Wednesday, November 14, 2012

Thuppakki-2012 துப்பாக்கி


வழமையாக தீபாவளி தினத்தன்று காலையில் எழுந்து குளித்து புத்தாடை அணிந்து கோவிலுக்கு சென்று மனதார கடவுளை வேண்டி வீட்டிற்கு திரும்பி வந்து அம்மா செய்து வைத்த பலகாரங்களை ஒரு வெட்டு வெட்டி விட்டு அப்படியே டீ.வி ய போட்டு முன்னால உள்ள நாற்காலில சாஞ்சா டீ.வி ல ரெண்டு மாசத்துக்கு முன்னால ரிலீஸ் ஆன மொக்க படத்த ஓட்டிட்டு இருப்பானுங்க...வேற வழியே இல்லாம அந்த படத்த பாத்துட்டிருந்தா பாதி படம் போயிட்டிருக்கும் போதே கறி குழம்பு,நாட்டுக்கோழி உடன் பகல் உணவு..பகல் உணவு முடிந்ததும் கொஞ்ச நேரம் குட்டி தூக்கம்..எழுந்ததும் சன் டீ.வி யில் மாலை ஆறு மணிக்கு சூப்பர் இவ்னிங் ஷோ..அதுவும் முடிந்த உடன் இரவு உணவை முடித்து விட்டு மீண்டும் தூக்கம்...

இதாங்க என்ன பொறுத்தவரைக்கும் தீபாவளி...அனால் இந்த வருடம் வழமைக்கு மாறாக ஒரு விசேஷம் நடந்துச்சு..அது இளைய தளபதி விஜய் நடித்து நேற்றைய தினம் வெளிவந்த துப்பாக்கி திரைப்படத்தை முதல் நாளே தியேட்டரில் சென்று பார்த்தது தான்.

இனி படத்தை பற்றி பார்க்கலாம்..

துப்பாக்கி படத்தின் ஒன்லைன்
மும்பை நகரில் வசிக்கும் ராணுவ வீரன்,DI ஏஜென்ட் ஆக வரும் தமிழன் விஜய் மும்பை நகரை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கும் தீவிரவாத குழுவின் திட்டங்களை முறியடிக்க முயற்சிப்பது தான் படத்தின் ஒன்லைன்.


துப்பாக்கி படத்தின் கதை
இந்திய ராணுவத்தில் கடமையாற்றும் துடிப்பான மும்பை தமிழன் விஜய் தன் விடுமுறைக்காக வீடு நோக்கி வருகிறார்..விஜய் விடுமுறையில் இருக்கும் காலகட்டத்தில் நடந்தேறுகிறது மும்பை தொடர் குண்டுவெடிப்புகள்..விஜய் பஸ் சில் இருக்கும் பயணிகளை பரிசோதிக்கும் போது யதேட்சையாக விஜயின் பிடியில் சிக்குகின்றான் குற்றவாளி..இதன் பிறகு என்ன நடக்கிறது,விஜய் தீவரவாத கும்பலை கண்டுபிடிக்கின்றாரா?தொடர் குண்டுவெடிப்புகளுக்கு என்ன ஆனது?என்பதை நான் சொல்வதை விட நீங்கள் வெண்திரையில் பார்ப்பதே உகந்தது..

படக்குழுவினர் விவரம்
Directed byA. R. Murugadoss
Produced byKalaipuli S. Dhanu
Written byA. R. Murugadoss
StarringVijay
Kajal Aggarwal
Jayaram
Vidyut Jamwal
Sathyan
Music byHarris Jayaraj
CinematographySantosh Sivan
Editing byA. Sreekar Prasad
StudioKalaipuli Films International
Distributed byGemini Film Circuit
SVR Media 
Release date(s)
  • 13 November 2012
Running time165 minutes
CountryIndia
LanguageTamil
BudgetINR70 crore

துப்பாக்கி படத்தின் ட்ரைலர்


வழமைக்கு மாறாக இந்த வருட தீபாவளி எனக்கு எப்படி மாறுபட்டதாக இருந்ததோ...அதே போல் இதுவரை நாளும் இல்லாதது போல் முற்றிலும் மாறுபட்ட விதத்தில் வெளியாகியிருக்கிறது துப்பாக்கி..

