Sunday, November 14, 2010

மைனா......


ட்ரைலர் இல் போட்ட சுவாரசியமான காட்சிகளும் ஒரு குறிப்பிட்ட பாடலின் தாளம் போடும் இசையும் இப்படத்தை பார்த்தே தீர வேண்டும் என எனக்குள் ஆசை லேசாக எட்டிப்பார்த்தது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தர்ப்பமும் சிறப்பாக அமைய என் வீட்டு தியேட்டரில் முதல் முறையாக எனக்கு மட்டும் சிறப்புக்காட்சி காண்பிக்கப்பட்டது.அதாவது நான் மட்டுமே தனியாக இருந்து இந்த படத்தை பார்த்தேன் னு சொல்ல வந்தேங்க.....

இப்போ படத்துக்கு வரலாம்-
இந்தப்படத்தை பார்க்கும் போது தமிழ் சினிமா ஒரு நல்ல இடத்தினை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

இப்படிப்பட்ட படத்தை தம் பேனர்கள் மூலமாக வெளியிட தீர்மானித்த Red Giant Movies-உதயநிதி ஸ்டாலின்,AGS Entertainment-கல்பாத்தி S.அகோரம் ஆகியோர்களுக்கு முதலில் ஒரு சல்யூட்.

கதை ஆரம்பிப்பது தீபாவளிக்கு முதல் நாள் துணை சிறை அலுவலர் பாஸ்கர் வீட்டில் ஒரு தொலை பேசி உரையாடலுடன்.

சற்று மெதுவாக கதை நகர ஆரம்பிக்க லேசாக சூடு பிடிக்க தொடங்கியது மைனா....கிராமத்து பாஷைகள் சூப்பர்......சிறைக்கைதி தப்பியதால் தீபாவளியை கொண்டாட முடியாமல் தவிக்கும் போலீஸ்காரர்களின் நடிப்பு உண்மையான போலீஸ்காரர்களின் நிலையை பிரதிபலிப்பதாக அமைந்திருப்பது சிறப்பு.

கதையின் நாயகன் சுருளி தன் காதலி மைனா வை அடைய பட்டிருக்கும் கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை.

சுருளியும் மைனா வும் சேர்ந்தபின் கஷ்டப்பட்டு பலகாரக்கடை ஆரம்பித்து பெரியாள் ஆவது போன்று காட்டி விட்டு சட்டென்று அது கனவு என தெரியவந்ததும் நாயகி மைனா "3 னே நிமிஷ பாட்ல பெரியாள வந்துட்டா எவ்வளோ நல்லாருக்கும்"னு கேக்குற இடம் கைதட்ட வைக்கிறது.

சுருளியை கைது பண்ணி போலீஸ்காரர்களான பாஸ்கரும் ராமையாவும் நாயகி மைனா வுடன் வழிமாறி மூணாரு வந்து சேர்வது ரசிக்கும் படியாக உள்ளது.

தம்பி ராமையா அந்த கேரக்டர் ஆகவே படம் முழுவதும் வாழ்ந்துள்ளார். மைனாவிட்கு காலில் அடிபட்டதும் அவளை தூக்கிக்கொண்டு பல் மருத்துவமனைக்கு சென்று டாக்டரை மிரட்டி வைத்தியம் செய்யும் இடத்திலும் போலீஸ் இற்கு எதிராக நடு ரோட்டில் சாலை மறியல் செய்யும் இடத்திலும் நாயகன் விதார்த்தின் நடிப்பு சிறப்பாக அமைந்துள்ளது.

தொடர்ந்து வரும் பஸ் பாடல் பார்க்கும் அனைவரையும் தாளம் போட வைத்திருக்கிறது.

பஸ் விபத்துக்குள்ளான பிறகு நடக்கும் அந்த குறிப்பிட்ட செயலுக்கு பிறகு பாஸ்கரும் ராமையா வும் சுருளிக்கு நன்றி சொல்லும் காட்சி நெகிழ வைக்கிறது.

சிறைக்கு வந்து சேர்ந்ததும் சுருளியை மற்ற போலீசார் ஆக்ரோஷமாக தாக்குவது அவர்களது மனக்குமுறலை வெளிக்காட்டுகிறது.

ராமையாவின் மனைவி கேரக்டருக்கு உருவம்,குரல் இல்லாத போதும் செல் போனில் அடிக்கடி வாழ்ந்திருக்கிறார்.

இதற்கு பிறகு கிளைமேக்ஸ்....சோகம் இழையோடுகிறது............

கிளைமேக்ஸ் இல் அப்படி என்ன தான் நடந்தது என்பதை தயவு செய்து படத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்....

இயக்குனர் பிரபு சாலமன் இற்கு ஒரு சிறப்பான வெற்றிப்படமாக மைனா அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை....

மைனா திரைப்பட ட்ரைலரை காண இவ்விடத்தில் click கவும்






No comments:

Post a Comment