Sunday, September 13, 2015

யட்சன் - ஓர் பார்வை

வலைப்பதிவு எழுத வந்து 5 வருடங்கள் ஆகிவிட்டது, முதல் வருடத்தில் ஒன்றன் பின் ஒன்றாக நிறைய பதிவுகள் எழுத வைப்புக்கள் அதிகமாக இருந்தன, போகப்போக வாய்ப்புக்கள் குறைய எழுதுவதற்கான சந்தர்ப்பங்களும் குறைந்தாகி விட்டன,, எப்படியோ 5 வருட போராட்டத்திற்கு பிறகு 5௦ வது பதிவிற்காக கீபோர்டை தட்டிக்கொண்டிருக்கிறேன்,,

மிக நீண்ட நாட்களுக்கு பின் திரையரங்குக்கு சென்று ஒரு படம் பார்க்க வாய்ப்பு கிட்டியது..யட்சன்..விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா , கிருஷ்ணா நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம்.


படத்தை பற்றி சொல்லணும் னா ஒரு வரில சொல்லிறலாம் ஜி.முதற்பாதியில் பெரிய அளவு வேகம் இல்லை.இடைவேளைக்கு பிறகு வைக்கப்பட்ட அந்த டுவிஸ்டின் உதவியுடன் சற்று வேகம் எடுக்கின்றது திரைக்கதை,

ஆர்யா இந்தப் படத்தில் கொஞ்சம் கலகலப்பு காட்டியிருக்கிறார், கிருஷ்ணாவின் நடிப்பும் கொஞ்சம் கை கொடுத்திருக்கிறது, படத்தின் ப்ளஸ் பாயிண்டாக தம்பி ராமையா மற்றும் வில்லனாக வரும் அந்த நடிகரை குறிப்பிடலாம்.

வில்லன் நடிகரை பற்றி சொல்லியே ஆக வேண்டும்.இவரின் நடிப்பு கண்டிப்பாக பாராட்டுக்குரியது..மிக யதார்த்தமாக இவர் தனது நடிப்புத்திறனை வெளிக்கொணர்ந்துள்ளார்.

இந்த கதையில் இருக்கும் மைனஸ் பாய்ன்ட் என்னன்னா படம் பார்க்கும் போது Final Destination மற்றும் தமிழில் அழகிய தமிழ் மகன் போன்ற படங்கள் ஞாபகத்துக்கு வந்து விடுகின்றன,

இவற்றை தவிர்த்து திரைக்கதையை நகர்த்தியிருந்தால் படத்தின் வேகம் இன்னும் கொஞ்சம் அதிகமாகியிருக்கும்,..

படம் தொடங்க முன் ரஜினிமுருகன் ட்ரைலர் போட்டாங்க ஜி, அதை பார்த்த உடன் அந்த படத்துக்கான எதிர்ப்பார்ப்பும் அதிகமாயிருச்சு, படம் அடுத்த வாரம் ரிலீஸ்..,, பார்க்கலாம் ரஜினிமுருகன் பற்றியும் பேசலாம்,

நன்றி.

Sunday, January 11, 2015

The Interview - த இன்டர்வீவ் - ஓர் பார்வை

பக்கா ஹாலிவுட் திரைப்படம்,, இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் போது நிறைய பேர் படத்தை பார்த்திருக்கலாம்,, பார்க்காத ஏனையவர்களுக்காக இந்த பதிவு,,

படத்தில் வரும் கதாப்பாத்திரங்களின் பெயர்கள் வெகு நேரம் மண்டைக்குள் சிறை நிற்க மறுக்கின்றன,, ! , எனினும் திரைக்கதையும் அதனை நகர்த்தியுள்ள இயக்குனரின் நுட்பமான அறிவும் பாராட்டத்தக்கது,

முழு படத்தின் கதையை ஒரு சில வரிகளில் இனி பார்ப்போம்,,

"ஸ்கைலார்க் டுநைட்" மக்களிடையே அதிகம் பிரசித்தி பெற்ற நேர்முகக்காணல் வடிவு தழுவிய நேரடி தொலைகாட்சி நிகழ்ச்சி,,இந்நிகழ்ச்சியில் பிரசித்தி பெற்ற பலரின் உண்மையான முகம் வெளி உலகக்கு தெரிய வந்தமையே இந்நிகழ்ச்சியின் பிரசித்திக்கான காரணமாக அமைகிறது,,


வட கொரிய சர்வாதிகாரிக்கு பிடித்த நிகழ்சிகளில் இதுவும் ஒன்று என இணையத்தளம் செய்தி வெளியிட "டேவ் ஸ்கைலார்க்" இற்கு அந்த சர்வாதிகாரியை தன் நிகழ்ச்சிக்கு கொண்டு வர வேண்டும் என்ற ஆசை உருவாகின்றது,

இதற்கு பின்னால் நடந்த கலாட்டாக்களும், கூத்துக்களும், சூட்சமங்களும் தான் மிகுதிக்கதையை நகர்த்துகின்றன,

இத்திரைப்படம் விறுவிறுவென நகைச்சுவையுடன் நகர்ந்தபோதிலும் , ஒரு சர்வாதிகாரியின் இயல்பான வாழ்வின் உட்பகுதியையும் கோர முகத்தினையும் மிக அழகாக படம் பிடித்து காட்டியிருக்கின்றது,,


ஏனைய நாடுகளின் உட்கட்டமைப்பு விஷயங்களில் அமேரிக்கா தலையீடு குறித்து ஓர் சிறு நகைச்சுவை துணுக்கும் இப்படத்தின் ஒரு காட்சியில் அடங்குகின்றது,,

imdb தரப்படுத்தலில் இப்படத்திற்கு 7.2 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன,,என்னைப்பொறுத்த வரை இப்படத்திற்கு 8.1 புள்ளிகள் வழங்கலாம்,,

இத்திரைப்படம் ஓர் சிறந்த பொழுது போக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை,,


அடுத்த தொகுப்பில் சந்திக்கும் வரை நன்றி கூறி விடைபெறுகின்றேன்

J.Mithoon