துப்பாக்கி அமோக வெற்றி பெற மனதார வாழ்த்தி இப்பதிவை முடித்துக்கொள்கிறேன்...

நன்றி..
Mithoon.J

Monday, November 12, 2012

இனிய எண்ணங்களுடன் தீபாவளி

 கண் மூடி திருக்கும் முன் நாட்களும்,வாரங்களும்,மாதங்களும் மிக வேகமாக கரைபுரண்டோடிக்கொண்டிருக்கிறது...நேற்றைய தினம் வேளை முடிய இன்று தீபத்திருநாள் அன்று விடுமுறை என்பதால் வீடு நோக்கி பயணப்படும் போது வண்டியில் துப்பாக்கி பாடல்கள் ஒரு பக்கம் ஓட வண்டியின் சுக்கானம் இன்னொரு பக்கம் திரும்ப என் நினைவுகள் வேறொரு பக்கம் ஓடிக்கொண்டிருந்தன

முன்னல்லாம் தீபாவளி ன்னா ஒரே கூட்டமும் கொண்டாட்டமும் தான் நினைவுக்கு வரும்..கல்லூரியின் குறிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே விடுகை மணி ஒலிக்க அந்த நொடியில் இருந்து ஆரம்பிக்கும் கல்லூரிக்கால தீபாவளி...தோழிகளும் தோழர்களும் கை குலுக்கி வாழ்த்து சொல்லி தத்தம் வீடு நோக்கி செல்லும் அந்த தருணம் ஏதோ ஒரு மாத கால விடுமுறைக்கு பாடசாலை மூடப்படும் பரவசத்தை நம்மிடையே கொண்டு வந்து சேர்க்கும்...

அப்படி ஒரு நாள் பன்னிரண்டு மணியளவில் பாடசாலை விட நண்பர் கூட்டத்தோடு கலந்தாலோசித்ததில் பகல் உணவுக்கு பின் மைதானத்தில் கிரிக்கட் விளையாட ஒன்று சேர்வதாக பேச்சு..வீட்டிற்கு சென்று அவசர அவசரமாக சாப்பாட்டை முடித்து விட்டு மைதானத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தன கால்கள்..

விளையாட ஆரம்பித்து ஒன்றரை மணித்தியாலத்திற்கு மேல் நேரம் ஓட அந்த நேரத்தில் நடந்தது ஒரு அசம்பாவிதம்..

திடீரென என் நண்பன் ஒருவன் தன் பெறுமதியான கைத்தொலைபேசியை காணவில்லை என்று ஆரம்பிக்க அந்த நொடியில் ஆரம்பித்தது கலவரம்..அதற்கு பிறகு நீண்ட நேரம் தொலைபேசியை தேடியும் எந்த பயனும்  கிட்டவில்லை..அங்கிருந்த பாதி பேருக்கு அந்த தொலைபேசிக்கு என்ன ஆனது அது யார் கைக்கு சென்றது என்பது தெரியும்..தொலைபேசியை தொலைத்தவனுக்கு கூட...இருந்தாலும் சரியாக நிரூபிக்க முடியாததால் அதை அப்படியே விட்டுவிட வேண்டிய நிர்ப்பந்தம் எங்களுக்கு...இதில் பெரிய கூத்து என்னவென்றால் நாங்கள் சந்தேகப்பட்ட அந்த குறிப்பிட்ட நபரே இரண்டு,மூன்று நாட்களுக்கு பிறகு தொலைபேசியை பறிகொடுத்தவனிடம் வந்து "மச்சான் phone ku charger ம் headset ம் இருக்கா"னு கேட்டது தான்....

