Friday, January 7, 2011

கொத்துக் கடை அரசியல்

மாதத்திற்கு 3 முறையாவது இரவு உணவிற்கு ஒன்று கூடுவது எங்கள் நண்பர் குழு வட்டத்தில் பழகிப்போன ஒரு விஷியமாகும்....அப்படி கூடும் பொது முன்பெல்லாம் வெட்டி அரட்டை தான் முன்னிலை வகிக்கும்....ஆனால் இப்போது அந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் பெற்று பேசுகிற தலைப்பு ஒரு துளியாவது அர்த்தமுள்ளதாக இருப்பது என்னைப்பொறுத்தவரை மகிழ்ச்சியளிக்கிறது.

ஒவ்வொரு முறையும் நாம் பேசும் அர்த்தமுள்ள விஷியங்களை என் தளத்தில் பகிர்வது என கடைசியாக நாங்கள் பேசியபோது முடிவுசெய்து கொண்டேன்...
அந்த வகையில் சமீபத்தில் "கொத்து"க்காக காத்திருந்த போது பேச ஆரம்பித்த விடயம்....

வெளிமாகாண,மாவட்ட மாணவர்கள் சேர்க்கையினால் பாதிப்படையும் நம் மலைநாட்டு இளைஞர் சமுதாயம்

இந்த தலைப்பு அந்த இடத்தில் எடுபட்டமைக்கு மிக முக்கியமான காரணம் அந்த நேரத்தில் வெளிவந்திருந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தான்.....
மலையகத்தில் உயர்தர பரீட்சையில் தேறி பல்கலைகழகம் செல்லும் வாய்ப்பை பெற்ற மாணவர்களில் பெரும்பாலானோர் வெளி மாகாண,மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர்....

வெளி மாகாண,மாவட்ட மாணவர்கள் தம் உயர் கல்விக்காக மலையகத்தை தேர்ந்தெடுக்க திறமையான ஆசிரியர்கள் (குறிப்பிட்டு சொல்வதாயின் மலையகத்தில் பிறந்து இன்றைய காலகட்டத்தில் எண்ணற்ற மலையக மாணவர்களை பல்கலைகழகம் அனுப்பிக் கொண்டிருக்கும் வணிகப்பிரிவு ஆசிரியர் திரு.சக்திவேல் அவர்களை குறிப்பிடலாம்),குறைந்த வெட்டுப்புள்ளி,கற்றலுக்கான சிறப்பான வளங்கள் போன்றவற்றை குறிப்பிடலாம்.

மேற்கூறப்பட்ட வளங்கள் தாராளமாக கொட்டிக்கிடக்கும் மலையகத்தில் மலையக ஆசிரியர்களின் அதீத உழைப்பு வெகுவாக சுரண்டப்பட்டு அவை இலாபமாக வேற்று வடிவில் சென்றடைவது என்னவோ வேறு இடங்களுக்கு தான்.இதற்கான சிறந்த உதாரணமாக கடந்த உயர்தர பரீட்சையை வெற்றிகரமாக தோற்றி பல்கலைகழகம் செல்ல தகுதி பெற்ற 5 சிங்கள மாணவர்கள் மாத்தறை மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.....என்பதை எடுத்துக்கொள்ளலாம்.

இதற்கு விதிவிலக்காக 2009ம் ஆண்டில் தான் முற்று முழுதாக மலையக மாணவர்கள் உயிரியல்,வணிக பிரிவுகளில் தங்கள் இடங்களை நிரப்பிக்கொண்டு தங்கள் உரிமைகளை வென்று பல்கலைகழகம் சென்றடைந்தனர்.....

நான் படித்த கல்லூரியில் வெளியிட மாணவர்களை சேர்க்க முடியாது....காரணம் முன்பொரு முறை அப்படி சேர்த்ததற்காக அதிபர் அவர்கள் பல தடவை நீதிமன்ற வாசல் ஏறி இறங்கியிருக்கிறார்..எனினும் என் கல்லூரி தவிர சுற்றியிருக்கும் ஏனைய கல்லூரிகளில் வெளியிட மாணவர்களை சேர்ப்பது இன்று ஒரு சாதரணமான விடயமாகி விட்டது...

மலையக சமுதாயம் இன்றும் கூட சொல்லிக்கொள்ளும் அளவு முன்னேற்றத்தை அடையாமைக்கு மிக முக்கிய காரணமாக நான் நோக்குவது இந்த விடயத்தை தான்.இந்த விடயம் இப்படியே செல்லுமாயின் எதிர்கால மலையக சந்ததியினரின் வாழ்க்கை கேள்விக்குறி தான்.....

எனவே மலையக உயர்திரு அரசியல் தலைமைகள் இந்த விடயத்தை சற்றேனும் கவனத்திற்கொண்டு இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து ஒளிமயமான மலையக எதிர்காலத்திற்கு வித்திட வேண்டும் என பணிவுடனும்,தாழ்மையுடனும் கேட்டுக்கொள்கிறேன்.

மீண்டும் "கொத்து"க்காக காத்திருக்கும் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி விடைபெறும் இவன்-Mithoon.J

No comments:

Post a Comment