Wednesday, December 15, 2010

என் இனிய கல்லூரியே........

இதுவரை என்னால் எழுதப்பட்ட ஒவ்வொரு பதிவிலும் என் நண்பர்களை பற்றி நிச்சயமாக ஒரு சொல்லாவது இருக்கும்...அந்தளவு நண்பர்களை நேசிப்பவன் நான்.எந்தளவு என் நண்பர்களை நேசிக்கிறேனோ அதே அளவு என் கல்லூரியையும் நேசிக்கிறேன்..
குறிப்பாக என் உயர்தர வகுப்பு சக தோழர்களையும்,Ncage மக்களையும்,வெவ்வேறு கல்லூரிகளில் கற்றிருந்தாலும் "நட்பு"எனும் அழகிய சொல்லிற்கு கட்டுப்பட்டு இன்று கூட Mobile மூலமாக தொடரும் என் 1,2 நண்பிகளையும் சொல்லலாம்.
இந்த பதிவின் மூலம் என் கல்லூரி நாட்களின் சில அழகான தருணங்களை,நிமிடங்களை,நாட்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.
(படத்தில் போஸ் கொடுத்துக்கொண்டிருக்கும் நண்பன் SUJEEVAN.இவருக்கும் பின்னால் இருக்கும் தியேட்டருக்கும் ஒரு சம்பந்தம் இருக்கின்றது என்பதை எப்போதும் நம் மனதில் வைத்துக்கொள்ள எடுக்கப்பட்ட படம்)

நான் என் படிப்பை ஆரம்பித்தது பண்டாரவளை St.Thomas கல்லூரியில்...ஆனால் தரம் 4 வரை மாத்திரமே அங்கு படிக்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.அம்மாவின் இடம்மாற்றம் காரணமாக எனக்கு அங்கிருந்து விலகி ஹட்டன் வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது..இங்கு வந்து தரம் 5 இல் Highlands College இல் இணைந்தேன்.
அப்போதிலிருந்து என் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் வரை தொடர்ந்து அதே கல்லூரியில் தான் படித்தேன்.நான் இந்த கல்லூரியில் படித்த 9 வருடங்களில் எனக்கு கிடைத்த உறவுகள்,நடந்த சம்பவங்கள் போன்றவற்றையே இந்த பதிவில் எழுதப்போகிறேன்.

(படத்தில் இருப்பவர் ARUNJEEV.என் வகுப்பை தாண்டிய நண்பர் வட்டங்களில் மிக முக்கியமான ஒரு நபர்..இன்னும் மேலாக சொல்லப்போனால் கூடப்பிறவாத தம்பி எனக்கூட கூறலாம்)

*அது 2000ம் ஆண்டு,நான் கல்லூரியில் இணைந்து சில மாதங்களே கரைந்திருந்தன...அவ்வேளையில் பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.அதில் 100m Relay ஓட்டப்போட்டியில் Reserve Runner ஆக தெரிவு செய்யப்பட்டிருந்தேன்.போட்டி ஆரம்பிக்க ஒரு சில நிமிடங்களே இருந்த வேளையில் எங்கள் அணியில் ஒருவரை காணவில்லை....சிறிது நேரம் தேடிப்பார்த்துவிட்டு என்னை ஓடுமாறு சொல்லி Track வரை போய்விட்டேன்...Mithoooooooooooooooonn.....நீளமாக என் பெயர் அழைக்கப்பட்டது....யார் என்று திரும்பிப்பார்த்த போது என் இல்லப்போறுப்பாசிரியை....காணாமல் போன பையனை தேடி கண்டு பிடித்து கொண்டு வந்து Track இல் விட்டு விட்டு என்னை திரும்பவும் Reserve Runner ஆகவே ஆக்கினர்.......
அன்றோடு விட்டது தான் தடகளப்போட்டிகளை......