தொலைபேசி தொலைந்து போன இடம் 


அந்த தீபாவளி அந்த சம்பவத்துடனே சுவாரசியமாக கடந்து செல்ல,,சென்ற வருடத்திற்கு முதல் வருடம் இன்னுமொரு சம்பவம் நடந்தது..அதை நான் சொல்வதை விட என் நண்பன் அருண் தன் வலைப்பூவான "குறிப்புகள் சில"வில் மிக தெளிவாக சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்...

அதை பின்வரும் தலைப்பை கிளிக்குவதன் மூலம் எம் அனுபவத்தை நீங்களும் கொள்ளலாம்...

"தீபாவளி பல்பு"

இப்படி பல அனுபவங்கள் என்னுள்ளே புதைந்து கிடக்கின்றன...வலை எழுத ஆரம்பித்த ஆரம்ப காலங்களில் தொடர்ந்து எழுத வாய்ப்பு கூடி வந்தன..காலப்போக்கில் நேரமும் வேலையும் ஒத்துழைக்காத காரணத்தால் வலை எழுதும் வாய்ப்பும் குறைந்தே போய் விட்டது...எனினும் இனி வரும் காலங்களிலாவது வாரத்திற்கு ஒரு தடவையாவது எழுத நேரம் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்திப்பதுடன் தற்காலிகமாக விடைப்பெருகிறேன்...

நன்றி-Mithoon.J


Thursday, March 29, 2012

ஆவி அனுபவம்

இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு மாத காலத்துக்கு மேல் ஆகி விட்டது...ஆனால் நடந்தது என்ன என்பது மட்டும் இன்னும் எனக்கு சரியாக புரிந்த பாடில்லை

ஒரு வருட காலமாக அந்த குறிப்பிட்ட காட்டு வழிப்பாதையை குறுக்கு வழியாக (short cut) பயன்படுத்திக்கொண்டிருந்தேன். பேருக்கு தான் குறுக்கு வழி...ஆனால் அந்த காட்டு வழிப்பாதயினூடாக கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் பிரயாணிக்க வேண்டும்..

அன்று வத்துபிட்டிவல எனும் நகரில் வேளை..முடிய 06.30 போல் ஆகிவிட்டது..இறுதி வைத்தியரை பார்த்துவிட்டு அந்த வழியாக பிரயாணத்தை ஆரம்பித்தேன்

அந்த காட்டு வழிப்பாதையை முழுமையாக கடந்து முடிக்கும் வரை லேசாக மழை தூரிக்கொண்டே இருந்தது.....ஒரு 50 நிமிட பயணத்திற்கு பின் "கரவனெள்ள"எனும் இடத்தை வந்தடைந்தேன்...இருட்டில் அந்த காடுப்பதையில் வந்தது களைப்பாக இருந்தபடியால் அங்கிருந்த ஓர் தேநீர் கடைக்கருகில் வண்டியை நிறுத்திவிட்டு தேநீர் அருந்தி களைப்பாற்ற இறங்கிச் சென்றேன்...

தேநீர் அருந்திவிட்டு அந்த கடையிலேயே முகத்தை கழுவி விட்டு மீண்டும் வண்டியில் ஏறி பயணத்தை ஆரம்பித்தேன்...

சரியாக 7km வந்திருப்பேன்...திடீரென ஒரு பெண்ணுருவம் வண்டிக்கு முன்னாள் விழுந்தது போல ஏதோ நடந்தது..அந்த நிமிடம் திடுக்கிட்டேன்...அப்போது தான் ஒரு உண்மை எனக்கு புரிந்தது...

அந்த நிமிடம் நான் நின்றுகொண்டிருந்த இடம் நான் ஏற்கனவே தாண்டி வந்த காட்டு வழிப்பாதை.....ஆனால் நான் தேநீர் அருந்திய இடத்தில இருந்து மறுபக்கம் செல்லாமல் மீண்டும் இந்த இடத்திற்கு எப்படி வந்தேன் என்பது இந்த நொடி வரை எனக்கு புரியாத புதிர் தான்.....

