Thursday, November 11, 2010

முடிவு


"என்ன ஆபீஸ் இது?அஞ்சு நிமிஷம் லேட்டா வர முடியல.எது செஞ்சாலும் பாராட்டவே தெரியாத மேலதிகாரி.எதையும் புரிஞ்சுக்காத சக ஊழியர்கள்.இனியும் இந்த ஆபீஸ்ல வேலை பார்த்தா பைத்தியம் பிடிச்சிடும்.இன்னிக்கே ராஜினாமா கடிதம் கொடுக்க வேண்டியது தான்..."

-இது தான் அவள் காலையில் எடுத்த முடிவு.
லிப்டில் ஏறினாள்.உள்ளே வினு.ஆச்சர்யம்...6 ஆண்டுகளுக்கு பிறகு அவளை பார்க்கிறாள்!

"ஏய் வினு...எப்படி இருக்கடி?எங்க இந்த பக்கம்?
"நல்லா இருக்கேன்.இன்னிக்குதான் இந்த ஆபீஸ்ல செர்ந்திருக்கேன்பா..."
"இங்கயா?"-அதிர்ந்தாள்.
"ஆமாடி.என்னோட பழைய மேலதிகாரிகிட்ட கொஞ்சம் பிரச்சனை..."
"என்ன ஆச்சு வினு?"
"அவரு என்கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணினாரு.அதான்..."

வினுவே தொடர்ந்தாள்..."எல்லோரும் சொன்னாங்க ...'இங்க அஷ்வதான்னு ஒரு மேடம் இருக்காங்க...நல்லா வேல பார்ப்பாங்க,நல்லா பழகுவாங்க'ன்னு .நான் நினைச்சு கூட பார்க்கல.அது நீதான்னு.....உன்மேல எல்லோருமே நல்ல அபிப்பிராயம் வச்சிருக்காங்க....சந்தோஷம்டி.....அப்புறம் பார்க்கலாம்"என்று வினு நகர அஷ்வதா இருக்கைக்கு திரும்பினால்.

வழியில் மேலதிகாரி அழைத்தார்..."என்னம்மா எதாவது பிரச்சனையா?"

"இல்ல சார்"என்றவள் இருக்கையில் அமர்ந்தவுடன் ராஜினாமா கடிதத்தை கிழித்து எறிந்தால்!

No comments:

Post a Comment