனிவரும் காலங்களில் கோகுலன் கூட்டணியின் தரமான குறும்படங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் சாதாரண பாமர ரசிகனாய் விடைப்பெறுகின்றேன்,,

இவன்
J.Mithoon  

Tuesday, April 15, 2014

இளைஞர்களே..சற்றே சிந்தியுங்கள்.

மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு எழுதுகின்றேன்,இவ்வளவு நாளும் நான் வேலை பார்த்த நிறுவனத்தின் அதிக வேலைப்பழுவும் அதன் பாதிப்பும் தான் என்னை எழுதவிடாமல் தடுத்த முதல் காரணம் என நான் நினைக்கின்றேன்.
இன்றும் கூட என்னை எழுதத் தூண்டியது ஒரு தற்கொலை சம்பவம் தான்.
சமீபத்தில் யாழ்ப்பாணம் செல்ல வேண்டிய ஓர் சூழ்நிலை எற்பட்டது,ஈழத்தமிழ் மண்ணில் என் பார்வைக்கு எட்டிய ஒரு பதாகை என்னை அதிக நேரம் யோசிக்கவைத்தது.

நிரூபன் நவரத்னம்..பெற்றோர்களால் தோழுக்கு மேல் வளர்த்துவிடப்பட்ட ஓர் அப்பாவி,அவசர புத்திக்கார ஈழத்தமிழ் இளைஞன்..தான் காதலியால் கழட்டிவிடப்பட்டதாக கூறி 2014/03/30ம் திகதி முகநூலில் தன் காதல் கதையை எழுதித்தள்ளிவிட்டு முன்னாள் காதலி எனும் பெயரில் குறிப்பிட்ட பெண் தொடர்புடைய 188 புகைப்படங்களை தரவேற்றம் செய்துவிட்டு மறுநாள் காலை உயிர்துறந்த சம்பவம் யாழ் மண்ணயே சற்று உலுக்கித்தான் போட்டது.

பிறர் சொந்தக்கதையை வர்ணிப்பதோ,அதைப்பற்றி குறிப்பிடுவதோ,என் நோக்கமல்ல அதற்க்கான உரிமையும் என்னிடம் இல்லை.ஆனால் இன்றைய இளைஞர்கள் இத்தகைய முடிவை நோக்கி செல்வதால் பாதிக்கப்படுவது சக சமுதாயமே எனும் அக்கறை தன் என்னை யோசிக்கவைக்கின்றது,

இவ்வளவும் செய்த பின் குறிப்பிட்ட இளைஞனின் கதி என்ன?? அதையும் விட அவன்,அவள்,குடும்பங்களின் நிலை தான் என்ன??..கேள்விக்கணைகள் துரத்திக்கொண்டு தான் இருக்கின்றன,

இலங்கை வாழ் தமிழ் இளைஞர்களே,சற்றே நிதானித்து,சிந்தித்து முடிவெடுங்கள்.

நாளை உலகம் நாம் கையில்,
அன்புடன்
Mithoon.J