அதன் பிறகு மீண்டும் அந்த இடத்திலிருந்து வீடு வந்து சேரும் வரை நான் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை...



இது உண்மையாகவே ஆவிகளின் களியாட்டம் தானா???இல்லை அன்று காலை வேளையில் இருந்து தொடர்ந்து வேளை செய்த களைப்பினால் ஏற்பட்ட டிப்ரஷனா அட அதாங்க மனப்"பிராந்தி"யா!!! னு இன்னும் கூட என்னால் யூகித்துகொள்ள முடியவில்லை...

இந்த விஷயம் சம்பந்தமா நெருங்கிய நண்பர்கள் கிட்டேயே நான் ஏதும் பேசிக்கொள்ள வில்லை காரணம் அந்த சம்பவத்தை மீண்டும் மீண்டும் என்னால் நினைத்து பார்க்கும் போதே ஏதோ போல இருக்கும்...

பின்ன எப்புடி வலை ல பதிவா எழுத தைரியம் வந்துச்சு னு பாக்குறீங்களா???
நேற்றைய தினம் அதே வத்துபிடிவல நகரில் இருந்து அதே காட்டு வழியாக இரவு எட்டு மணியளவில் தனியாக வந்தேன்...தெய்வாதீனமாக அன்று நடந்தது போல் எதுவுமே நடக்கவில்லை...அந்த தைரியத்தில் தான் எழுதிக்கொண்டிருக்கின்றேன்...

அன்று நடந்தது போல் இன்னொரு தடவை இனிமேல் நடந்துவிடாது இருக்கும் படி இறைவனை பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறான பாதைகளில் இரவு நேர பயணங்களை இயலுமான அளவு குறைத்துகொல்லுமாறு வேண்டுகோள் விடுத்து விடைப்பெறுகிறேன்.....

இப்படிக்கு-Mithoon Jeyaraj.


Sunday, March 4, 2012

எத பத்தி பேசலாம் பாஸ்???

முற்பட்ட நாகரிகத்திற்கும் பிற்பட்ட நாகரிகத்திற்கும் அப்படி என்ன தான் பெருசா வித்தியாசம் இருந்திட போகுது ன்னு யோசிச்சுட்டிருந்த போது தான் மனசில பல விஷயங்கள் ஓட ஆரம்பிச்சுது....அது மனசுக்குள்ள ஓடி என்ன ஆஸ்கர் அவார்ட் ஆ வாங்கபோகுது??? அத விட்டுறலாம்...உலக நடப்பு எத பத்தியாவது கதைக்கலாம் ன்னா இப்ப பீக் ல இருக்கது "CB"கிண்ண முக்கோண தொடர் தான்...ஆனா அதா பத்தி கதைச்சா இங்க பல நண்பர்களுக்கு அனாவசியமா கோவம் வரும்...அதனாலேயே வேறு எதபத்தியாவது கதைக்கலாம்...

ஆங்....ஜெனிவா மனித உரிமை மாநாடு பத்தி பேசலாமா???ஐயோ வேணாம் கடந்த திங்கட்கிழமை வேளை நிமித்தமாக மாத்தளை நகருக்கு சென்றிருந்தேன்...அங்க இந்த ஜெனிவா மாநாடு சம்பந்தமா ஏதோ போராட்டம் நடந்துட்டிருந்துச்சு,,,அந்த வேகாத வெயில் ல கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலமா ட்ராபிக்.....இந்த மாநாடு என்ன அந்த வெயில் ல படுத்தின பாடே போதும்...அதனால வேறு எதாவது சம்பந்தமா பேசலாம்!!


