கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெறுமா என பரபரப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான் மகேஷ்
ஸ்ரீதர் அலுவலகம் முடிந்து வந்ததும் ரிமோட்டைப் பிடுங்கி டி.வி.யை நிறுத்தினார்.சமையல் செய்து கொண்டிருந்த மனைவியிடம் "இதெல்லாம் நீ பாக்குறதில்லையா?"என்றார் கோபத்துடன்."இப்பதான் கிரைண்டர்ல அரிசி போட்டுருக்கேன் .கிரிக்கட் பார்க்க எங்கங்க நேரம்!"என்று சலித்துக்கொண்டாள் அவள்.
எரிச்சலடைந்த ஸ்ரீதர் "என்ன விளையாடுறீங்களா?பாடத்தை படிக்காம கிரிக்கட் பார்த்துட்டுருக்கான்.இதை கண்டிக்காம,நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க?"என்று காட்டுக்கத்தல் கத்த,அறைக்குள் ஓடிச்சென்று தாழிட்டு படிக்க ஆரம்பித்தான் மகேஷ்.
உடைமாற்றிவந்த ஸ்ரீதர் டி.வி யில் நியூஸ் பார்க்கத்தொடங்கினான்.வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டிய தேதி இன்றுடன் முடிவடைகிறது என்பதை அறிந்ததும் தலையில் கை வைத்து "அய்யோ....."என்றார்.
அருகில் இருந்த ஸ்ரீதரின் அப்பா "தலை வலிக்குதா?" என்றார்.
"இல்லப்பா...வருமான வரி ரிட்டர்ன் சமர்ப்பிக்க மறந்திட்டேன்!"என்றான் ஸ்ரீதர்.
"ஏன்டா....என்னோட பேரன் நாளைக்கு செய்யவேண்டிய வேலைய செய்யலைன்னு திட்டினியே....நீ இன்னைக்கு செய்யவேண்டிய வேலைய கோட்டை விட்டிட்டு வந்திருக்க!"
அப்பா கொடுத்த சாட்டையடியில்,ஸ்ரீதரின் தலை நிமிரவே இல்லை.
நன்றி-விகடன்.
No comments:
Post a Comment