2011 தமிழ் சினிமாவுக்கு ஒரு எழுச்சியான ஆண்டாகவே அமைந்தது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை......சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ள ஒருசில திரைப்படங்கள்,பார்த்து பரவசப்பட இன்னும் சில திரைப்படங்கள் என ஒரு கொண்டாட்டமாகவே கழிந்தது இவ்வாண்டு தமிழ் திரையுலகுக்கு...
அவ்வாறு வெளிவந்து இவ்வாண்டில் சக்கை போடு போட்ட ஒருசில திரைப்படங்களையும் பாடல்களையும் வரிசைபடுத்த முயன்றதின் ஒரு தொகுப்பு.....
அடுத்து நம்ம தளபதியின் காவலன்..எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாது சமீபத்தில் வெளிவந்த தளபதியின் திரைப்படம் இதுவாக தான் இருக்க முடியும்..அதனாலயோ என்னவோ படம் பாராட்டுக்களை அள்ளிக்குவித்தது....விஜயின் நடனம் கொஞ்சம் மிஸ்ஸிங்,,சித்திக்கின் இயக்கம் அவரின் பழைய படங்களை நினைவூட்டுகிறது,,அசின் வழமை போல பேச்சிலும்,சிரிப்பிலும் பலே,,வித்யாசாகர் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளுத்துக்கட்டியிருக்கிறார்,,
தெய்வத்திருமகள்,,விக்ரமின் இன்னுமொரு வித்தியாசமான முயற்சி..வேறு எந்த நடிகருக்கும் இல்லாத துணிவு நம் விக்ரமுக்கு,,ஆனால் அந்த துணிவு அவருக்கு நன்றாகவே கை கொடுத்திருந்தது,,சாரா,விக்ரம் தவிர படத்தின் மென்மையான பாடல்கள் மட்டுமே போதும் படத்தின் அபார வெற்றிக்கு...மழைக்கு பின் இலையில் இருந்து சொட்டு சொட்டாக நீர் விழுவது போன்ற உணர்வை மிக அழகாகவே சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஜய்,,
மயக்கம் என்ன,,நிறைய பேருக்கு படம் முடிந்த பிறகு தான் கதையே புரியும்,,மிக அழகான கதை,,அதனை தனக்கே உரிய விதத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் செல்வராகவன்,,இவ்வருடத்தில் தனுஷின் இரண்டாவது ஹிட்,,அதிலும் தனுஷ் பாடிய இரண்டு பாடல்களுமே மெகா
ஹிட்,,ஜி.விக்கும் இவ்வாண்டு சிறப்போ சிறப்பு தான்
வாகை சூடவா-மிகச்சிறந்த கிராமத்து சித்திரம்,,விமல் கதாபாத்திரம் மிக இயற்கையாக அமைக்கப்பட்டுள்ளது,,இனியா வின் நடிப்பும் சூப்பர்,,பாடல்கள் மனதை தீண்டும் வகையில் அமைகப்பட்டுள்ளன,,
வரிசை படுத்தப்பட்ட திரைப்படங்கள் தவிர மங்காத்தா ,எங்கேயும் எப்போதும் மற்றும் இன்னும் எத்தனையோ தமிழ் திரை படங்கள் 2011 இல் வெளிவந்து சக்கை போடு போட்டன,,குறிப்பாக இவ்வாண்டு வெளிவந்த பாடல்கலுள் சூப்பர் ஹிட ஆனா சில பாடல்களையும் பார்க்கலாம்,,
காவலன்-யாரது,,
மயக்கம் என்ன-அட்ரா அவல..
ஆடுகளம்-ஒத்த சொல்லால
தமிழ் திரையுலகு மட்டுமிள்ளது உலக இசைத்துறையையே திரும்பிப்பார்க்க வைத்த பாடல்,,-y this kolaveri
வரிசை படுத்தப்பட்ட பாடல்கள் மட்டுமில்லாது இன்னும் ஏராளமான திரைப்படங்களும்,பாடல்களும் கூட சக்கை போடு போட்டன,,அதே போல பிறக்கும் 2012 ம் ஆண்டிலும் சிறந்த சில திரைப்படங்களையும் பல பாடல்களையும் எதிர்பார்த்து காத்திருக்கும் இவன்- Mithoon Jeyaraj.
No comments:
Post a Comment