Saturday, September 24, 2011

இரண்டாம் வருட ஒன்று கூடல் 2011

கண் மூடி திறக்கும் முன் ஓடோடி விட்டது ஓராண்டு...ஓராண்டு இடைவெளியில் எத்தனை எத்தனையோ மாற்றங்கள்...இதில் சந்தோஷமான விடயம் என்னவென்றால் சென்ற முறை சந்தித்ததை விட எல்லா நண்பர்களும் தத்தம் வாழ்க்கையில் ஒரு படி மேலே நின்றனர்...

சென்ற முறை போல் அல்லாது இம்முறை facebook மூலமாக தான் இடமும்,தினமும் முடிவானது...முடிவான தினத்தில் இருந்து ஒன்று கூடல் நடைபெற்று முடியும் வரை நிகழ்ந்த அனைத்து விடயங்களும் விறுவிறுப்புக்கு குறைவில்லாதவை...

நண்பன் ஷாம் தான் இம்முறை பொறுப்பேற்று சிறப்புற நடத்தியும் வைத்தார்...ஒவ்வொரு ஏற்பாட்டிலும் கண்ணும் கருத்துமாக இருந்தமையால் ஒரு நயா பைசா கூட கணக்கு தவறவில்லை...தான் ஒரு வங்கி ஊழியன் என்பதில் சற்று கராறாகவே நடந்து கொண்டார்....

 திகதி ஆகஸ்ட் 13 என முடிவானது...திகதி முடிவான தினத்தில் இருந்து சரியாக ஒன்றரை மாத இடைவெளி இருந்தது ஒன்றுகூடலுக்கு......வாரம் இருமுறை ஒன்று கூடலுக்கான திட்டமிடலுக்காக காலிமுகத்திடலிலும் வெள்ளவத்தை கடற்கரை ஓரத்திலும் சந்தித்துக்கொண்டோம்......திட்டமிடல் முடிவடைந்து

அடுத்து ஒவ்வொருவரையும் தேடி கண்டுபிடித்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக சொல்லிமுடிக்கும் முன் போதும் போதும் என்றாகிவிட்டது.....அதுமட்டுமல்லாது இம்முறை அனைவருக்கும் அழைப்பிதழும் கொடுக்கப்பட்டது...நாட்கள் நகர நகர ஏதோ இனம்புரியாத ஓர் உணர்வு மனதினை பற்றிக்கொண்டு நின்றது....

வந்து சேர்ந்தது அந்த எதிர்பார்க்கப்பட்ட இனிய நாள்....காலை நேரம் 9ஐ நெருங்கும் போதே குறிக்கப்பட்ட இடத்திற்கு சென்று காத்திருந்தோம் நான்,கிஷோ,ரம்சி,மணி....பின் நேரம் செல்ல செல்ல ஒவ்வொருவராக வந்து சேர ஆரம்பித்தனர்.கோலாகலம் ஆரம்பித்தது....நேரம் தன் வேகத்தை மேலும் அதிகப்படுத்திகொண்டு சுழல ஆரம்பித்தது போலும்...

குறிப்பாக நண்பன் சஞ்சித் வந்து சேர்ந்ததும் ஏனையவர்களால் கொடுக்கப்பட்ட வரவேற்பு சற்று அபாரமாகவே இருந்தது......மணி இரண்டானது....அந்த நீள மேஜையில் அனைவருக்கும் மதிய உணவு பரிமாறப்பட்டது.....சாப்பிடும் போதும் சாப்பிட முன்பும் சாப்பிட்ட பிறகும் மிக முக்கியமாக கதைக்கப்பட்ட விடயம் தான் "மர்ம மனிதன்".....அதாங்க ..."கிரீஸ் மனிதன்" ....காரணம் அன்றைய தினங்களில் எங்கள் பகுதிகளில் இந்த மர்ம மனிதர்களின் நடமாட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது தான்.கலகலப்பாக நேரம் சென்றது....சொல்லப்போனால் நேரம் எப்படி சென்றது என்றே தெரியவில்லை...மாலை நான்கு மணிக்கு குளிருக்கு இதமான கொப்பி வழங்கப்பட்டது...கொப்பியுடன் நண்பன் ஷியாம் முடிவுரை ஆற்றினான்...இவ்வாறு இனிதே நிறைவுற்றது அந்த இனிய நாள்.....
அடுத்த வருடம் இந்த நாளுக்கான எதிர்பார்ப்பு என் மனதின் ஓரத்தில் இப்பொழுதே எட்டிப்பார்க்க ஆரம்பித்திருக்கிறது...

அடுத்த தடவை கூட இதே போன்று நட்புனர்வுடனும் ஒற்றுமையாகவும் என் ஆருயிர் நண்பர்களை சந்தித்தே ஆக வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டு விடைபெறும் இவன்-Mithoon.J