Saturday, June 25, 2011

60 நாட்களுக்கு பிறகு......................................

பதிவுக்கான தலைப்பை யோசிக்க தான் நேரம் அதிகமாக விரயமாக்கப்பட்டது.முன்பெல்லாம் வாரம் ஒருமுறை பதிவெழுதும் நான் இப்போதெல்லாம் கணினி முன் அமர்வதே வாரம் ஒரு முறை தான்....
ஆம் முன்பு வேலை வெட்டி இல்லாமல் இருந்தபோது வீட்டில் நேரம் போவதே இல்லை.ஆனால் இப்போதெல்லாம் வார இறுதி விடுமுறையில் வீட்டிற்கு வந்தால் நேரம் போவதே தெரிவது இல்லை...

தலைநகரில் வேலை...நாட்டின் மிகப்பிரபலமான மருந்தக நிறுவனத்தில் பணி...வேலை செய்ய ஓர் கார் வண்டி..சொகுசான வாழ்க்கை,இன்பமான வதிவிட சூழல்...என என்னை சுற்றி எல்லாமே சாதகமாக அமைந்தாலும் என் வீட்டினை மிக மோசமாக தவறவிடுகிறேன்....

வண்டி ஓட்ட ஓரளவு தெரிந்திருந்தாலும் தலைநகர வாகன நெரிசலுக்கு மத்தியில் என்ன செய்வது என்ற கேள்வி என் மத்தியில் ஆரம்பத்தில் இருந்தது...என்றாலும் நான் நம்பிக்கையை விடாமல் முயற்சி செய்ய அதுவும் கூட சாதகம் தான்...மாதம் ஒன்று விரைந்து ஓட தொழிலின் நுணுக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவாகின...இப்போது அவற்றை நடைமுறை படுத்த முழுமூச்சாக ஈடுபட்டிருக்கிறேன்.......

வேளையில் மூழ்கியிருந்த சமயம் ஒரு தொலைபேசி அழைப்பு என் அலைபேசிக்கு...
உத்தரவு கொடுத்து பேசியை காதில் வைத்தால் மறுபுறத்தில் நண்பி....தன் திருமணம் குறித்த ஒரு நாளில் நிச்சயிக்கப்பட்டுள்ளது எனவும் திருமண நாளன்று எம் பாடசாலை நண்பர்கள் எல்லாரும் வருவார்கள் எனவும் கூறி எனக்கும் அழைப்பு விடுத்ததன் பின் பேசி துண்டிக்கப்பட்டது...

அன்றைய தினம் எம் வாழ்வில் மறக்கமுடியாத நாட்களில் ஒன்றானது...காரணம் எம் மத்தியில் நடக்கும் முதலாவது உத்தியோகபூர்வ திருமணம் அதுவாகும்...

கீழே உள்ள புகைப்படம் அந்த மனநாளில் எடுக்கப்பட்டது...."நண்பர்கள்"அந்த மன விழாவிற்கு வருகை தந்தனர்...பாடசாலையின் கிறுக்கல்கள் அங்கும் தொடர்ந்தன...பொழுது மிக சீக்கிரமாக விரைய மறுநாள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே ஏதோ செய்தது...தலுவல்களுடன் நண்பர்கள் பிரிய....கண் கலங்கியது...தவறவிட்ட அந்த நாளை எண்ணி... 
 2ம் வருட ஒன்றுகூடளுக்கான பேச்சுக்கள் ஆங்காங்கே அடிபட துவங்கியுள்ளது...மிக அருகில் அந்த நாள் என்பது மட்டும் பொய் இல்லை...மீண்டும் நண்பர்களை சந்திக்கும் அந்த ஒரு சில மணித்தியாலங்களுக்காக இன்னும் எத்தனை மணித்தியாலங்கள் காத்துக்கிடக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுமோ என்பது தெரியவில்லை...அந்த காத்திருப்பிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது,,,
நண்பர்கள் எனும் உலகினில் நட்பு எனும் வாழ்க்கைக்காக காத்து நிற்கும் இந்த நண்பன்......Mithoon.J

No comments:

Post a Comment