இதுவரை என்னால் எழுதப்பட்ட ஒவ்வொரு பதிவிலும் என் நண்பர்களை பற்றி நிச்சயமாக ஒரு சொல்லாவது இருக்கும்...அந்தளவு நண்பர்களை நேசிப்பவன் நான்.எந்தளவு என் நண்பர்களை நேசிக்கிறேனோ அதே அளவு என் கல்லூரியையும் நேசிக்கிறேன்..
குறிப்பாக என் உயர்தர வகுப்பு சக தோழர்களையும்,Ncage மக்களையும்,வெவ்வேறு கல்லூரிகளில் கற்றிருந்தாலும் "நட்பு"எனும் அழகிய சொல்லிற்கு கட்டுப்பட்டு இன்று கூட Mobile மூலமாக தொடரும் என் 1,2 நண்பிகளையும் சொல்லலாம்.
இந்த பதிவின் மூலம் என் கல்லூரி நாட்களின் சில அழகான தருணங்களை,நிமிடங்களை,நாட்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.
(படத்தில் போஸ் கொடுத்துக்கொண்டிருக்கும் நண்பன் SUJEEVAN.இவருக்கும் பின்னால் இருக்கும் தியேட்டருக்கும் ஒரு சம்பந்தம் இருக்கின்றது என்பதை எப்போதும் நம் மனதில் வைத்துக்கொள்ள எடுக்கப்பட்ட படம்)நான் என் படிப்பை ஆரம்பித்தது பண்டாரவளை St.Thomas கல்லூரியில்...ஆனால் தரம் 4 வரை மாத்திரமே அங்கு படிக்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.அம்மாவின் இடம்மாற்றம் காரணமாக எனக்கு அங்கிருந்து விலகி ஹட்டன் வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது..இங்கு வந்து தரம் 5 இல் Highlands College இல் இணைந்தேன்.
அப்போதிலிருந்து என் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் வரை தொடர்ந்து அதே கல்லூரியில் தான் படித்தேன்.நான் இந்த கல்லூரியில் படித்த 9 வருடங்களில் எனக்கு கிடைத்த உறவுகள்,நடந்த சம்பவங்கள் போன்றவற்றையே இந்த பதிவில் எழுதப்போகிறேன்.
(படத்தில் இருப்பவர் ARUNJEEV.என் வகுப்பை தாண்டிய நண்பர் வட்டங்களில் மிக முக்கியமான ஒரு நபர்..இன்னும் மேலாக சொல்லப்போனால் கூடப்பிறவாத தம்பி எனக்கூட கூறலாம்)
*அது 2000ம் ஆண்டு,நான் கல்லூரியில் இணைந்து சில மாதங்களே கரைந்திருந்தன...அவ்வேளையில் பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.அதில் 100m Relay ஓட்டப்போட்டியில் Reserve Runner ஆக தெரிவு செய்யப்பட்டிருந்தேன்.போட்டி ஆரம்பிக்க ஒரு சில நிமிடங்களே இருந்த வேளையில் எங்கள் அணியில் ஒருவரை காணவில்லை....சிறிது நேரம் தேடிப்பார்த்துவிட்டு என்னை ஓடுமாறு சொல்லி Track வரை போய்விட்டேன்...Mithoooooooooooooooonn.....நீளமாக என் பெயர் அழைக்கப்பட்டது....யார் என்று திரும்பிப்பார்த்த போது என் இல்லப்போறுப்பாசிரியை....காணாமல் போன பையனை தேடி கண்டு பிடித்து கொண்டு வந்து Track இல் விட்டு விட்டு என்னை திரும்பவும் Reserve Runner ஆகவே ஆக்கினர்.......
அன்றோடு விட்டது தான் தடகளப்போட்டிகளை......
