Monday, November 12, 2012

இனிய எண்ணங்களுடன் தீபாவளி

 கண் மூடி திருக்கும் முன் நாட்களும்,வாரங்களும்,மாதங்களும் மிக வேகமாக கரைபுரண்டோடிக்கொண்டிருக்கிறது...நேற்றைய தினம் வேளை முடிய இன்று தீபத்திருநாள் அன்று விடுமுறை என்பதால் வீடு நோக்கி பயணப்படும் போது வண்டியில் துப்பாக்கி பாடல்கள் ஒரு பக்கம் ஓட வண்டியின் சுக்கானம் இன்னொரு பக்கம் திரும்ப என் நினைவுகள் வேறொரு பக்கம் ஓடிக்கொண்டிருந்தன

முன்னல்லாம் தீபாவளி ன்னா ஒரே கூட்டமும் கொண்டாட்டமும் தான் நினைவுக்கு வரும்..கல்லூரியின் குறிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே விடுகை மணி ஒலிக்க அந்த நொடியில் இருந்து ஆரம்பிக்கும் கல்லூரிக்கால தீபாவளி...தோழிகளும் தோழர்களும் கை குலுக்கி வாழ்த்து சொல்லி தத்தம் வீடு நோக்கி செல்லும் அந்த தருணம் ஏதோ ஒரு மாத கால விடுமுறைக்கு பாடசாலை மூடப்படும் பரவசத்தை நம்மிடையே கொண்டு வந்து சேர்க்கும்...

அப்படி ஒரு நாள் பன்னிரண்டு மணியளவில் பாடசாலை விட நண்பர் கூட்டத்தோடு கலந்தாலோசித்ததில் பகல் உணவுக்கு பின் மைதானத்தில் கிரிக்கட் விளையாட ஒன்று சேர்வதாக பேச்சு..வீட்டிற்கு சென்று அவசர அவசரமாக சாப்பாட்டை முடித்து விட்டு மைதானத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தன கால்கள்..

விளையாட ஆரம்பித்து ஒன்றரை மணித்தியாலத்திற்கு மேல் நேரம் ஓட அந்த நேரத்தில் நடந்தது ஒரு அசம்பாவிதம்..

திடீரென என் நண்பன் ஒருவன் தன் பெறுமதியான கைத்தொலைபேசியை காணவில்லை என்று ஆரம்பிக்க அந்த நொடியில் ஆரம்பித்தது கலவரம்..அதற்கு பிறகு நீண்ட நேரம் தொலைபேசியை தேடியும் எந்த பயனும்  கிட்டவில்லை..அங்கிருந்த பாதி பேருக்கு அந்த தொலைபேசிக்கு என்ன ஆனது அது யார் கைக்கு சென்றது என்பது தெரியும்..தொலைபேசியை தொலைத்தவனுக்கு கூட...இருந்தாலும் சரியாக நிரூபிக்க முடியாததால் அதை அப்படியே விட்டுவிட வேண்டிய நிர்ப்பந்தம் எங்களுக்கு...இதில் பெரிய கூத்து என்னவென்றால் நாங்கள் சந்தேகப்பட்ட அந்த குறிப்பிட்ட நபரே இரண்டு,மூன்று நாட்களுக்கு பிறகு தொலைபேசியை பறிகொடுத்தவனிடம் வந்து "மச்சான் phone ku charger ம் headset ம் இருக்கா"னு கேட்டது தான்....

தொலைபேசி தொலைந்து போன இடம் 


அந்த தீபாவளி அந்த சம்பவத்துடனே சுவாரசியமாக கடந்து செல்ல,,சென்ற வருடத்திற்கு முதல் வருடம் இன்னுமொரு சம்பவம் நடந்தது..அதை நான் சொல்வதை விட என் நண்பன் அருண் தன் வலைப்பூவான "குறிப்புகள் சில"வில் மிக தெளிவாக சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்...

அதை பின்வரும் தலைப்பை கிளிக்குவதன் மூலம் எம் அனுபவத்தை நீங்களும் கொள்ளலாம்...

"தீபாவளி பல்பு"

இப்படி பல அனுபவங்கள் என்னுள்ளே புதைந்து கிடக்கின்றன...வலை எழுத ஆரம்பித்த ஆரம்ப காலங்களில் தொடர்ந்து எழுத வாய்ப்பு கூடி வந்தன..காலப்போக்கில் நேரமும் வேலையும் ஒத்துழைக்காத காரணத்தால் வலை எழுதும் வாய்ப்பும் குறைந்தே போய் விட்டது...எனினும் இனி வரும் காலங்களிலாவது வாரத்திற்கு ஒரு தடவையாவது எழுத நேரம் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்திப்பதுடன் தற்காலிகமாக விடைப்பெருகிறேன்...

நன்றி-Mithoon.J


No comments:

Post a Comment