Tuesday, April 15, 2014

இளைஞர்களே..சற்றே சிந்தியுங்கள்.

மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு எழுதுகின்றேன்,இவ்வளவு நாளும் நான் வேலை பார்த்த நிறுவனத்தின் அதிக வேலைப்பழுவும் அதன் பாதிப்பும் தான் என்னை எழுதவிடாமல் தடுத்த முதல் காரணம் என நான் நினைக்கின்றேன்.
இன்றும் கூட என்னை எழுதத் தூண்டியது ஒரு தற்கொலை சம்பவம் தான்.
சமீபத்தில் யாழ்ப்பாணம் செல்ல வேண்டிய ஓர் சூழ்நிலை எற்பட்டது,ஈழத்தமிழ் மண்ணில் என் பார்வைக்கு எட்டிய ஒரு பதாகை என்னை அதிக நேரம் யோசிக்கவைத்தது.

நிரூபன் நவரத்னம்..பெற்றோர்களால் தோழுக்கு மேல் வளர்த்துவிடப்பட்ட ஓர் அப்பாவி,அவசர புத்திக்கார ஈழத்தமிழ் இளைஞன்..தான் காதலியால் கழட்டிவிடப்பட்டதாக கூறி 2014/03/30ம் திகதி முகநூலில் தன் காதல் கதையை எழுதித்தள்ளிவிட்டு முன்னாள் காதலி எனும் பெயரில் குறிப்பிட்ட பெண் தொடர்புடைய 188 புகைப்படங்களை தரவேற்றம் செய்துவிட்டு மறுநாள் காலை உயிர்துறந்த சம்பவம் யாழ் மண்ணயே சற்று உலுக்கித்தான் போட்டது.

பிறர் சொந்தக்கதையை வர்ணிப்பதோ,அதைப்பற்றி குறிப்பிடுவதோ,என் நோக்கமல்ல அதற்க்கான உரிமையும் என்னிடம் இல்லை.ஆனால் இன்றைய இளைஞர்கள் இத்தகைய முடிவை நோக்கி செல்வதால் பாதிக்கப்படுவது சக சமுதாயமே எனும் அக்கறை தன் என்னை யோசிக்கவைக்கின்றது,

இவ்வளவும் செய்த பின் குறிப்பிட்ட இளைஞனின் கதி என்ன?? அதையும் விட அவன்,அவள்,குடும்பங்களின் நிலை தான் என்ன??..கேள்விக்கணைகள் துரத்திக்கொண்டு தான் இருக்கின்றன,

இலங்கை வாழ் தமிழ் இளைஞர்களே,சற்றே நிதானித்து,சிந்தித்து முடிவெடுங்கள்.

நாளை உலகம் நாம் கையில்,
அன்புடன்
Mithoon.J