Monday, November 8, 2010

ஹர்பஜன் நிதானம்.......தப்பியது இந்தியா


முதல் இன்னிங்சில் அபாரமான துடுப்பாட்ட திறமைகளை வெளிப்படுத்திய இந்தியா அதே நம்பிக்கையோடு இரண்டாம் இன்னிங்சுக்கும் களமிறங்கியது.ஆனால் இந்தியாவுக்கு காத்திருந்ததோ பேரதிர்ச்சிதான்.முதலாவது ஓவரில் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட கம்பீர் மார்டின் இன் பந்து வீச்சில் ஹோப்கிங்க்ஸ் இடம் பிடிகொடுத்து ஓட்டம் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்தார்.

சரி இந்திய கிரிக்கட் வரலாற்றில் இதெல்லாம் சகஜம் தானே என மனதை தேற்றிக்கொண்டு சேவாக் இன் அதிரடியை பார்க்கலாம் என்றிருந்தபோது இடி போல இறங்கியது அடுத்த அதிர்ச்சி.வழமை போல சேவாக் தன் அவசரம் காரணமாக ஒரே ஒரு ஓட்டத்தை பெற்ற போது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

நம்பிக்கை டிராவிட் பக்கம் திரும்ப அவரும் கையை விரித்தார்.முன்று ஓட்டங்களுக்கு முன்று விக்கட்டுக்களை இழந்த நிலையில் களமிறங்கினார் லக்ஸ்மன்.

இந்திய அணி பதினைந்தாவது ஓட்டத்தை பெற்றிருந்த போது இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் மார்டின் இன் பந்துவீச்சில் நேரடியாக போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழக்க டிரா செய்யும் நம்பிக்கை கூட கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் போனது.

தொடர்ந்து வந்த ரெய்னா வும் எவ்வித ஓட்டங்களையும் பெறாமல் ஆட்டமிழந்ததால் கவுத்துட்டாய்ங்கையா கவுத்துட்டாய்ங்ய என கோரஸ் பாடியது ஆள்மனசு.

நம்பிக்கையே இல்லாமல் பார்த்துக்கொண்டிருந்த போது தோனி கூட வெறும் 22 ஓட்டங்களுடனே ஆட்டமிழக்க இந்தியாவின் தோல்வி மிகத் தேளிவாக கண்ணுக்கு தெரிந்தது.

தொடர்ந்து வந்த ஹர்பஜன் என்ன நினைத்தாரோ ஏது நினைத்தாரோ வழமைக்கு மாறாக நிதானமாக துடுப்பெடுத்தாடினார்.

சாதரணமாக ஆரம்பித்த லக்ஸ்மன்-ஹர்பஜன் இற்கு இடையிலான partnership பிரம்மாண்டமாக உருவெடுத்து 165 ஓட்டங்களாக வந்து நின்றது.228 ஓட்டங்களை பெற்ற வேலையில் லக்ஸ்மன் ஆட்டமிழக்க தொடர்ந்து துடுப்பெடுத்தடினார் ஹர்பஜன்.

தனது கிரிக்கட் வாழ்க்கையில் முதலாவது சதத்தை பூர்த்தி செய்தார்.தான் 115 ஓட்டங்களையும் அணி 260 ஓட்டங்களையும் பெற்றவேலையில் ஆட்டமிழந்தார் ஹர்பஜன்.

266 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது இந்தியா.

294 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்படுத்தாட வந்து நியூசிலாந்து அணியின் முதல் விக்கட் முதலாவது ஓவரிலேயே சாகிர் கான் மூலம் வீழ்த்தப்பட்டது.

22-1 எனும் நிலையில் இருந்த போது போட்டி வெற்றி தோல்வி இன்றிய நிலையில் முடிவுக்கு வந்தது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக முதல் இன்னிங்சில் 69 ஓட்டங்களையும் இரண்டாம் இன்னிங்சில் 115 ஓட்டங்களையும் பெற்ற ஹர்பஜன் சிங் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்திய நியூசிலாந்து அணிகள் பங்கு கொள்ளும் இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஹைதராபாத் இல் இடம்பெற உள்ளது.

No comments:

Post a Comment