Tuesday, April 23, 2013

எங்கே போகுது நம் இலங்கை திருநாடு???

வீட்டில் முற்றத்தில் மாலை தேநீருடன் அனைவரும் கதை பேசிக்கொண்டிருந்தோம்.....

அந்த நேரம் அப்பா சொன்ன ஒரு கதை என் மனதை இன்னும் கூடத்தான் நெருடிக்கொண்டிருக்கின்றது....

அது.....மட்டக்களப்பு-செங்கலடி இரட்டை கொலை வழக்கு சம்பவம்.....அப்பா விஷயத்தை தெரிந்து கொண்டது முகப்புத்தகம் மூலமாக...என்று சொன்னதும்...நானும் இணையத்தில் அந்த சம்பவம் தொடர்பான கட்டுரையை தேடி கண்டுபிடித்து படிக்க ஆரம்பித்தேன்...ஒரு பள்ளிப்பருவ காதல் அன்புமிக்க பெற்றோரை ஈவு இரக்கமின்றி எப்படியெல்லாம் பழிதீர்த்துக்கொண்டது என்பதை அந்த கட்டுரையில் தெள்ளத்தெளிவாக வாசித்து அறிந்துகொண்டேன்...
                                           

கொலைக்கு தூண்டுகோலாக செயற்பட்ட மகள் 

இந்த காலத்து மாணவர்கள் காதலுக்காக இந்த அளவு கூட இறங்கி வேலை பார்ப்பார்களா என்பதை நினைக்கும் பொது சற்று வியப்பாகவும் உள்ளது...

                               

கொலையான தாய்,தந்தை

அந்த சம்பவம் தொடர்பான விரிவான கட்டுரையை வாசிக்க இங்க கிளிக்கவும் ...

இந்த சம்பவம் எனக்கு இன்னுமொரு முக்கொலை சம்பவத்தையும் நினைவூட்டியது...அது கொழும்பு-வெள்ளவத்தை முக்கொலை சம்பவம்...

                          
                                            கொலையான தாய்,தந்தை,மகள்
                                                         

அந்த சம்பவம் கூட தன் தகுதிக்கு மீறி கடன் பட்டு சுகபோக வாழ்க்கையை அனுபவித்து விட்டு பின் தன் தந்தைக்கு கிடைத்த ஊழியர் சேமலாப நிதியை குறிவைத்து மேட்கோள்ளப்பட்டது தான்...

                               
கொலையாளி மகன் - ப்ரஷான் குமாரசாமி 

இப்படி பணத்துக்காகவும்,காதலுக்காகவும் பெற்ற தாய்,தந்தையையே  செய்ய துணிந்துவிட்ட இன்றைய சமூகத்தை நினைக்கும் பொழுது என் மனதில் துளிர் விட்ட அந்த கேள்வி தான்...

"எங்கே போகுது நம் இலங்கை திருநாடு???"

இப்படிக்கு - Mithoon.j.


Sunday, March 17, 2013

இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடை!!!!!!

இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை கொண்டுவர இந்திய அரசு சார்பாக கைச்சாத்திட வேண்டி நாளை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் உண்ணாவிரதம்.........சன் டீவி  செய்திகள் கம்பீரமாக ஒழித்துக்கொண்டிருக்க அதை பார்த்துக்கொண்டிருக்கும் இலங்கை தமிழர்களின் மனம் கொந்தளித்துக்கொண்டிருக்கிறது வேறொரு பக்கம்..

தமிழர்களை முற்றாக அழிக்க முட்டாள் தனமான செய்கைகளில் ஈடுபட்டு வரும் சிங்கள கயவர்களின் மேல் உள்ள கோபத்தில் இந்திய தமிழர்களின் இது போன்ற செயற்பாடுகளால் பாதிக்கப்படப்போவது எஞ்சியிருக்கும் தமிழ் மக்களும் நல்ல இதயம் கொண்ட சிங்கள மக்களுமே என்பதை இது போன்ற காரியங்களை செய்ய துணிவதற்கு முன் யாருமே யோசிப்பதில்லை....

மேலும் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத்தடை கொண்டுவரும் பட்சத்தில் இலங்கைக்கான இறக்குமதி ஏற்றுமதி கொடுக்கல் வாங்கல்களை ஏற்கனவே பொருளாதாரத்தடை அமுலில் உள்ள உகாண்டா போன்ற நாடுகளுடன் மாத்திரமே செய்துகொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும் ...

ஏதோ எனக்கு சொல்லனும் னு தோணுச்சு சொல்லிட்டேன்....இனி என்னவெல்லாம் நடக்க போகுதுன்னு பொறுத்திருந்து தான் பார்க்கணும்...