(Highlands College-Hatton-Central,Srilanka-Building No-5-Primary Section)

*2001ம் ஆண்டு...நான் அந்த நேரம் தரம் 6இல் படித்துக்கொண்டிருந்தேன்...அன்றைய தினம் என் பிறந்தநாள்...வகுப்பாசிரியை வகுப்பிற்கு வந்ததும் விஷியத்தை சொல்வதற்காக எழுந்து நின்றேன்...அவ்வளவு தான்.அவர் என்ன நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை...கையில் வைத்திருந்த கொடிப்பிரம்பில் விட்டு விலாசித்தள்ளி விட்டார்.....என்னையும் இன்னொரு நண்பனொருவனையும் "முட்டிக்கால்"போட வைத்துவிட்டு ஏனைய மாணவர்களை கூட்டிக்கொண்டு வெளியே சென்று கற்பிக்க ஆரம்பித்து விட்டார்.....என் கண்களில் இருந்து வழிந்தோடியது கண்ணீர்.....அருகில் இருந்த ஒற்றை நண்பன் என்னை சமாதானப்படுத்தினான்....அவன் RAJEEV...1ம் பாடம் முடிவுக்கு வந்த பின் கூட்டிச்சென்ற மாணவர்களோடு வகுப்பறை வந்து சேர்ந்தார் ஆசிரியர்.....என்னையும்,நண்பனையும் இடத்திற்கு போகச்சொன்னார்...இடத்திற்கு சென்ற நான் வீட்டில் வாங்கிக் கொடுத்த இனிப்புப் பண்டங்களை தூக்கிக் கொண்டு ஆசிரியரிடம் சென்றேன்...அந்த நொடியில் தான் செய்த தவறெண்ணி வருந்தினார் ஆசிரியர்....என்ன தான் அவர் செய்த தவறு அந்த நொடியில் உணர்த்தப்பட்டாலும் பிறந்தநாளும் அதுவுமாக காலையிலேயே வாங்கிய அந்த அடியும்,தண்டனையும் என்றும் என் மனம் விட்டகலாது........

(Highlands College-Hatton-Central,Srilanka-Upper Section Main Entrance-New Building on Left,Office @ Center,IT Centre on Right)

*2002ம் ஆண்டு நினைவில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு பெரிதாக,சுவாரஸ்யமாக எதுவும் நடந்ததாக என் நினைவில் இல்லை....இருந்தாலும் அப்போதைய கால கட்டத்தில் எங்களுக்கு வகுப்பாசிரியராக வந்தவர் எங்களுக்கு கொடுத்த அடி மாத்திரம் மறந்தபாடில்லை....அந்த நேரத்தில் அவர் ஒரு கொடுமைக்காரராக எங்கள் பார்வைக்கு தென்பட்டாலும்,..இன்று என்னை எங்கு கண்டாலும் நலம் விசாரிக்கும் ஒரு நல்ல மனிதராக மாறாத எங்கள் பார்வைக்கு தெரிகிறார்.......

*நான் பாடசாலை கிரிக்கட் அணியில் இணைந்தது இவ்வருடம் தான்.

(New Building-Highlands College Hatton,(எங்கள் Commerce ராஜதானி)Srilanka)

* 2003ம் ஆண்டு முதல் முறையாக மாணவத்தலைவணாக தேர்ந்தெடுக்கப்பட்டேன்..
*எங்கள் அணி பல சாதனைகளை செய்த ஆண்டாக இது மாறியது.அதாவது 19 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது,வெறும் 10 ஓவர்களுக்கு மாத்திரம் முகம் கொடுத்து 127 ஓட்டங்களை பெற்றது.....என்று கிரிக்கட் இற்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆண்டாக இது மாற்றப்பட்டிருந்தது.....
*இன்னும் ஒரு சுவாரசியமான நிகழ்வு கூட நடந்தது...இறுதியாண்டு பரீட்சையில் சமூகக்கல்வி பாடத்தில் என் வகுப்பில் நான் உட்பட 14 பேர் 100 புள்ளிகளை பெற்றது.....

