Saturday, January 15, 2011

முதலாம் வருட ஒன்று கூடல்-2010

படிப்புக்கும் விடாமுயற்சிக்கும் முதலிடம் கொடுத்து பலவிதமான எதிர்பார்ப்புகளோடும் கனவுகளோடும் உயர்தர கல்விக்காக பாடசாலை சென்ற முதல் நாள்............நேற்று தான் போல உள்ளது ; ஆனால் அது நடந்து 3 வருடங்களும் 4 மாதங்களும் கடந்து 5வது மாதம் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது.

உயர்கல்விக்காக பாடசாலை சென்ற அந்த 23 மாதங்களும் என் வாழ்வின் பொற்காலங்களாக என் மனதில் இன்றும் கூட பதிந்து நிற்கின்றன.

அந்த 23 மாதங்களும் சிறு சிறு காதல்,சண்டை,நட்பு,போட்டி என நான் காணாதது ஒன்றுமே இல்லை எனலாம்.,மனதினுள் நட்பு இருந்தாலும் இரண்டு குழுக்களாக பிரிந்து சண்டை பிடிப்பதும்,எதிரணியை வீழ்த்த சிற்றுண்டிச்சாலை Plan tea யுடன் திட்டம் தீட்டுவதும் என சுவாரஸ்யத்தின் உச்சத்தில் என் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்த கால கட்டம் அது....

ஆசிரியர்களின் பலவகையான கண்டனங்களுக்கும்,அறிவுறைகளுக்கும் ஏன் தண்டனைகளுக்கும் கூட குறைவில்லாமல் இருந்தது.......அதிபரிடம் செய்யாத தவறுகளுக்கு அடிக்கடி வாங்கிக்கட்டிக்கொள்வது என துன்பங்கள் கூட அப்பப்போ எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது.

அந்த 23 மாதங்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடலாக "சந்தோஷ் சுப்ரமணியம்" திரைப்படத்தில் "அடடா அடடா"பாடல் இருந்து வந்தது.அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை.அந்தக் காரணம் கூட எங்கள் நட்பு வட்டம் மேலும் வலுவுற,வளர ஏதோ ஒரு வகையில் சிறிதளவேனும் உதவி புரிந்தது.

இதற்கிடையில் மாதங்கள் வேகமாக புரண்டோட வந்து சேர்ந்தது 2009ம் ஆண்டு ஜூலை மாதம்.இறுதி முன்னோடிப் பரீட்சைகள் முடிவடைந்த பின் நண்பர்களுக்கு பிரியாவிடை அளிக்க ஒரு விழா ஏற்பாடு செய்யலாம் என நண்பி "சரண்யா" IDEA தர ஏற்பாடுகளை செய்வதில் மும்முரமானோம்.....

விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட திகதி ஜூலை 7ம் திகதி காலை 8 மணியளவில் எல்லா நண்பர்களும் ஒன்று கூட விழாவிற்கான உற்சாகம் மெல்ல மெல்ல எங்கள் மத்தியில் வரத்தொடங்கியது.அந்த நேரத்தில் ஒரு முழு கண்ணாடிப்பெட்டி கீழே விழுந்து நோருங்கியதைப் போல் அதிபர் வந்து அனைவரையும் வீட்டிற்கு செல்லுமாறும் விழா நடத்த அனுமதியெல்லாம் வழங்க முடியாது என்றும் கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.....

எதிர்பாராத விதமாக நடந்து இந்த விடயத்தால் மனம் நொறுங்கிப் போனோம் நாங்கள்.அன்று அந்த நொடியில் நொறுக்கப்பட்ட அந்த இதயங்களை மீண்டும் ஒட்ட வைத்தது வகுப்பறை தோழர்களின் கனிந்த பார்வைகளும் பேச்சுக்களுமே....

அன்றைய தினம் பகல் உணவை நாங்கள் 6 நண்பர்கள் ஒன்றாக பகிந்துகொண்டோம்...அந்த நேரத்தில் எப்படியாவது பரீட்சைகள் முடிந்து அடுத்த வருடமாவது Batch Get To Gether ஒன்றை நடத்தியே ஆகவேண்டும் என ஒரு நண்பன் கதையை ஆரம்பிக்க எப்படியாவது அதனை நடத்திவிட வேண்டும் என எங்கள் அனைவருக்குள்ளும் கூட ஏதோ ஒன்று பரவத்தொடங்கியது.

பரீட்சைகள் முடிந்தன......நண்பர்கள் பிரிந்தனர்,4 மாதத்தில் பரீட்சை முடிவுகளும் வந்து சேர்ந்தன...பரீட்சை முடிவுகள் திருப்தி அளிக்கும் வகையில் இருந்தன.நாட்கள் காற்றுடன் கலந்து வேகமாக கரைந்தன.....

