நீண்ட நாட்களுக்கு பிறகு வலைத்தளம் எழுத இன்று தான் ஓர் வாய்ப்பு கிடைத்தது.....
நேற்றைய தினம் பூரணை தினம் ஆகையால் சனி,ஞாயிறு 2 நாட்களாக சேர்த்து விடுமுறை கிடைத்தது.
வெள்ளிக்கிழமை இரவு பேருந்து மூலமாக வீடு நோக்கி கிளம்பினேன் தலைநகரில் இருந்து....
வீடு வந்து சேர நள்ளிரவு 12 ஆகிவிட்டது.....மறுநாள் சனியன்று காலை அம்மா சமைத்த உணவு....கடை சாப்பாட்டை சாப்பிட்டு சாப்பிட்டு மரத்து போயிருந்த நா விற்கு ஒரே குஷி.....
சாப்பிட்டு விட்டு facebook இல் சிறிது நேரம் கழிந்தது....பின் நண்பனின் தொலைபேசி அழைப்பு....என நேரம் வேகமாக கரைந்து கொண்டிருந்தது......
பகல் உணவு........முடித்துவிட்டு அடுத்து என்ன என ஆழ்மனது ஓர் கேள்வியை முன்வைத்தது....படம் பார்க்கலாம் என முடிவாகவே.....என் வீட்டு தியேட்டரில் ஓட ஆரம்பித்தது "பயணம்"
வேகமான திரைக்கதையை கொண்ட திரைப்படம்,படம் ஆரம்பித்ததில் இருந்து முடிந்தது வரை விறுவிறுப்பாகவே நகர்ந்தது.....
ராதாமோகன்,பிரகாஷ்ராஜ் கூட்டணிக்கு மீண்டும் ஓர் வெற்றி.....
படம் வெற்றியடைய முக்கிய காரணமாக கதாபாத்திரங்களின் யதார்த்த நடிப்பு ஓர் காரணி.
டீலா நோ டீலா ரிஷி க்கு இன்னுமோர் புதியமுகம்....
வில்லன் கூட்டத்தின் நடிப்பு கூட செமையாக இருந்தது...
கதையை நான் இங்கு எழுதினால் பார்க்கும் போது சுவாரசியமாக இருக்காது........
தன பிறகாவது தமிழில் இது போன்ற படங்கள் வெளிவருமாயின் அது தமிழ் சினிமா வின் எதிர்காலத்திற்கு நல்லது.......
இந்த வாரம் ராதாமோகனின் "பயணம்" என் விடுமுறைக்கு ஓர் அர்த்தத்தை வழங்கியது........
வரும் வாரம் கெளதம் வாசுதேவ் மேனன் இன் "நாடு நிசி நாய்கள்" பார்க்கலாம் என ஓர் எதிர்ப்பார்ப்பு.....
மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கும் வரை விடைப்பெரும் இவன்-Mithoon.J
//வரும் வாரம் கெளதம் வாசுதேவ் மேனன் இன் "நாடு நிசி நாய்கள்" பார்க்கலாம் என ஓர் எதிர்ப்பார்ப்பு//
ReplyDeleteதவறான முடிவு இதற்க்கு பதிலாக யுத்தம் செய் பார்ப்பது சிறந்தது
பயணம்
ReplyDeleteமசிழ்ச்சியா?
களைப்பா?