Thursday, March 29, 2012

ஆவி அனுபவம்

இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு மாத காலத்துக்கு மேல் ஆகி விட்டது...ஆனால் நடந்தது என்ன என்பது மட்டும் இன்னும் எனக்கு சரியாக புரிந்த பாடில்லை

ஒரு வருட காலமாக அந்த குறிப்பிட்ட காட்டு வழிப்பாதையை குறுக்கு வழியாக (short cut) பயன்படுத்திக்கொண்டிருந்தேன். பேருக்கு தான் குறுக்கு வழி...ஆனால் அந்த காட்டு வழிப்பாதயினூடாக கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் பிரயாணிக்க வேண்டும்..

அன்று வத்துபிட்டிவல எனும் நகரில் வேளை..முடிய 06.30 போல் ஆகிவிட்டது..இறுதி வைத்தியரை பார்த்துவிட்டு அந்த வழியாக பிரயாணத்தை ஆரம்பித்தேன்

அந்த காட்டு வழிப்பாதையை முழுமையாக கடந்து முடிக்கும் வரை லேசாக மழை தூரிக்கொண்டே இருந்தது.....ஒரு 50 நிமிட பயணத்திற்கு பின் "கரவனெள்ள"எனும் இடத்தை வந்தடைந்தேன்...இருட்டில் அந்த காடுப்பதையில் வந்தது களைப்பாக இருந்தபடியால் அங்கிருந்த ஓர் தேநீர் கடைக்கருகில் வண்டியை நிறுத்திவிட்டு தேநீர் அருந்தி களைப்பாற்ற இறங்கிச் சென்றேன்...

தேநீர் அருந்திவிட்டு அந்த கடையிலேயே முகத்தை கழுவி விட்டு மீண்டும் வண்டியில் ஏறி பயணத்தை ஆரம்பித்தேன்...

சரியாக 7km வந்திருப்பேன்...திடீரென ஒரு பெண்ணுருவம் வண்டிக்கு முன்னாள் விழுந்தது போல ஏதோ நடந்தது..அந்த நிமிடம் திடுக்கிட்டேன்...அப்போது தான் ஒரு உண்மை எனக்கு புரிந்தது...

அந்த நிமிடம் நான் நின்றுகொண்டிருந்த இடம் நான் ஏற்கனவே தாண்டி வந்த காட்டு வழிப்பாதை.....ஆனால் நான் தேநீர் அருந்திய இடத்தில இருந்து மறுபக்கம் செல்லாமல் மீண்டும் இந்த இடத்திற்கு எப்படி வந்தேன் என்பது இந்த நொடி வரை எனக்கு புரியாத புதிர் தான்.....

அதன் பிறகு மீண்டும் அந்த இடத்திலிருந்து வீடு வந்து சேரும் வரை நான் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை...



இது உண்மையாகவே ஆவிகளின் களியாட்டம் தானா???இல்லை அன்று காலை வேளையில் இருந்து தொடர்ந்து வேளை செய்த களைப்பினால் ஏற்பட்ட டிப்ரஷனா அட அதாங்க மனப்"பிராந்தி"யா!!! னு இன்னும் கூட என்னால் யூகித்துகொள்ள முடியவில்லை...

இந்த விஷயம் சம்பந்தமா நெருங்கிய நண்பர்கள் கிட்டேயே நான் ஏதும் பேசிக்கொள்ள வில்லை காரணம் அந்த சம்பவத்தை மீண்டும் மீண்டும் என்னால் நினைத்து பார்க்கும் போதே ஏதோ போல இருக்கும்...

பின்ன எப்புடி வலை ல பதிவா எழுத தைரியம் வந்துச்சு னு பாக்குறீங்களா???
நேற்றைய தினம் அதே வத்துபிடிவல நகரில் இருந்து அதே காட்டு வழியாக இரவு எட்டு மணியளவில் தனியாக வந்தேன்...தெய்வாதீனமாக அன்று நடந்தது போல் எதுவுமே நடக்கவில்லை...அந்த தைரியத்தில் தான் எழுதிக்கொண்டிருக்கின்றேன்...

