இன்றைய தினம் இந்திய கிரிக்கட் வரலாற்றின் ஊர் முக்கிய நாள் என குறித்துக்கொள்ளலாம்.
நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் பங்கு கொள்ளும் 1வது டெஸ்ட் போட்டி இன்று அகமதாபாத் நகரில் ஆரம்பமானது.
இந்தியாவின் முதலாவது விக்கட் 60 ஓட்டங்களை பெற்றிருந்தபோது வீழ்த்தப்பட்டது.கம்பீர் 21 ஓட்டங்களை பெற்றிருந்த போது ரைடர் இன் பந்துவீச்சில் நேரடியாக போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவின் மதில் சுவர் டிராவிட் சேவாக் உடன் இணைந்து 237 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டார்.
297 ஓட்டங்களை பெற்றிருந்த வேலையில் சேவாக் 177 ஓட்டங்களோடு விட்டோரி யின் பந்துவீச்சில் நேரடியாக் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய டிராவிட் தனது சதத்தை பூர்த்தி செய்த போது ஓர் சாதனையும் படைத்தார்.Sir.Don Bradman இன் 30 டெஸ்ட் சதங்களை தாண்டியமையே அதுவாகும்.
104 ஓட்டங்களை பெற்ற வேலையில் டிராவிட் மார்டின் இன் பந்துவீச்சில் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.
லக்ஸ்மன் மற்றும் சச்சின் தமது இணைப்பாட்டத்தை ஆரம்பித்த வேலையில் 329 ஓட்டங்களோடு ஆட்டம் இடை நிறுத்தப்பட்டது.
ஆட்டம் இடை நிறுத்தப்படும் போது இந்தியா 329 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை இழந்திருந்தது.
ஆடுகளத்தில் சச்சின் 13 ஓட்டங்களுடனும் லக்ஸ்மன் 7 ஓட்டங்களுடனும் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கின்றனர்.
No comments:
Post a Comment