Thursday, March 29, 2012

ஆவி அனுபவம்

இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு மாத காலத்துக்கு மேல் ஆகி விட்டது...ஆனால் நடந்தது என்ன என்பது மட்டும் இன்னும் எனக்கு சரியாக புரிந்த பாடில்லை

ஒரு வருட காலமாக அந்த குறிப்பிட்ட காட்டு வழிப்பாதையை குறுக்கு வழியாக (short cut) பயன்படுத்திக்கொண்டிருந்தேன். பேருக்கு தான் குறுக்கு வழி...ஆனால் அந்த காட்டு வழிப்பாதயினூடாக கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் பிரயாணிக்க வேண்டும்..

அன்று வத்துபிட்டிவல எனும் நகரில் வேளை..முடிய 06.30 போல் ஆகிவிட்டது..இறுதி வைத்தியரை பார்த்துவிட்டு அந்த வழியாக பிரயாணத்தை ஆரம்பித்தேன்

அந்த காட்டு வழிப்பாதையை முழுமையாக கடந்து முடிக்கும் வரை லேசாக மழை தூரிக்கொண்டே இருந்தது.....ஒரு 50 நிமிட பயணத்திற்கு பின் "கரவனெள்ள"எனும் இடத்தை வந்தடைந்தேன்...இருட்டில் அந்த காடுப்பதையில் வந்தது களைப்பாக இருந்தபடியால் அங்கிருந்த ஓர் தேநீர் கடைக்கருகில் வண்டியை நிறுத்திவிட்டு தேநீர் அருந்தி களைப்பாற்ற இறங்கிச் சென்றேன்...

தேநீர் அருந்திவிட்டு அந்த கடையிலேயே முகத்தை கழுவி விட்டு மீண்டும் வண்டியில் ஏறி பயணத்தை ஆரம்பித்தேன்...

சரியாக 7km வந்திருப்பேன்...திடீரென ஒரு பெண்ணுருவம் வண்டிக்கு முன்னாள் விழுந்தது போல ஏதோ நடந்தது..அந்த நிமிடம் திடுக்கிட்டேன்...அப்போது தான் ஒரு உண்மை எனக்கு புரிந்தது...

அந்த நிமிடம் நான் நின்றுகொண்டிருந்த இடம் நான் ஏற்கனவே தாண்டி வந்த காட்டு வழிப்பாதை.....ஆனால் நான் தேநீர் அருந்திய இடத்தில இருந்து மறுபக்கம் செல்லாமல் மீண்டும் இந்த இடத்திற்கு எப்படி வந்தேன் என்பது இந்த நொடி வரை எனக்கு புரியாத புதிர் தான்.....

அதன் பிறகு மீண்டும் அந்த இடத்திலிருந்து வீடு வந்து சேரும் வரை நான் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை...



இது உண்மையாகவே ஆவிகளின் களியாட்டம் தானா???இல்லை அன்று காலை வேளையில் இருந்து தொடர்ந்து வேளை செய்த களைப்பினால் ஏற்பட்ட டிப்ரஷனா அட அதாங்க மனப்"பிராந்தி"யா!!! னு இன்னும் கூட என்னால் யூகித்துகொள்ள முடியவில்லை...

இந்த விஷயம் சம்பந்தமா நெருங்கிய நண்பர்கள் கிட்டேயே நான் ஏதும் பேசிக்கொள்ள வில்லை காரணம் அந்த சம்பவத்தை மீண்டும் மீண்டும் என்னால் நினைத்து பார்க்கும் போதே ஏதோ போல இருக்கும்...

பின்ன எப்புடி வலை ல பதிவா எழுத தைரியம் வந்துச்சு னு பாக்குறீங்களா???
நேற்றைய தினம் அதே வத்துபிடிவல நகரில் இருந்து அதே காட்டு வழியாக இரவு எட்டு மணியளவில் தனியாக வந்தேன்...தெய்வாதீனமாக அன்று நடந்தது போல் எதுவுமே நடக்கவில்லை...அந்த தைரியத்தில் தான் எழுதிக்கொண்டிருக்கின்றேன்...

அன்று நடந்தது போல் இன்னொரு தடவை இனிமேல் நடந்துவிடாது இருக்கும் படி இறைவனை பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறான பாதைகளில் இரவு நேர பயணங்களை இயலுமான அளவு குறைத்துகொல்லுமாறு வேண்டுகோள் விடுத்து விடைப்பெறுகிறேன்.....

இப்படிக்கு-Mithoon Jeyaraj.


2 comments:

  1. dei iru machan august la nanum vanthurren
    rendu perum senthu pei parkalam

    ReplyDelete
  2. OMG!!! It shud have been really thrilling :O

    ReplyDelete