அன்று நடந்தது போல் இன்னொரு தடவை இனிமேல் நடந்துவிடாது இருக்கும் படி இறைவனை பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறான பாதைகளில் இரவு நேர பயணங்களை இயலுமான அளவு குறைத்துகொல்லுமாறு வேண்டுகோள் விடுத்து விடைப்பெறுகிறேன்.....

இப்படிக்கு-Mithoon Jeyaraj.


Sunday, March 4, 2012

எத பத்தி பேசலாம் பாஸ்???

முற்பட்ட நாகரிகத்திற்கும் பிற்பட்ட நாகரிகத்திற்கும் அப்படி என்ன தான் பெருசா வித்தியாசம் இருந்திட போகுது ன்னு யோசிச்சுட்டிருந்த போது தான் மனசில பல விஷயங்கள் ஓட ஆரம்பிச்சுது....அது மனசுக்குள்ள ஓடி என்ன ஆஸ்கர் அவார்ட் ஆ வாங்கபோகுது??? அத விட்டுறலாம்...உலக நடப்பு எத பத்தியாவது கதைக்கலாம் ன்னா இப்ப பீக் ல இருக்கது "CB"கிண்ண முக்கோண தொடர் தான்...ஆனா அதா பத்தி கதைச்சா இங்க பல நண்பர்களுக்கு அனாவசியமா கோவம் வரும்...அதனாலேயே வேறு எதபத்தியாவது கதைக்கலாம்...

ஆங்....ஜெனிவா மனித உரிமை மாநாடு பத்தி பேசலாமா???ஐயோ வேணாம் கடந்த திங்கட்கிழமை வேளை நிமித்தமாக மாத்தளை நகருக்கு சென்றிருந்தேன்...அங்க இந்த ஜெனிவா மாநாடு சம்பந்தமா ஏதோ போராட்டம் நடந்துட்டிருந்துச்சு,,,அந்த வேகாத வெயில் ல கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலமா ட்ராபிக்.....இந்த மாநாடு என்ன அந்த வெயில் ல படுத்தின பாடே போதும்...அதனால வேறு எதாவது சம்பந்தமா பேசலாம்!!


சச்சின் 100வது சதம் பத்தி பேசலாம் ன்னு பாத்தா அது என்னவோ தண்டவாளம் போல நீண்டுகிட்டே போகுது..தண்டவாளம் கூட ஏதோ ஒரு இடத்துல முடிய தான் போகுது.....பாக்கலாம்...அனால் ஒரு விஷியம்.....சச்சின் அடிக்கபோற அந்த 100 வது சதம் சாதாரணமா இருக்காது...அது அவர் கிரிக்க்கட் வாழ்க்கைக்கு கிரிக்கட் உலகம் சூடப்போகும் தங்க மகுடம்....ஒரு மைல்கல்....இப்புடி பல விஷியங்கள சொல்லிகிட்டே போகலாம்..இத பத்தி கதைச்சா கூட சில பேரின் வயித்துல புளிய கரைச்சு ஊத்தின மாதிரியே இருக்கும்..அதனால இதுவும் வேணாம்...


ஒரு சூப்பர் மேட்டர் இருக்கு....ஒரு மாசத்துக்கு முன்னால அட்டகாசமா ஒரு விஷயம் நடந்துச்சு...கண்டி மாநகரத்துல இரவு ஒரு 7.15 போல இருந்திருக்கும்...வேளை எல்லாம் முடிச்சுட்டு வண்டிய எடுத்துட்டு வீடு நோக்கி கிளம்பினேன்..ஒரு அஞ்சு நிமிஷம் தான் போயிருக்கும்..படுபாவி அந்த ட்ராபிக் போலீஸ் என்னை முடக்கினார்...எதுக்குன்னு புரியாம நானும் வண்டிய நிறுத்திட்டு இறங்கினேன்...அந்த மனுஷன் என்னன்னா புதுசா ஒரு குத்தத்த சொல்லி என் அனுமதிப்பத்திரத்தை வங்கி தன்னிடம் வைத்துக்கொண்டார்..இதுல என்ன விஷயம் னா அடுத்த நாளோ இல்ல ஒரு 2,3 நாளுக்குள்ளவோ நான் என் அனுமதி பத்திரத்தை மீட்க அந்த போலீஸ் நிலையத்துக்கு போயிருந்தா ஒரு பிரச்சனையும் இருந்திருக்காது...அனால் நான் எனக்கு அந்த தண்டப்பணம் எழுதி 13 வது நாள் தான் மீட்க போனேன்...பாவிப்பயலுக அதுக்குள்ள இந்த சாதாரண விஷயத்துக்கு என் பேர்ல வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றத்துக்கு போய் தான் அனுமதிபத்திரத்தை மீட்கனும் என்னும் நிலைமைக்கு ஆளாக்கிட்டானுங்க...