சச்சின் 100வது சதம் பத்தி பேசலாம் ன்னு பாத்தா அது என்னவோ தண்டவாளம் போல நீண்டுகிட்டே போகுது..தண்டவாளம் கூட ஏதோ ஒரு இடத்துல முடிய தான் போகுது.....பாக்கலாம்...அனால் ஒரு விஷியம்.....சச்சின் அடிக்கபோற அந்த 100 வது சதம் சாதாரணமா இருக்காது...அது அவர் கிரிக்க்கட் வாழ்க்கைக்கு கிரிக்கட் உலகம் சூடப்போகும் தங்க மகுடம்....ஒரு மைல்கல்....இப்புடி பல விஷியங்கள சொல்லிகிட்டே போகலாம்..இத பத்தி கதைச்சா கூட சில பேரின் வயித்துல புளிய கரைச்சு ஊத்தின மாதிரியே இருக்கும்..அதனால இதுவும் வேணாம்...


ஒரு சூப்பர் மேட்டர் இருக்கு....ஒரு மாசத்துக்கு முன்னால அட்டகாசமா ஒரு விஷயம் நடந்துச்சு...கண்டி மாநகரத்துல இரவு ஒரு 7.15 போல இருந்திருக்கும்...வேளை எல்லாம் முடிச்சுட்டு வண்டிய எடுத்துட்டு வீடு நோக்கி கிளம்பினேன்..ஒரு அஞ்சு நிமிஷம் தான் போயிருக்கும்..படுபாவி அந்த ட்ராபிக் போலீஸ் என்னை முடக்கினார்...எதுக்குன்னு புரியாம நானும் வண்டிய நிறுத்திட்டு இறங்கினேன்...அந்த மனுஷன் என்னன்னா புதுசா ஒரு குத்தத்த சொல்லி என் அனுமதிப்பத்திரத்தை வங்கி தன்னிடம் வைத்துக்கொண்டார்..இதுல என்ன விஷயம் னா அடுத்த நாளோ இல்ல ஒரு 2,3 நாளுக்குள்ளவோ நான் என் அனுமதி பத்திரத்தை மீட்க அந்த போலீஸ் நிலையத்துக்கு போயிருந்தா ஒரு பிரச்சனையும் இருந்திருக்காது...அனால் நான் எனக்கு அந்த தண்டப்பணம் எழுதி 13 வது நாள் தான் மீட்க போனேன்...பாவிப்பயலுக அதுக்குள்ள இந்த சாதாரண விஷயத்துக்கு என் பேர்ல வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றத்துக்கு போய் தான் அனுமதிபத்திரத்தை மீட்கனும் என்னும் நிலைமைக்கு ஆளாக்கிட்டானுங்க...

நீதிமன்றதுல தான் நல்ல நல்ல கூத்துக்கள் எல்லாம் அரங்கேருச்சு!!!!!
ஒரு போலீஸ்கார்!!! க்கு நீதிபதி விட்டு விளாசு விளாசு ன்னு விலாசிட்டார்...பாவம் போலீஸ் காரர்களின் நிலை இந்தளவுல தான் இருக்குன்னு அன்னைக்கு தான் எனக்கு தெரிஞ்சுது ...போலீஸ் காரவுகளாவது பரவாயில்ல..நம்ம வக்கீல் கள் இருக்காங்களே..அவங்க நிலைமை இத விட கஷ்டமா இருக்கு..காலங்காத்தால நீதிமன்றத்துக்கு வரும் ஒவ்வொருவரையும் பிடிச்சு உங்களுக்காக நான் வாதாடுறேன் ன்னு கேட்டு கேட்டு களைச்சு போயிருந்தாங்க...

என் பெயர் வாசிக்கப்பட்டது...குற்றவாளி கூண்டில் ஏறி நின்றேன்..நீதிபதி குற்றத்தை சொல்லி "WERADHIKARUDHA NIWERADHIKARUDHA" அதான் சிங்கள மொழியில் நீர் குற்றவாளியா சுத்தவாளியா னு கேட்டார்...நான் குற்றத்தை ஒப்புக்கொண்டதும் 2000 ரூபா தண்டப்பணத்தை கட்டிய பிறகு விடுவிக்கப்படுவார் ன்னு தீர்ப்பளித்தார்..

