Sunday, September 21, 2014

ஆட்டம் ,,, ஓர் அலசல்


குருநாகல் மாநகர வீதிகளின் வாகன நெரிசல் என்பது இன்றைய நாட்களின் தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது,,அளவுக்கு அதிகமாகவே வாகனங்களின் நடமாட்டம் அந்நகர சாலைகளை ஆக்கிரமிக்க துவங்கி வெகுநாட்களாகிவிட்டன, வழமை போலவே அன்றும் அதிக பட்ச வாகன நெரிசலில் சிக்கி செய்வதறியாது முழித்துக்கொண்டிருந்தேன்.

"வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா முகம் நனைக்கும்" - இசைஞானி பாடல்  காதுகளில் மெதுவாய் மெருகேற்ற, பாதையின் மறுமுனையில் நடந்து சென்ற இரண்டு நபர்கள் என் கண்ணில் பட்டனர்,

இது....இவர்களை நான் எங்கேயோ...ஆங்...இது அவர்களே தான்,,, சென்ற வாரம் என் நண்பன் கோகுலனின் குறும்படத்தில் நடிதிருந்த கோகுலனின் நண்பர்கள் தான் இவர்கள்!!!

இதற்கு முன் அறிமுகமில்லாத இரண்டு பேரை பார்ததும் அடயாளம் கண்டு கொள்ள வைத்த அந்த குறும்படம்,,,,,,,



ஆட்டம்,,எனக்கு தெரிந்து இது கோகுலனின் மூன்றாவது குறும்படமாக இருக்க வேண்டும், இதற்கு முன் ராதாவின் காதல், ஸ்விட்ச் என இரு வேறுபட்ட கதைக்களங்களை மையமாக கொண்டு இரு குறும்படங்கள் வெளிவந்திருக்கின்றன,,

ஆட்டம் - ராகுல்,ஷிவா,சுருளி,ஏகா,கவிதா(தொலைபேசி வாயிலாக) கிங் பின் ஆகிய பாத்திரங்களை மையமாக கொண்டு நகர ஆரம்பிக்கின்றது கதை, ராகுல் - சிலபல வருடங்களாக தன் தகுதிக்கேற்ற வேலை தேடி கிடைக்காமல் ஆறு வருடங்களுக்கு பிறகு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கவும் வீசா மற்றும் கடவுச்சீட்டை பர்ஸில் வைத்து தொலைபேசியில்  தன் நண்பி/காதலியுடன் கதைத்தபடி பஸ்ஸில் ஏறுகின்றான்,, இறங்கும் போது பர்ஸ் மிஸ்ஸிங்!!!

பதட்டத்தின் உச்சியில் ராகுல் நண்பன் ஷிவா விற்கு தகவல் அளித்து வழமையாக சந்திக்கும் இடத்திற்கு வர சொல்லி, ஷிவா வும் அவ்விடம் வர கதை அதன் பிறகு சற்று வேகமாகவே நகர ஆரம்பிக்கிறது ஆட்டம்...

ராகுலின் பர்ஸ் மீண்டும் கிடைத்ததா/? என்ன ஆனது என்பதை நான் கிறுக்கி தெரிந்து கொள்வதை விட நீங்களே பார்த்து ரசிப்பது அதி உத்தமம்,

படத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத லாஜிக் குகள்\ இருக்கத்தான் செய்கின்றன,, அதில் கிங் பின் எதற்காக ராகுலின் பாஸ்போர்ட், வீசாவை ஆட்டயப்போடனும்? ஏகா விற்கும் கிங் பின் இற்கும் இடையிலான சம்பந்தம்??
இது போல நிறைய இருக்கின்றன,,இவை அனைத்தும் கோகுலனின் அடுத்த குறும்படத்தை இன்னும் கூர்மயாக்கும் கேள்விகளாக இருக்கும் என நம்புகின்றேன்,

கோகுலனை தவிர ஏனையவர்களுக்கு இது முதல் படம் என நினைக்கின்றேன்,எதிர்வரும் காலங்களில் அவர்களின் நடிப்பில் தேர்ச்சி அதிகமிருக்கும் என நினைக்கின்றேன்,,

கிளைமாக்ஸ் டுவிஸ்ட் சூப்பர் டூப்பர் ரகம்,, ஏகாவிடம் ராகுல் எதிர்ப்பார்க்கா நேரம் துப்பாக்கியை நீட்டுவதும்,அந்த துப்பாக்கி ராகுலின் கையில் எப்படி வந்தது என்பதற்க்கு சிறிய பிளாஷ்பேக், என்பன இலங்கை வாழ் மலையக தமிழர்களின் தரமான சிந்தனைக்கு ஓர் எடுத்துக்காட்டு,,

இனிவரும் காலங்களில் கோகுலன் கூட்டணியின் தரமான குறும்படங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் சாதாரண பாமர ரசிகனாய் விடைப்பெறுகின்றேன்,,

இவன்
J.Mithoon