நீதிமன்றதுல தான் நல்ல நல்ல கூத்துக்கள் எல்லாம் அரங்கேருச்சு!!!!!
ஒரு போலீஸ்கார்!!! க்கு நீதிபதி விட்டு விளாசு விளாசு ன்னு விலாசிட்டார்...பாவம் போலீஸ் காரர்களின் நிலை இந்தளவுல தான் இருக்குன்னு அன்னைக்கு தான் எனக்கு தெரிஞ்சுது ...போலீஸ் காரவுகளாவது பரவாயில்ல..நம்ம வக்கீல் கள் இருக்காங்களே..அவங்க நிலைமை இத விட கஷ்டமா இருக்கு..காலங்காத்தால நீதிமன்றத்துக்கு வரும் ஒவ்வொருவரையும் பிடிச்சு உங்களுக்காக நான் வாதாடுறேன் ன்னு கேட்டு கேட்டு களைச்சு போயிருந்தாங்க...

என் பெயர் வாசிக்கப்பட்டது...குற்றவாளி கூண்டில் ஏறி நின்றேன்..நீதிபதி குற்றத்தை சொல்லி "WERADHIKARUDHA NIWERADHIKARUDHA" அதான் சிங்கள மொழியில் நீர் குற்றவாளியா சுத்தவாளியா னு கேட்டார்...நான் குற்றத்தை ஒப்புக்கொண்டதும் 2000 ரூபா தண்டப்பணத்தை கட்டிய பிறகு விடுவிக்கப்படுவார் ன்னு தீர்ப்பளித்தார்..

இதுக்கு பிறகு என்ன நடந்துச்சு ன்னு நான் சொல்லியா தெரியணும்???என்ன அங்க இருந்த மினி ஜெயிலுக்குள்ள அடைச்சுட்டாங்க..என்னுடன் வந்த நண்பன் 2000 ரூபா தண்டபணத்தை கட்டி ரசீதை கொண்டு வந்து அங்கே இருந்த கணக்காளரிடம் சமர்ப்பித்ததும் அவர் என்னை விடுவித்தார்...அந்த கூண்டுக்குள் என்னுடன் தனியார் பேருந்து சாரதிகளும்,முச்சக்கர வண்டி சாரதிகலுமே அதிகமாக இருந்தனர்..

எல்லாம் சரி அப்புடி என்ன தான் குற்றம் புரிந்திருப்பான் னு யோசிக்குரீங்களா....மாநகர எல்லைக்குள் "HEAD LIGHT" பாவித்தமையே நான் செய்த அந்த குற்றம்...எனவே இதன் மூலம் நான் வாகன சாரதிகளுக்கு கூற விரும்புவது என்னவென்றால் தயவு செய்து நம்ம ட்ராபிக் போலீஸ் காரர்கள் நிற்கும் இடத்திலாவது கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொண்டு சம்பாதிக்கும் பணத்தை மிச்சம் பிடுச்சு கொள்ளுங்க என்பது தான்....

அப்பாடா ஒரு வழியா ஒரு மேட்டர் பற்றி கொஞ்சம் பேசியாச்சு..பேசினது மட்டுமில்லாது கடைசியா ஒரு கருத்தையும் சொல்லியாச்சு.....

வேறு எதைப்பத்தி பேசலாம்???இல்ல வேணாம்..இப்போதைக்கு என் எழுத்துக்கு சின்னதா ஒரு இடைவேளை குடுத்துடலாம்....

அடுத்த பதிவில் சந்திக்கலாம் நண்பர்களே...
Mithoon Jeyaraj...