இதுக்கு பிறகு என்ன நடந்துச்சு ன்னு நான் சொல்லியா தெரியணும்???என்ன அங்க இருந்த மினி ஜெயிலுக்குள்ள அடைச்சுட்டாங்க..என்னுடன் வந்த நண்பன் 2000 ரூபா தண்டபணத்தை கட்டி ரசீதை கொண்டு வந்து அங்கே இருந்த கணக்காளரிடம் சமர்ப்பித்ததும் அவர் என்னை விடுவித்தார்...அந்த கூண்டுக்குள் என்னுடன் தனியார் பேருந்து சாரதிகளும்,முச்சக்கர வண்டி சாரதிகலுமே அதிகமாக இருந்தனர்..

எல்லாம் சரி அப்புடி என்ன தான் குற்றம் புரிந்திருப்பான் னு யோசிக்குரீங்களா....மாநகர எல்லைக்குள் "HEAD LIGHT" பாவித்தமையே நான் செய்த அந்த குற்றம்...எனவே இதன் மூலம் நான் வாகன சாரதிகளுக்கு கூற விரும்புவது என்னவென்றால் தயவு செய்து நம்ம ட்ராபிக் போலீஸ் காரர்கள் நிற்கும் இடத்திலாவது கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொண்டு சம்பாதிக்கும் பணத்தை மிச்சம் பிடுச்சு கொள்ளுங்க என்பது தான்....

அப்பாடா ஒரு வழியா ஒரு மேட்டர் பற்றி கொஞ்சம் பேசியாச்சு..பேசினது மட்டுமில்லாது கடைசியா ஒரு கருத்தையும் சொல்லியாச்சு.....

வேறு எதைப்பத்தி பேசலாம்???இல்ல வேணாம்..இப்போதைக்கு என் எழுத்துக்கு சின்னதா ஒரு இடைவேளை குடுத்துடலாம்....

அடுத்த பதிவில் சந்திக்கலாம் நண்பர்களே...
Mithoon Jeyaraj...

Saturday, January 7, 2012

நண்பன் பாடல் இல்ல இல்ல நம்ம சச்சின் சதம் அட அதுவும் இல்லீங்க எஸ்.டி.ஆர் இன் ஒஸ்தி........

அத்தனை மொழியிலும் வார்த்தை ஒவ்வொன்று கொய்தேன்....மொத்தமாய் கோர்த்து தான் காதல் சென்டொன்று செய்தேன்,,,,,என மென்மையாக ஊரெங்கிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது நண்பன் திரைப்பட பாடல்......


இது ஒருபுறமிருக்க கஜினி முகமது போல் பல முறை முயற்சி செய்து கொண்டிருக்கிறார் நம்ம சச்சின்....கிட்டத்தட்ட பதினொரு மாதங்களாக தனது சதத்தின் சதத்தை எட்ட பாடை படுகிறார் மனுஷன்...ஒவ்வொரு முறையும் என்பது,எழுபதுகளிலும் ஒரு முறை தொண்ணூற்று மூன்றிலும் ஆட்டமிழந்தது என் போன்ற இந்திய ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றம்...இதில் வருத்தம் தரக்கூடிய விடயம் என்னவென்றால் சச்சின் ஆட்டமிழந்ததை மிகுந்த சந்தோஷத்துடனும்,உற்சாகத்துடனும் முதலில் நாட்டுக்கே அறிவிப்பது இலங்கையின் அதிக அளவு ரசிகர்களை கொண்டுள்ள முதற்தர வானொலியின் பிரசித்தம் பெற்ற அந்த பெண் அறிவிப்பாளர் மறுமுனையில் தென் ஆபிரிக்காவிடம் நாம் வாங்கிக்கட்டிக்கொள்வதை மறந்து விடுவது தான்..

