Saturday, November 6, 2010

இன்று கந்தசஷ்டி.


இந்து மக்களால் வருடாவருடம் பின்பற்றப்பட்டு வரும் கந்தசஷ்டி விரதம் இன்று சனிக்கிழமை அனைத்து முருகன் கோவில்களிலும் விசேட பூஜைகளோடு ஆரம்பிக்கப்பட்டது.

உலகெங்கிலும் உள்ள இந்து மக்கள் இன்று காப்பு கட்டி தங்கள் விரதத்தை ஆரம்பித்தனர்.

இவ்விரதம் எதிர்வரும் வியாழக்கிழமை 11.11.2010 வியாழக்கிழமை சூரன்போருடன் இனிதே நிறைவுறும்.

உலகிலே மிகவும் சக்திவாய்ந்த விரதங்களில் கந்தசஷ்டியும் ஒன்று.

மக்கள் அப்பன் முருகனிடம் சரணடைந்து தத்தமது கோரிக்கைகளை முன்வைத்தால் நிச்சியம் பலன் கிட்டும் என்பது ஐதீகம்.


No comments:

Post a Comment