(Highlands College-Hatton-Central,Srilanka-Building No-5-Primary Section)
*2001ம் ஆண்டு...நான் அந்த நேரம் தரம் 6இல் படித்துக்கொண்டிருந்தேன்...அன்றைய தினம் என் பிறந்தநாள்...வகுப்பாசிரியை வகுப்பிற்கு வந்ததும் விஷியத்தை சொல்வதற்காக எழுந்து நின்றேன்...அவ்வளவு தான்.அவர் என்ன நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை...கையில் வைத்திருந்த கொடிப்பிரம்பில் விட்டு விலாசித்தள்ளி விட்டார்.....என்னையும் இன்னொரு நண்பனொருவனையும் "முட்டிக்கால்"போட வைத்துவிட்டு ஏனைய மாணவர்களை கூட்டிக்கொண்டு வெளியே சென்று கற்பிக்க ஆரம்பித்து விட்டார்.....என் கண்களில் இருந்து வழிந்தோடியது கண்ணீர்.....அருகில் இருந்த ஒற்றை நண்பன் என்னை சமாதானப்படுத்தினான்....அவன் RAJEEV...1ம் பாடம் முடிவுக்கு வந்த பின் கூட்டிச்சென்ற மாணவர்களோடு வகுப்பறை வந்து சேர்ந்தார் ஆசிரியர்.....என்னையும்,நண்பனையும் இடத்திற்கு போகச்சொன்னார்...இடத்திற்கு சென்ற நான் வீட்டில் வாங்கிக் கொடுத்த இனிப்புப் பண்டங்களை தூக்கிக் கொண்டு ஆசிரியரிடம் சென்றேன்...அந்த நொடியில் தான் செய்த தவறெண்ணி வருந்தினார் ஆசிரியர்....என்ன தான் அவர் செய்த தவறு அந்த நொடியில் உணர்த்தப்பட்டாலும் பிறந்தநாளும் அதுவுமாக காலையிலேயே வாங்கிய அந்த அடியும்,தண்டனையும் என்றும் என் மனம் விட்டகலாது........
(Highlands College-Hatton-Central,Srilanka-Upper Section Main Entrance-New Building on Left,Office @ Center,IT Centre on Right)
*2002ம் ஆண்டு நினைவில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு பெரிதாக,சுவாரஸ்யமாக எதுவும் நடந்ததாக என் நினைவில் இல்லை....இருந்தாலும் அப்போதைய கால கட்டத்தில் எங்களுக்கு வகுப்பாசிரியராக வந்தவர் எங்களுக்கு கொடுத்த அடி மாத்திரம் மறந்தபாடில்லை....அந்த நேரத்தில் அவர் ஒரு கொடுமைக்காரராக எங்கள் பார்வைக்கு தென்பட்டாலும்,..இன்று என்னை எங்கு கண்டாலும் நலம் விசாரிக்கும் ஒரு நல்ல மனிதராக மாறாத எங்கள் பார்வைக்கு தெரிகிறார்.......
*நான் பாடசாலை கிரிக்கட் அணியில் இணைந்தது இவ்வருடம் தான்.
(New Building-Highlands College Hatton,(எங்கள் Commerce ராஜதானி)Srilanka)
* 2003ம் ஆண்டு முதல் முறையாக மாணவத்தலைவணாக தேர்ந்தெடுக்கப்பட்டேன்..
*எங்கள் அணி பல சாதனைகளை செய்த ஆண்டாக இது மாறியது.அதாவது 19 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது,வெறும் 10 ஓவர்களுக்கு மாத்திரம் முகம் கொடுத்து 127 ஓட்டங்களை பெற்றது.....என்று கிரிக்கட் இற்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆண்டாக இது மாற்றப்பட்டிருந்தது.....
*இன்னும் ஒரு சுவாரசியமான நிகழ்வு கூட நடந்தது...இறுதியாண்டு பரீட்சையில் சமூகக்கல்வி பாடத்தில் என் வகுப்பில் நான் உட்பட 14 பேர் 100 புள்ளிகளை பெற்றது.....
(Our Principal Mr.S.Wijaysingh @ His Office)
*2004 ம் ஆண்டு..ஒரு மாணவத்தலைவனாகவும் வகுப்பறையில் ஓர் மாணவனாகவும் காலம் கழித்த சாதாரண ஆண்டாகவே நகர்ந்தது...எனினும் கட்டை காற்சட்டை அணிந்து கல்லூரி சென்ற இறுதி ஆண்டு அது என்பதால் 2004 சற்று மெதுவாகவே நகர்ந்தது.......
