Saturday, August 20, 2011

ஒப்பாரி கோச்சி

நேற்றைய தினம் அரை நாள் வேலை...வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு செல்லலாம் என்னும் முடிவு..வீட்டிற்கு போகப்போகிறோம் என்ற எண்ணம் அவ்வப்போது புது உற்சாகத்தை அளித்துக்கொண்டே இருந்தது....வண்டியை போட்டுவிட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு பஸ்சில் போகலாம் என்பது என் முடிவு...நேரம் 1 மணியை தொட்டது..நண்பன் ஒருவனின் வீட்டில் வண்டியை பார்க் செய்து விட்டு புறக்கோட்டை நோக்கி 187 இல் பயணம்....சனிக்கிழமை ஆகையால் வாகன நெரிசல் சொல்லிக்கொள்ளும் அளவு இல்லை..சரியாக 22 நிமிடங்களில் புறக்கோட்டை பஸ் தரிப்பு நிலையம்...அங்கு நண்பன் தக்க்ஷன் எனக்காக புறப்பட தயாராக இருந்த வண்டியில் ஓர் இருக்கையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.....

வண்டி புறப்பட்டது....வேண்டிய பச்சை நிற அப்பிளை ஆளுக்கு பாதி கொறித்தாகி விட்டது.அடுத்த கட்ட நடவடிக்கை???? வழமையாக ஊர் செல்லும் போது அந்த 129 கீ.மீ. தூரத்தையும் பாடல் கேட்டுக்கொண்டே கடப்பது வழக்கம்...இம்முறையும் அதையே செய்யலாம் என கைப்பேசியை வெளியில் எடுத்த போது தவறி என் கண்ணில் பட்டது தான் "ஒப்பாரி கோச்சி"...

தக்க்ஷன் ஏற்கனவே இந்த ஒப்பாரி கொச்சியை பற்றி என்னிடம் கூறியுள்ளான்..ஆனால் நேற்றைய நாள் வரை வாசிக்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்க வில்லை...என் மனம் சட்டென்று மாறியது...கைப்பேசியை நண்பனிடம் கொடுத்து விட்டு ஒப்பாரி கோச்சி யை கையில் எடுத்தேன்...

 பஸ் வண்டி வழமைக்கு மாறாக வேகமாக நகர தொடங்கியது...ஒப்பாரி கோச்சி யும் வித்தியாசமாக நகர தொடங்கியது...உண்மையை சொல்வதானால் அந்த கதையை வாசிக்க வாசிக்க நம் மலையக வாழ் தோட்டப்புற மக்கள் அன்றும் இன்றும் படும் சொல்லன்னா துயரங்கள் என் கண் முன் வந்து வந்து போயின..."உடரட்ட மெனிக்கே" "ஒப்பாரி கோச்சி" ஆன கதை நான் சொல்லவதை விட நீங்களே படித்து பார்த்தீர்களானால் இன்னும் சுவாரசியமாக இருக்கும்,,,,இந்த கதை தொகுப்பு முற்றும் முழுவதுமாக நம் மத்திய மலை நாட்டை கருவாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது...இந்த தொகுப்பில் என்னை இன்னும் வெகுவாக கவர்ந்த சிறுகதை "வழித்துணை".....
இந்த கதை நான் நேரில் பார்த்த அற்புதமான ஆசிரியர் அமரர்.உயர்திரு.திரு ஜீவராஜன் அவர்களுடையது...சொல் நடைகளும் வசன அமைப்புகளும் அப்படியே அவரை நினைவு படுத்தின...அவரின் இழப்பு மலையக கல்வி எனும் தூணில் விழுந்த ஓர்வெடிப்பு....

கதைகள் கடைசி கட்டத்தை நெருங்கின...என் உடல் சிலிர்த்தது...யன்னல் வழியாக வெளியே எட்டிப்பார்த்தால் பள்ளத்தாக்குகளும் மலை முகடுகளை முத்தமிடும் மேக கூட்டங்களும் கொஞ்சி விளையாடிக்கொண்டிருந்தன...என் ஊரை நெருங்கி விட்ட உற்சாகம் எனக்குள் ஊரிப்போனது......எத்தனையோ பஸ் பயணங்களில் இப்பயணத்தை "ஒப்பாரி கோச்சி" ஒரு மறக்க முடியாத பயணமாக மாற்றி விட்டது...

ஆதிக்கங்கள் நிறைந்த இம்மண்ணில் உண்மையான சுதந்திர காற்றை எப்போது தான் சுவாசிக்க போகிறேனோ என எண்ணி புத்தகத்தை மூடினேன்......உண்மையான சுதந்திர காற்றை எதிர்பார்த்து நிற்கும் ஓர் மலையக இளைஞனாய்.........