ஒவ்வொருவரும் யதேச்சையாக எங்காவது சந்தித்துக்கொண்டால் குசலம் விசாரிக்கும் அளவு இடைவெளி விழுந்து கிடந்தது......Autograph இல் குறித்துக்கொடுத்த பாதி Mobile நம்பர்கள் வேலைசெய்வதில்லை....புதிய நட்புக்கள் நிறைய அறிமுகமானாலும் பல வருட காலமாக இருந்து வந்த நட்பல்லவா பாடசாலை நட்பு.....அவ்வளவு எளிதில் யாராலும் யாரையும் மறந்து முடியவில்லை....

கால சக்கரம் தன் கடைமையை சிறிதும் பிழையின்றி செய்து வந்து கொண்டிருந்தது.....உப்பு சப்பில்லாமல் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்த சமயம் நண்பன் ரம்ஸான் இன் தொலைபேசி எண்ணில் இருந்து வந்து சேர்ந்தது ஒரு குறுந்தகவல்........

sweet school memories:
1.Oneside love's
2.Silent mode mobiles
3.Last bench comedies...
4.intervel plantea
5.escape frm seminars
6.last period galatas
7.B'dy treats
8.Last minute preparetions
9.Over night study for nxt dy xam
10.friend's family functions
11.Internal marks probs
12.Gang fights.....
those days will never come
again...

இந்த குறுந்தகவலை படித்த நேரம் நண்பனின் மனதில் பழைய பாடசாலை நினைவுகள் எல்லாம் ஓடியிருக்கின்றன.....அவன் அதை எனக்கு Forward செய்தான்...நான் இன்னும் பலருக்கு Forward செய்தேன்....

உண்மையை சொல்லப்போனால் இந்த sms எங்களை தவிக்க விட்டது.இழந்ததை திரும்ப பெறமுடியாது என்பது தெரியும்....அதனால் நாம் இழந்த கல்லூரி நாட்களை "கள்ளிக் காட்டு பள்ளிக்கூடம்"போன்ற தொடர்களை பார்த்து ஆசுவாசப்படுத்திகொண்டிருந்தோம்....சரியான நேரத்தில் இந்த sms வந்து சேர Get To Gether ஒன்றை வைத்து அனைவரையும் சந்தித்தே தீர வேண்டும் என நண்பன் ரம்ஸான் தொலைபேசி மூலமாக தகவல் தர...ஆரம்பமாகியது அதற்கான திட்டமிடல்களும் ஏற்பாடுகளும்.

ஒருவர் மூலமாக இன்னொருவரை பிடித்து ஒருவாராக அனைவருக்கும் அழைப்பை விடுத்தாகிற்று....நண்பன் ஒருவனின் வீட்டின் கீழ் மாடி காலியாக தான் இருந்தது...அங்கு ஒன்று கூடலாம் எனவும் தீர்மானமாகிவிட்டது...

நாம் ஏதாவதொன்றை ஆரம்பித்தால் அதற்கு தடைகள் வராமலா இருக்கும்....மரண வடிவில் வந்தது தடை ஒன்று....விழாவிற்கு இரண்டே நாட்கள் இருக்கும் போது ஏற்பாடாயிருந்த வீட்டில் இருக்கும் முதியவர் உயிர் துறந்தார்........

செய்வதறியாது நிகழ்வை cancel செய்துவிடலாம் என கூட யோசித்தோம்....அந்த நேரத்தில் நண்பன் ரம்ஸான் "நிகழ்வை cancel செய்ய தேவையில்ல....வேறு எங்காவது சரி நடத்தி விடலாம் என நம்பிக்கை அளிக்கும் வகையில் சிறிது நேரம் தன் பொறுப்புணர்ச்சியை பொங்கினார்.........

குறிக்கப்பட்ட திகதிக்கு முதல் நாள்,நடத்துவதற்கு இடம் தேடி 3 இடங்களுக்கு செல்வது என தீர்மானித்து முதலாவது இடம் நோக்கி சென்றோம் நானும் நண்பன் ரம்ஸானும்.....சென்ற முதலிடமே ok ஆக மகிழ்ச்சி லேசாக எட்டிப்பார்த்தது நம் மத்தியில்........தொடர்ந்து நடக்க வேண்டிய காரியங்களை கவனித்தோம்....அன்றைய நாள் இனிதே நிறைவுற்றது.....

உதயமானது அந்த நன்நாள்.....நேரம் 10 ஆனது.....ஒவ்வொருவராய் வரத்தொடங்கினர்.....19 பேர் தவிர ஏனைய அனைவரும் அன்றைய தினம் நிகழ்வுக்கு ஆஜராகியிருந்தனர்.

வரத்தவறிய 19 பேரில் இருவர் கடல் கடந்து வாழ்ந்து கொண்டிருந்தனர்...ஏனையவர்கள் வராமைக்கான காரணம் இதுவரைக்கும் எங்களுக்கு தெரியவில்லை....

பழைய கதைகள் கிண்டல்....கேலி க்கு மத்தியில் அன்றைய நாள் கழிந்துகொண்டிருன்தது......

