Monday, November 15, 2010

ஒதுக்கப்பட்ட மக்களும்,மறுக்கப்பட்ட அங்கீகாரமும்


கடிகார முள் மாலை 4 மணியை தழுவியதுமே அவ்வளவு நேரம் இதமாக வீசிய காற்றின் கோர முகம் லேசாக வெளிப்படத் தொடங்கும் மத்திய மலை நாட்டில்.
எனினும் மனைவி மக்களின் நலன் கருதி வாட்டும் அந்த குளிரை கூட பொருட்படுத்தாமல் முழு மூச்சாக உழைத்துக் கொண்டிருக்கும் நம் மலையகத் தொழிளாலர்களுக்கு தினக்கூலிகள் எனும் பெயர் மட்டும் தான் மிச்சம்.

இந்தியாவில் இருந்து தேயிலையில் மாசி எடுக்க வந்த வம்சாவளி தான் நம் வம்சாவளி என என்னை செதுக்கிய ஆசிரியர்களில் ஒருவர் கூறக்கேட்டுள்ளேன்.அந்த பெயர் இன்னும் மாறிய பாடில்லை.

இன்று காலை வேளையில் என் நண்பர்கள் மூவருடன் photo session இற்காக நகரை விட்டு விலகி நிற்கும் ஒரு புறநகர் தோட்டப்பகுதிக்கு சென்றேன்.நேரம் சரியாக 11 இருக்கும்.சூரியன் உச்சத்தை தொட்டுக்கொண்டிருந்தது.பாதையில் நடந்து சென்ற எங்களுக்கே வியர்த்துக் கொட்டிக்கொட்டியது.ஒரு அளவுக்கு மேல் எங்களால் நடக்க முடியாமல் மரநிழலில் தஞ்சம் புகுந்தோம்.

அதாவது கொழும்பு வெயிலை போல் வியர்த்துகொட்டும் வெயில்ல அல்ல என்றாலும் அதை விட கொடுமையான சுட்டெரிக்கும் வெயில் தான் எங்கள் பகுதிகளில் அதிகமாக அடிக்கும்.இன்று கூட அவ்வாறான வெயிலில் தான் மாட்டினோம் நாங்கள்.

மரம் தந்த இதமான நிழல் ஒருபுறமிருக்க அதை அனுபவிக்க முடியாமல் கண் முன் அறங்கேரிக்கொண்டிருந்த காட்சிகள் உறுத்தின.

பாரமான கூடையை முதுகில் சுமந்து முரட்டு தேயிலை செடிகளின் மத்தியில் இல்லாத பாதைகளை கண்டு பிடித்து தேயிலை பறிக்கும் பெண்கள்,கட்டை காற்சட்டையுடன் கையில் கூரான கத்தி சுமந்து கவ்வாத்து வெட்டும் ஆண்கள்....இன்னும் பலவற்றை கூறிக்கொண்டே போகலாம்.

எல்லாவற்றையும் விட கொடுமையாக என் கண்ணில் பட்டது நான் படித்த அதே பாடசாலையில் கல்விகற்ற சகோதரன் ஒருவன் தன முதுகில் மூடையுடனும் கையில் கத்தி கொண்டும் எதிரில் நடந்து வந்தது தான்.என்ன தான் பெரிய கல்லூரியாக இருந்தாலும் எத்தனை நீதவான்கள்,மருத்துவர்,பொருளியலாளர்,முகாமையாளர் களை உருவாக்கிய போதும் மேலே கூறப்பட்ட சகோதரன் போல சிலரையும் உருவாக்கத்தவருவதில்லை.இது பாடசாலையின் பிழையோ அல்லது ஆசிரியர்களின் பிழையோ அல்ல.......சமுதாயத்தின் பிழை.

சமீப காலமாக இனவாதம் ஒடுக்கப்பட்ட நிலையிலும் நம் நாட்டின் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக நிற்கும் தோட்டப்புறத்து மக்களுக்கு கிடைக்கவேண்டிய அங்கீகாரம் இன்னும் கிடைத்தபாடில்லை.

அங்கீகாரம் கிடைக்க இறைவனை பிரார்த்திப்போமாக.

------ஒரு தாய் மக்கள் நாமாவோம்------

2 comments:

  1. உண்மைதான் எம் நிலைமையை உலகிற்கு எடுத்து சொல்ல வேண்டியது நம் கடமையே.

    ReplyDelete
  2. அளித்த comment இற்கு நன்றி அருண்

    ReplyDelete