Saturday, November 6, 2010

வலுப்பெற்றது நியூசிலாந்து.


65/2 எனும் நிலையில் இன்று 3ம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது நியூசிலாந்து அணி மெக்கலம்,டெய்லர் இன் விக்கட்டுகள் அடுத்ததாக சரிய சற்றே தடுமாறிப்போனது நியூசிலாந்து.

எனினும் 5 வது விக்கட்டுக்காக ஜோடி சேர்ந்த ரைடர்,வில்லியம்சன் ஜோடி மிகச்சிறப்பாக துடுப்பெடுத்தாடி 194 ஓட்டங்களை தமக்கிடையே பகிர்ந்து கொண்டனர்.

இன்றைய நாளின் இருதிப்பந்துவீச்சு ஓவர் இல் ரைடர் ஸ்ரீசாந்த் பந்துவீச்சில் lbw முறையில் ஆட்டமிழந்தார்.

எனினும் களத்தில் வில்லியம்சன் 87 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருக்கிறார்.

அநேகமாக இப்போட்டி வெற்றி தோல்வியற்ற நிலையிலே முடிவடையக்கூடும் என்பது கிரிக்கட் ஆய்வாளர்களின் கருத்தாகும்.

No comments:

Post a Comment