இதையெல்லாம் மீறி சச்சின் சம்பந்தப்பட்ட ஒரு படத்தை பார்த்து சிரித்தேன்...உலகளாவிய ரீதியில் மிக பிரசித்தம் பெற்ற சமூக வலைத்தளமான பேஸ்புக் இல் இது பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது...


என்னடா நண்பன் பாடல் ல தொடங்கி சச்சின் சதத்த பற்றி பேசிட்டிருக்கானே னு தானே பாக்குறீங்க...அது வேற ஒண்டும இல்லீங்க நண்பன் படத்துல குறிப்பா அந்த பாடல் அதுலயும் குறிப்பா...அந்த வரிகள் ரொம்ப பிடிச்சு போச்சா.....அதான் அதுலயே ஆரம்பிச்சுடலாம் னு......

வாழ்க்கை போகிற போக்கு ரொம்பவே சுவாரசியமா இருக்கு,,சராசரியாக பார்த்தால் ஒரு நாளைக்கு ஒன்பதரை மணி நேரம் வேலை....அப்படி ஒரு தொழில் எனக்கு,,ஆனால் ரொம்ப புடிச்சுருக்குங்க......இப்புடி அலைஞ்சி அலைஞ்சி வெள்ளிகிழமை அதாங்க நேத்து வீட்டுக்கு வரும்போது அப்புடியே சிம்பு இல்ல இல்ல எஸ்.டி.ஆர் இன் ஒஸ்தி பாக்கலாம்னு முடிவெடுத்து அதையும் வாங்கிட்டு வந்தேன்....சாப்புட்டு முடிச்ச பிறகு என் வீட்டு தியேட்டரில் ஒஸ்தி ய ஓடவிட்டா.......   


படம் பரவாயில்லை ரகம்,,சிறு வயது சிம்பு மற்றும் ஜீவா கதாபாத்திரங்களுக்கு ஒரு அறிமுகம்,,அதன் பிறகு முரடுக்காளையாக மிரட்டும் போலீஸ் சிம்பு,,சிம்புவின் அறிமுகத்தின் போது பின்னணி இசை சூப்பர்..தமனுக்கு எதிர்காலம் உண்டு,,கதை என்னவோ வேகமாகவே செல்கிறது,,ஆனால் நாயகி பானை செய்பவர் ங்குற லாஜிக் தான் கொஞ்சம் இடிக்குது...

பிரபுதேவா போல் நாயகன் அறிமுக பாடலில் தானும் ஒரு காட்சிக்கு வந்து செல்கிறார் இயக்குனர் தரணி..ஒரு வினாடியாக இருந்தாலும் அந்த ஒரு வினாடியும் "தல" அஜீத் போலவே இருந்தார்...தமிழ் நாட்டு இயக்குனர் மத்தியில் இது இப்போது பிரபல்யம்,,இந்த கலாச்சாரத்துக்கு குருநாதர் யாரு னு தான் உங்க எல்லாத்துக்கும் தெரியுமே..அட ..நம்ம கே.எஸ்.ரவிகுமார் தாங்க..

பாடல் கள் எல்லாம் கேட்க கூடிய ராகம்,,,அனால் கலாசலா சூப்பருங்க,,,,அதுல மல்லிகா வின் குத்தாட்டம்,எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல் ரெண்டும் செமையாக போருந்தியிருக்கின்றன....

மொத்ததுல குடுத்த காசுக்கு கமர்ஷியலா ஒரு படம் காட்டியிருக்கிறார் தரணி,,என்றாலும் தில்,தூள்,கில்லி போல எடுபடவில்லை ஒஸ்தி....

இன்னும் நம்ம சச்சின் போல முயற்சி பண்ணுங்க தரணி சார்.......காத்துட்டிருப்போம்-காத்துட்டுருப்பேன்-Mithoon.J