நேரம் செல்லச்செல்ல நாள் முடிகிறதே என்னும் கவலை ஒருபுறம் இருந்தாலும்....பழைய நட்பு மீண்டும் கிடைத்தமை குறித்து மகிழ்ந்து கொண்டிருந்தோம் ஒவ்வொருவரும்......

இன்றே மீண்டும் பிரியப்போகிறோம் என்ற உண்மை தெரிந்திருந்தும் அடுத்த வருடமும் இதேபோல் அனைவரும் சந்திப்போம்.....இப்போதிருப்பதை விட எல்லோரும் நல்ல நிலையில் சந்திப்போம் என்னும் நம்பிக்கை மகிழ்ச்சியளித்தது.

நேரம் 4 ஆக வழங்கப்பட்ட Cofee யுடன் விடைப்பெற்றுக்கொண்டோம் கண்ணீருடன்.....

இப்படிப்பட்ட நட்பு எனும் பந்தத்தை எனக்கு வழங்கிய கடவுளுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளேன் நான்.....

உண்மையை சொல்லப்போனால் அன்று ரம்ஸான் அனுப்பிய அந்த sms தான் மீண்டும் எங்களை சேர வைத்தது.....

அந்த வகையில் ரம்ஸான்.......நீ........."நன்பேண்டா"...........

மீண்டும் ஒரு பதிவில் சந்திக்கும் விடைப்பெறும் நான்-Mithoon.J


6 comments:

  1. நன்றாக உள்ளது நண்பரே !
    செக்ஸ் உறவு மூலம் விண்வெளியில் குழந்தை பெற முடியுமா? நாசா விஞ்ஞானிகள்!
    http://tamilaaran.blogspot.com/2011/01/blog-post_7321.html

    ReplyDelete
  2. wow super....
    god bless you guys.

    ReplyDelete
  3. என் மனதுக்குள் இருந்த ஆசையை தூண்டி விட்டது அந்த sms. அதைவிட மீண்டும் ஒரு முறை நண்பர்கள் அனைவரையும் பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வம்,,,,,,,,,,,,மீண்டும் எப்போது சந்திக்கபோகின்றோம் என்று காத்திருக்கிறேன் அடுத்த ஒன்றுகூடலுக்காக.இன்னும் மறக்க முடியவில்லை அந்த நாளை,கைகளில் சூடான தேநீருடனும்,கண்களில் சூடான கண்ணீருடனும் பிரியும் முன் பேசிய ஒவ்வொரு வார்தைகளும் மனதின் ஆழ்த்தில் பூட்டி வைத்திருக்கிறேன்.இந்த விழாவை நடத்த என்னைவிட மிகவும் நம்பிக்கையோடு இருந்த நண்பன் mithoonக்கு என் மனமார்ந்த நன்றிகள்.machan நீ "நண்பேண்டா"

    ReplyDelete
  4. thnx machan....
    Jeeva அண்ணாவுக்கும் "நிதர்சனன்"அண்ணாவுக்கும் பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றிகள்...

    ReplyDelete
  5. என்றும் நினைவுகளுடன், நான் தனிமையில்..........

    நண்பேன்டா.... மிதுன்!
    எத்தனை சொல்லி ஆரம்பிக்க என்று தெரியவில்லை.... காரணம்... நாம் நட்பு எண்ணில் அடக்க முடியாத அளவிட்க்கு நினைவுகளை சுமந்துள்ளது.

    நான் துபாய்ல எத்தனையோ வகையான ப்ரிஎன்ட்ஸா பாத்துருக்கான் டா! பட் எனனுடைய ஃப்ரென்ட்ஸ் உங்கள போல எவரும் இல்ல டா.....

    please feel following song lyrics

    ReplyDelete
  6. கண்கள் கண்டது கண்கள் கண்டது கானல் நீராய் மாறிடுததே..
    கனவுகள் அடிக்கி கட்டிய கோடை காற்றில் மோதிட கலாய்கின்றதே..

    மரத்தின் கிளைகள் மலர்கள் கண்டேன் வாசம் மட்டும் கணவில்லை..
    நடந்த பாத்தாயில் திரும்பி பார்த்தேன் கலாடி அங்கே கணவில்லை..

    ஒன்றாய் சிரித்த்து அழுத உறவின் விடுகதைகள் புரியவில்லை..

    தோற்றம் திரும்பலாம் தொட்டு நெருங்களாம் நிஜத்தின் காயங்கள் ஆராத்தே
    மாற்றம் நேரலாம் மறந்து சிரிக்கலாம் மனத்தில் பேயும் மழை அடங்காதே

    படித்த நாட்கள் இங்கு பத்திரமாக நடந்த நாடகம் முடிகிறதே
    வாழ்ந்த வாழ்க்கயை திருப்பி தான் வாழ்ந்த நட்பு என் மனத்தில்
    நெகிழ்கிறதேய்..
    அட தொப்புள் கோடியின் உறவை தான் என் ஞாபஹம் அறிந்தது இல்லை
    அந்த துயரம் தீர்த்த நண்பர்களே இந்த நட்புக்கு வானமே எல்லை........!

    ReplyDelete