(Our Principal Mr.S.Wijaysingh @ His Office)

*2004 ம் ஆண்டு..ஒரு மாணவத்தலைவனாகவும் வகுப்பறையில் ஓர் மாணவனாகவும் காலம் கழித்த சாதாரண ஆண்டாகவே நகர்ந்தது...எனினும் கட்டை காற்சட்டை அணிந்து கல்லூரி சென்ற இறுதி ஆண்டு அது என்பதால் 2004 சற்று மெதுவாகவே நகர்ந்தது.......

(Main Hall-Highlands College (Upper Section) Hatton,Srilanka)
* 2005ம் ஆண்டு...முதல் முறையாக நீண்ட காற்சட்டை அணிந்து பாடசாலை சென்ற ஆண்டு....10ம் வகுப்பு பாடங்கள் சற்று சுமையாகவே இருந்தன...இருந்தாலும் ஒரு முறுக்கோடு வெற்றிகரமாக கற்று முடித்தோம்.....இவ்வாண்டில் தான் தமிழ் மீது அக்கறை கொண்டேன்...தமிழுக்கென்று தனியான பிரத்தியேக வகுப்புகளுக்கு சென்றேன்...தமிழ் மீது அக்கறை கொண்டதாலோ என்னவோ தமிழ் ஒரு இலகுவானதொரு பாடமாக மாறிய அற்புத ஆண்டு....சிறு சிறு சண்டைகள் வந்து வந்து மாயமாய் மறைந்து கொண்டிருந்த நேரம்.....அடுத்த வருடம் வரப்போகும் O/L பரீட்சையை நினைத்து அநேகரின் முகத்தில் ஒரு வித தவிப்பு,பயம்,எதிர்பார்ப்பு........ஹீ ஹீ.........அப்டியெல்லாம் ஒன்றும் இருக்கவேயில்லை.....காரணம் எங்கள் மீதும்,ஆசிரியர்கள் மீதும்,குறிப்பாக கல்லூரி மீதும் வைத்திருந்த நம்பிக்கை......வேகமாக கரை புரண்டோடியது 2005....

(Laboratory Complex-Highlands College-Hatton,Central,Srilanka)

*2006...எங்கள் பல பேரின் வாழ்க்கையை தீர்மானிக்கப்போகும் ஆண்டு.....சின்சியரான படிப்பில் பாதி ஆண்டு ஓடி விட்டது....அன்று திகதி June 30....பாடசாலையின் பரிசளிப்பு விழா முதல் நாள் தான் நடந்து முடிந்திருந்தது.....விழாவை நடத்தி முடித்த களைப்பினால் பெரும்பாலான ஆசிரியர்கள் அன்று பாடம் நடத்த வில்லை.....கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு மெதுவாக மேசையில் தாளம் தட்டி பாடல் பாட ஆரம்பித்தோம்.....நேரம் செல்ல செல்ல சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி அது Baila வாக மாறியது....கொஞ்ச நேரத்தில் வகுப்பின் யன்னலிநூடாக யாரோ பார்ப்பது போல தெரிய....எட்டிப்பார்த்தால்.....அதிபர்.......................அடி.....அடி...அடி....
அதிலும் குறிப்பாக Kaushigan எனும் நண்பனுக்கு "நீ டொக்,டொக்,டொக்டர் மகன் தானே"என்று சொல்லி சொல்லி அடி விழுந்தது......அவர் டொக் என்று ஒவ்வொரு முறை சொல்லும் போதும் ஒரு அடி விழுந்தது.......அதிபர் பார்த்துக்கொண்டிருக்கும் போது பாடிய பாடல்-"கிழிஞ்ச பாயில் கவுந்து படுக்கும் போது உன் கனவுல கிளியோபட்ரா வந்தா லவ் இல்ல,ஜவுளி கட பொம்மைய பாக்கும் போது உன் புத்திகுள்ள கவுளி கத்தும் அதுவும் லவ்விள்ள"பாடலை அந்த நேரத்தில் பாடிக்கொண்டிருந்தது VIGNESH.நீங்களே சொல்லுங்க அவர் அடிக்காம என்ன தான் பண்ணுவாரு??????
*2006 இல் நடந்த இன்னுமொரு முக்கியமான நிகழ்ச்சி....எங்கள் நாடகம்....அதைப்பற்றி தான் ஏற்கனவே ஒரு பதிவே எழுதினேனே.....அதை வாசிக்கத் தவறியவர்கள்.....இங்கே "கிளிக்"கவும்...
*தொடர்ந்து வந்தது G.C.E O/L.....இறைவன் அருளுடன் அதையும் கூட வெற்றிகரமாக முடிக்கக் கூடியதாக இருந்தது....


(அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்....Highlands College,Hatton)
G.C.E O/L பரீட்சைக்கு பின் A/L இல் இணைவதற்காக 2007 ஆகஸ்ட் மாதம் தான்....முதல் முதலாக பாடசாலைக்கு சென்றோம்....புது நண்பர்கள்,புதிய பாடம்,என எல்லாமே புதுசாக இருக்க சிலபழைய நண்பர்களை இழந்த கவலையோடும் ஆரம்பித்தோம் எங்கள் உயர்தரத்தை....
"புதிய"எனும் சொல் தந்த உற்சாகத்தால் 2007 இல் மிகுதியிருந்த மாதங்களும் எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல் நகர எங்களை வரவேற்றது 2008......

(Ramzan,Kisho.Vinodhan,Roshanthini,Rifaya,Saranya,Niroshana)
2008 மிக ஆரம்பத்திலேயே அதிபருக்கும்,எங்கள் வணிகப்பிரிவு ஆசிரியருக்கும் பிரச்சனையோடு ஆரம்பித்தது.....நாளடைவில் அந்த பிரச்சனை பெரிதாகி வணிகப்பிரிவு 2 குழுக்களாக மாறின....
1.குறிப்பிட்ட ஆசிரியரிடம் வகுப்பிற்கு செல்லும் மாணவர்கள்.
2.அதிபர் ஒழுங்குபடுத்தி கொடுத்த ஆசிரியரிடம் வகுப்பிற்கு செல்லும் மாணவர்கள்....
நான் இரண்டாவது குழுவில்.....இதனிடையே பல்வேறு ஊடல்கள் மாணவர்கள் மத்தியில் "ஏற்படுத்தப்பட்டன"....
பதின்ம பருவம் யோசிக்கத்தவறியது......சாதகங்களும் பாதகங்களும் இரு குழுக்களின் இடையேயும் சிதறிக்கிடந்தது.....
அந்த வருடம் முழுவதும் இதே போல் தான் கரைந்து சென்றது.....

(Ratheesh,Thiliban,Kisho,Sugeevan)

2009ம் ஆண்டின் ஆரம்பப்பகுதி கடந்த ஆண்டை போலவே நகர்ந்தது..எனினும் சுதாரித்துக்கொண்ட நாங்கள் இருப்பது இன்னும் வெறும் 7 மாதம் தான் எனும் உண்மை புரிந்து பிணக்குகளில் இருந்து மீண்டு ஒருவருக்கொருவர் நல்ல முறையில் பழக ஆரம்பித்து விட்டோம்...
காலம் சுழன்றது...வந்து சேர்ந்தது March 2009..அது Bigmatch Season...11வது மலைகளுக்கு இடையிலான மோதல் (Battle of the hills)ஒழுங்கு செய்யப்பட்டது ..அவ்வருடத்தின் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் அணித்தலைவராக நான் தெரிவு செய்யப்பட்டேன்....
போட்டி நடைபெற்றது...2ம் நாள் முடிவின் போது எதிரணி 49 ஓட்டங்களுக்கு 6 ஓட்டங்களை இழந்திருந்த வேளையில் போட்டி வெற்றி தோல்வி இன்றிய நிலையில் முடிவிற்கு வந்தது.....
அதன் பிறகு படிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்....அதன்படியே முக்கியத்துவம் அளித்தோம்...
உயர்தர பரீட்சை நடைப்பெற்றது கடவுள் புண்ணியத்தில் அதிலும் வெற்றி கண்டோம்.....
இறுதி நாள் பாடசாலையை விட்டு வெளியேறிய அந்த நொடிப்பொழுது இன்றும் என் மனதில் ஓர் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறது.
அந்த உணர்வை மறப்பது என்பது மரணப்பொழுதிலும் முடியாத ஒன்று...
மீண்டும் பள்ளிக்காலம் என்பது ஒருபோதும் நிறைவேறாத ஒன்று...

