நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அவுஸ்திரேலிய அணியின் துடுப்பெடுத்தாட்டம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை.
காரணம் இலங்கையின் புதிய இளம் வேகப்பந்து வீச்சாளர் திசர பெரேரா.
திசரவின் பந்துவீச்சினை எதிர்கொள்ள முடியாமல் திக்குமுக்காடிப்போயினர் அவுஸ்திரேலியர்கள்.
அவுஸ்திரேலிய அணியின் ஹெட்டின்,ஹசி இருவரை தவிர ஏனைய அனைவரும் குறைந்த ஓட்டங்களுக்கே ஆட்டமிழந்ததால் 239 ஓட்டங்களுக்கு சுருண்டது அவுஸ்திரேலியா
பதிலுக்கு துடுப்பெடுத்தாட துடங்கிய இலங்கை அணியின் ஆரம்பம் பெரிதளவில்
கைகொடுக்கவில்லை.
வழமை போல சங்கக்கார மட்டுமே 49 ஓட்டங்களை பெற்றார்.
இவரும் டோஹர்டி யின் பந்துவீச்சில் நேரடியாக போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழக்க முடிந்தது இலங்கையின் கதை என்று பலரும் முடிவி கட்டியிருப்பார்.
எனினும் இதற்கு பிறகு ஒன்று சேர்ந்த மேத்திவ்ஸ்,மாலிங்க ஜோடி சிறப்பாக விளையாடி 9வது விக்கட்டுக்காக 138 ஓட்டங்களை பெற்று உலக சாதனையும் படைத்தது குறிப்பிடத்தக்கது.
வெற்றிக்கு 1 ஓட்டம் மாத்திரமே தேவை எனும் நிலையில் மாலிங்க வின் விக்கட் வீழ்த்தப்பட்டது.
1 ஓட்டத்தை பெறுவதற்காக களம் புகுந்த முரளி முதல் பந்திலேயே 4 ஓட்டங்களை பெற்று இலங்கை அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.
ஆட்டநாயகன் விருது 77 ஓட்டங்களை பெற்ற மேத்திவ்ஸ் இற்கு வழங்கப்பட்டது.
இந்திய சுற்றுப்போட்டியில் எவ்வித வெற்றியையும் சுவைக்க தவறிய அவுஸ்திரேலியா இப்போது இலங்கையிடமும் அடிக்கு மேல் அடி வாங்கிக்கொண்டு இருக்கிறது.போகிற போக்கை பார்த்தால் எதிர்வரும் உலககோப்பையின் போது அவுஸ்திரேலிய அணியின் நிலை??????????
No comments:
Post a Comment