Saturday, January 29, 2011

127 Hours

Slumdog Millionaire வெற்றிக்கு பின் Danny Boyle யின் அடுத்த முயற்சி 127 HOURS.Aron Ralston எனும் Mountain Climber இன் உண்மை கதையே இது.பின்னணி இசை A.R.Rahman.வழமை போலவே ஒளிப்பதிவு வெளுத்துக் கட்டியிருக்கிறது.எண்ணில்லா கேமராக் கோணங்கள் படத்தில் விளையாடியிருக்கிறது.Jon Harris இன் Editing படத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது.

ஆரம்பம் முதலே கதை விறுவிருப்பாக நகர்வதால் ரசிகர்களின் கவனம் முழுதும் படத்திலேயே இருக்கும்படி அமைந்திருக்கிறது.நேரம் செல்லச்செல்ல கதையின் வேகம் அதிகரிக்கிறது....

இந்த திரைப்படம் கூட உலக சினிமா வரலாற்றின் ஓர் மைல்கல்லாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இடையிடையே ராவணன் திரைப்பட பின்னணி இசை எட்டிப்பார்க்கிறது..எனினும் அதனிலும் மேலாக A.R.Rahman இன் புதிய பின்னணி இசை Hollywood இல் அவருக்கான ஓர் தனி இடத்தை பெற்றுக்கொடுக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

கதை ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மட்டுமே சுற்றி நகர்கிறது...கதைப்படி நாயகன் ஒரு Adventures விரும்பி.

ஒருமுறை நாயகன் அவ்வாறான Adventure Trip இல் ஈடுபட்டிருக்கும் போது ஒரு இடரில் மாட்டிக்கொள்ள நேரிடுகிறது.அந்த வகையில் தான் மாட்டிக்கொண்ட இடரில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள 127 மணி நேரம் போராடிய விதமே படமாக எடுக்கப்பட்டுள்ளது.

நடிப்பில் தன்னால் இயன்ற உச்சத்தை எட்டியிருக்கிறார் James Franco.
படத்தில் கத்தி கதாநாயகன் ஆகி நான் பார்க்கமுடியாமல் கண்ணை மூடிக்கொண்ட உச்சகட்ட காட்சிகளும் உண்டு.....அந்த இடங்களில் சிறப்பாக ஒளிப்பதிவாளர் செயற்பட்டுள்ளார்.பின்னணி இசையும் கூட அந்த குறிப்பிட்ட இடத்தில் நெருடலை நம்மிடையே கொண்டு வந்து சேர்க்கிறது.

கதையை வாசிப்பதை விட இந்த மாதிரி திரைப்படத்தை பார்த்து திருப்தியடைவது பொறுத்தமாக இருக்கும்....

அந்த ஒரு காரணத்தினால் மட்டுமே கதையின் கருவை மாத்திரம் மேலோட்டமாக விவரித்திருந்தேன்.

நான் வழமையாக DVD வாங்கும் இடத்தில் இந்த திரைப்படம் இருந்ததாக ஞாபகம்...எனினும் நான் வழமை போல Torrent இல் தரவிறக்கி தான் படம் பார்த்தேன்.

"Torrent" இதனை கிளிக்குவதன் மூலம் படத்தை இலகுவாக தரவிறக்கிக் கொள்ளலாம்.

தமிழிலும் இது போன்ற ஓர் திரைப்படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இவன்-Mithoon.j



2 comments:

  1. en paechaiyum madhichi indha padathai paarthathatkhu nandri............thamilil idhu poandra padangal varum kaalam vegu thalaivil illai ena nambughiraen.aenenil aadukalam matrum pasanga poandra thiraippadangal moolam thooraththil siriya oli therigiradhu thamil sinimavitku.vaalga mithoon valarga un pani. இப்படிக்கு-----ச.ரம்சான்

    ReplyDelete
  2. ramzan un pechcha oruthen kekuraane,anyway naanum intha padaththai paarkka poren..............!

    ReplyDelete