அந்த பள்ளிக்காலம் தந்த இன்பமான சில நினைவுகளுடனும்,பல புகைப்படங்களுடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் இவன்-Mithoon.J

(11 th Battle Of The Hills 2009.Hghlands vs Sripadha @ Dmcc)

Monday, December 13, 2010

என் கேமராவும் நானும்.......

ஒரு சில நாட்களுக்கு முன் என் "ரயில் பயணம்"பதிப்பில் ஒரு விடயத்தை கூறியிருந்தேன்.
"ங்கள் நண்பர் குழு வட்டத்தை தெரிந்தோ தெரியாமலோ ஒரு நல்ல பழக்கம் பற்றிக்கொண்டிருந்தது.வேறொன்றுமில்லை போகும் இடமெல்லாம் புகைப்படங்களை click இட்டு விடுவதுதான்" என்பது தான் அது.
சாதாரணமாக ஆரம்பித்த அந்த நல்ல பழக்கம் இன்று மிகப்பெரிய விருட்சமாக வளர்ந்து நிற்கிறது...அவ்வாறு "கிளிக்"கிட்ட படங்களில் எனக்கு பிடித்த படங்களை இந்த தளத்தின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Location தேடி சென்ற பொது ஹட்டனை அண்மித்த பிரதேசம் ஒன்றில் என் கண்களிலும் என் கேமரா வின் கண்களிலும் பட்ட பாதியாக வளைந்து நின்ற மரம்.

நாங்கள் சென்ற உயரமான இடத்தில் இருந்து தொலைவில் தெரிந்த மலைத்தொடர்களை ரசித்து கவிதை புனைய முயன்ற நண்பன் "அருண்"

தனது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை கருங்கற்களில் அமர்ந்த படியே சிந்தித்துக்கொண்டிருக்கும் அனுபவம் மிக்க ஒரு பெரியவர்

கேமராவின் இந்த ஆங்கிளுக்கு கஷ்டப்பட்டு போஸ் கொடுக்கும் என் இனிய நண்பர்கள்

மழைக்கு இருட்டிய ஒரு மலை வேளையில் தென்றலின் மெல்லிய வருடலினால் அசையாமல் அசைந்து கொண்டிருக்கும் ஒரே வகையை சேர்ந்த மூன்று மரங்கள்

வேகாத வெயிலிலும் மலை பிரதேசங்களை சூழ்ந்துள்ள பஞ்சு போன்ற மேகக்கூட்டங்கள்

ஒரு சாதாரண பள்ளத்தாக்கில் தனித்து வளர்ந்து நிற்கும் துணியில்லாத இயற்கையின் கு(கொ)டை

இரண்டு சிறிய தேயிலைகளுக்கு மத்தியில் ஒரு பெரிய கட்டிடத்தை உள்ளடக்க எடுக்கப்பட்ட முயற்சி

வளர்ந்து ஓங்கி நிற்கும் மலைகளை கூட மிகச்சாதாரணமாக தன் படைகளின் உதவியுடன் சுற்றி வளைத்துள்ள பனிக்கூட்டம்

ஒரு காலத்தில் அழகாக இருந்து சக்கை போடு போட்டுக்கொண்டிருந்த இந்த மரத்தின் இன்றைய நிலை!!!!!!

மருந்துகள் தெளிக்கப்பட்ட தேயிலை செடிகளுக்கு இடையிடையே அழகாக வளர்ந்து நிற்கும் மரங்கள்

இதை பற்றி என்ன சொல்வதென்று சத்தியமாக தெரியவில்லை.