(Main Hall-Highlands College (Upper Section) Hatton,Srilanka)
* 2005ம் ஆண்டு...முதல் முறையாக நீண்ட காற்சட்டை அணிந்து பாடசாலை சென்ற ஆண்டு....10ம் வகுப்பு பாடங்கள் சற்று சுமையாகவே இருந்தன...இருந்தாலும் ஒரு முறுக்கோடு வெற்றிகரமாக கற்று முடித்தோம்.....இவ்வாண்டில் தான் தமிழ் மீது அக்கறை கொண்டேன்...தமிழுக்கென்று தனியான பிரத்தியேக வகுப்புகளுக்கு சென்றேன்...தமிழ் மீது அக்கறை கொண்டதாலோ என்னவோ தமிழ் ஒரு இலகுவானதொரு பாடமாக மாறிய அற்புத ஆண்டு....சிறு சிறு சண்டைகள் வந்து வந்து மாயமாய் மறைந்து கொண்டிருந்த நேரம்.....அடுத்த வருடம் வரப்போகும் O/L பரீட்சையை நினைத்து அநேகரின் முகத்தில் ஒரு வித தவிப்பு,பயம்,எதிர்பார்ப்பு........ஹீ ஹீ.........அப்டியெல்லாம் ஒன்றும் இருக்கவேயில்லை.....காரணம் எங்கள் மீதும்,ஆசிரியர்கள் மீதும்,குறிப்பாக கல்லூரி மீதும் வைத்திருந்த நம்பிக்கை......வேகமாக கரை புரண்டோடியது 2005....
(Laboratory Complex-Highlands College-Hatton,Central,Srilanka)
*2006...எங்கள் பல பேரின் வாழ்க்கையை தீர்மானிக்கப்போகும் ஆண்டு.....சின்சியரான படிப்பில் பாதி ஆண்டு ஓடி விட்டது....அன்று திகதி June 30....பாடசாலையின் பரிசளிப்பு விழா முதல் நாள் தான் நடந்து முடிந்திருந்தது.....விழாவை நடத்தி முடித்த களைப்பினால் பெரும்பாலான ஆசிரியர்கள் அன்று பாடம் நடத்த வில்லை.....கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு மெதுவாக மேசையில் தாளம் தட்டி பாடல் பாட ஆரம்பித்தோம்.....நேரம் செல்ல செல்ல சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி அது Baila வாக மாறியது....கொஞ்ச நேரத்தில் வகுப்பின் யன்னலிநூடாக யாரோ பார்ப்பது போல தெரிய....எட்டிப்பார்த்தால்.....அதிபர்.......................அடி.....அடி...அடி....
அதிலும் குறிப்பாக Kaushigan எனும் நண்பனுக்கு "நீ டொக்,டொக்,டொக்டர் மகன் தானே"என்று சொல்லி சொல்லி அடி விழுந்தது......அவர் டொக் என்று ஒவ்வொரு முறை சொல்லும் போதும் ஒரு அடி விழுந்தது.......அதிபர் பார்த்துக்கொண்டிருக்கும் போது பாடிய பாடல்-"கிழிஞ்ச பாயில் கவுந்து படுக்கும் போது உன் கனவுல கிளியோபட்ரா வந்தா லவ் இல்ல,ஜவுளி கட பொம்மைய பாக்கும் போது உன் புத்திகுள்ள கவுளி கத்தும் அதுவும் லவ்விள்ள"பாடலை அந்த நேரத்தில் பாடிக்கொண்டிருந்தது VIGNESH.நீங்களே சொல்லுங்க அவர் அடிக்காம என்ன தான் பண்ணுவாரு??????
*2006 இல் நடந்த இன்னுமொரு முக்கியமான நிகழ்ச்சி....எங்கள் நாடகம்....அதைப்பற்றி தான் ஏற்கனவே ஒரு பதிவே எழுதினேனே.....அதை வாசிக்கத் தவறியவர்கள்.....இங்கே "கிளிக்"கவும்...
*தொடர்ந்து வந்தது G.C.E O/L.....இறைவன் அருளுடன் அதையும் கூட வெற்றிகரமாக முடிக்கக் கூடியதாக இருந்தது....
(அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்....Highlands College,Hatton)
G.C.E O/L பரீட்சைக்கு பின் A/L இல் இணைவதற்காக 2007 ஆகஸ்ட் மாதம் தான்....முதல் முதலாக பாடசாலைக்கு சென்றோம்....புது நண்பர்கள்,புதிய பாடம்,என எல்லாமே புதுசாக இருக்க சிலபழைய நண்பர்களை இழந்த கவலையோடும் ஆரம்பித்தோம் எங்கள் உயர்தரத்தை....
"புதிய"எனும் சொல் தந்த உற்சாகத்தால் 2007 இல் மிகுதியிருந்த மாதங்களும் எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல் நகர எங்களை வரவேற்றது 2008......
(Ramzan,Kisho.Vinodhan,Roshanthini,Rifaya,Saranya,Niroshana)
2008 மிக ஆரம்பத்திலேயே அதிபருக்கும்,எங்கள் வணிகப்பிரிவு ஆசிரியருக்கும் பிரச்சனையோடு ஆரம்பித்தது.....நாளடைவில் அந்த பிரச்சனை பெரிதாகி வணிகப்பிரிவு 2 குழுக்களாக மாறின....
1.குறிப்பிட்ட ஆசிரியரிடம் வகுப்பிற்கு செல்லும் மாணவர்கள்.
2.அதிபர் ஒழுங்குபடுத்தி கொடுத்த ஆசிரியரிடம் வகுப்பிற்கு செல்லும் மாணவர்கள்....
நான் இரண்டாவது குழுவில்.....இதனிடையே பல்வேறு ஊடல்கள் மாணவர்கள் மத்தியில் "ஏற்படுத்தப்பட்டன"....
பதின்ம பருவம் யோசிக்கத்தவறியது......சாதகங்களும் பாதகங்களும் இரு குழுக்களின் இடையேயும் சிதறிக்கிடந்தது.....
அந்த வருடம் முழுவதும் இதே போல் தான் கரைந்து சென்றது.....
(Ratheesh,Thiliban,Kisho,Sugeevan)
2009ம் ஆண்டின் ஆரம்பப்பகுதி கடந்த ஆண்டை போலவே நகர்ந்தது..எனினும் சுதாரித்துக்கொண்ட நாங்கள் இருப்பது இன்னும் வெறும் 7 மாதம் தான் எனும் உண்மை புரிந்து பிணக்குகளில் இருந்து மீண்டு ஒருவருக்கொருவர் நல்ல முறையில் பழக ஆரம்பித்து விட்டோம்...
காலம் சுழன்றது...வந்து சேர்ந்தது March 2009..அது Bigmatch Season...11வது மலைகளுக்கு இடையிலான மோதல் (Battle of the hills)ஒழுங்கு செய்யப்பட்டது ..அவ்வருடத்தின் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் அணித்தலைவராக நான் தெரிவு செய்யப்பட்டேன்....
போட்டி நடைபெற்றது...2ம் நாள் முடிவின் போது எதிரணி 49 ஓட்டங்களுக்கு 6 ஓட்டங்களை இழந்திருந்த வேளையில் போட்டி வெற்றி தோல்வி இன்றிய நிலையில் முடிவிற்கு வந்தது.....
அதன் பிறகு படிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்....அதன்படியே முக்கியத்துவம் அளித்தோம்...
உயர்தர பரீட்சை நடைப்பெற்றது கடவுள் புண்ணியத்தில் அதிலும் வெற்றி கண்டோம்.....
இறுதி நாள் பாடசாலையை விட்டு வெளியேறிய அந்த நொடிப்பொழுது இன்றும் என் மனதில் ஓர் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறது.
அந்த உணர்வை மறப்பது என்பது மரணப்பொழுதிலும் முடியாத ஒன்று...
மீண்டும் பள்ளிக்காலம் என்பது ஒருபோதும் நிறைவேறாத ஒன்று...
அந்த பள்ளிக்காலம் தந்த இன்பமான சில நினைவுகளுடனும்,பல புகைப்படங்களுடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் இவன்-Mithoon.J
(11 th Battle Of The Hills 2009.Hghlands vs Sripadha @ Dmcc)