Sunday, November 7, 2010

அவுஸ்திரேலியா அபார வெற்றி


அடுத்தடுத்தாக 2 போட்டிகளில் படு தோல்வியடைந்த அவுஸ்திரேலிய அணி இன்று பிரிஸ்பேனில் தனது ஆறுதல் வெற்றியை பெற்றுக்கொண்டது.

இன்றைய போட்டியிலும் வெற்றி பெரும் இலக்கோடு களமிறங்கிய இலங்கை அணியின் விக்கட்டுகள் அடுத்தடுத்தாக சரியத்தொடங்கியது.

தில்ஷான் 1 ஓட்டத்துடனும் சங்கக்கார,மஹேல ஆகியோர் ஓட்டம் எதனையும் பெறாமலும் களத்தை விட்டு வெளியேறினர்.

இரட்டை இழக்க ஓட்டங்களை 2 வீரர்களே தாண்டினார்.

தரங்க 28 ஓட்டங்களையும்,சில்வா 33 ஓட்டங்களையும் பெற்றனர்.இவர்களுக்கு அடுத்ததாக மேத்திவ்ஸ் 9 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

32 ஓவர்களுக்கு முகம் கொடுத்த இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 115 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி தனது முதல் விக்கட்டை 35 ஓட்டங்களை பெற்ற வேலையில் இழந்தது.வாட்சன் 15 ஓட்டங்களை பெற்ற வேலையில் தில்ஹார வின் பந்து வீச்சில் மேத்திவ்ஸ் இடம் பிடி கொடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்த அவுஸ்திரேலிய விக்கட் 84 வது ஓட்டத்தை பெற்ற வேலையில் இழக்கப்பட்டது.ஹட்டின் 34 ஓட்டங்களை பெற்ற வேலையில் தில்ஹார வின் பந்து வீச்சில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த ஹசி 6 ஓட்டங்களுடனும் கிளார்க் 50 ஓட்டங்களையும் பெற்ற வேலையில் அவுஸ்திரேலிய அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.

ஆட்டநாயகனாக 33 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை வீழ்த்திய அவுஸ்திரேலிய அணியின் மெக்கே தெரிவுசெய்யப்பட்டார்.

No comments:

Post a Comment