கருங்கற் பாறைகளை கூட பிளந்து வரும் நீரின் உத்வேகம்

இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற பல திரைப்படங்களில் கூட தன அழகை காட்டியுள்ள St.Clair நீர் வீழ்ச்சி

இயற்கை அழகை தன்னகத்தே கொண்ட கண்களுக்கு விருந்து படைக்கும் Devon நீர் வீழ்ச்சி....

இன்னும் ஆயிரக்கணக்கில் கிளிக்கிட்ட படங்கள் உள்ளன....ஒவ்வொரு பதிவாக கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை உங்கள் மத்தியில் பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன்.....

மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்-இவன்-Mithoon.J




Saturday, December 11, 2010

எயிட் பிலோ-Eight Below (2006)

பதிவில் உள்ள படங்களை வைத்து WALT DISNEY யின் இன்னுமொரு நாய்களை பற்றிய படம் என்று எண்ணியவரா நீங்கள்??அப்படியென்றால் நிச்சயமாக உங்கள் கணிப்பு 100% தவறானது....உண்மைச் சம்பவங்களை எடுத்துக்காட்டாக கொண்டு
தயாரிக்கப்பட்டு அமெரிக்காவின் முதல் தர பட வகைகளுக்குள் உள்ளடக்கப்பட்ட இரண்டு,நான்கு கால் கொண்ட நடிகர்களால் தத்ரூபமாக நடிக்கப்பட்டு DISNEY நிறுவன பேனரில் வெளிவந்த திரைப்படமே இதுவாகும்....
இயக்குனர் FRANK MARSHALL இனால் இயக்கப்பட்ட இப்படம் அனைத்து தரப்பினரும் ரசிக்கக் கூடிய வகையில் இருந்தமையால் BOX OFFICE இன் GOLD விருதினை பெற்றுக்கொண்டது.
இத்திரைப்படம் 1957ம் ஆண்டு நடந்த உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட 1983ல் வெளிவந்த JAPANESE EXPEDITION எனும் திரைப்படத்தை மையமாக கொண்டதாகும்.
இப்போது கதைக்கு வருவோம்........
கதையின் நாயகன் Jerry Sheperd பண்பு,ஒழுக்கம் மிக்க ஒரு Guide ஆகும்.தன் பணியின் நிமித்தம் இவர் தான் வளர்க்கும் 8 பனி நாய்களுடன் (SLED DOGS) அன்டார்டிகா வில் வாழ்ந்து வருகிறார்.


சரியாக பனி அதிகமாக போழியக்கூடிய காலத்திற்கு (WINTER) ஓரிரு தினங்களே மீதமிருக்கும் நேரத்தில் Jerry இற்கு DR.DAVIS உடன் ஒரு கல்லை தேடி செல்ல வேண்டிய பொறுப்பை ஒப்படைக்கிறது NSA அமைப்பு...
கல்லை தேடி அந்த இடத்திற்கு வாகனங்களில் செல்ல முடியாததால் தான் வளர்க்கும் 8 நாய்களுடன் DR.DAVIS உடன் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு செல்கின்றான் Jerry.அவர்கள் அந்த இடத்திற்கு சென்று அடைந்ததுமே தலைமையகத்தில் இருந்து பெரும் புயல் ஒன்று அன்டார்டிகா வை தாக்கக் கூடிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் உடனடியாக அங்கிருந்து தலைமையகத்திற்கு வந்து விடுமாறும் Base இற்கு தகவல் வழங்கப்படுகிறது....Base இல் இருந்து Jerry க்கு தகவல் வழங்கப்பட Dr.Davis உடன் அந்த இடத்தை விட்டு நீங்க தயாரானான் Jerry..
எனினும் Dr.Davis அதனை மறுத்து தனக்கு மேலும் ஒரு சில மணி நேரங்கள் அவகாசம் வழங்குமாறு கேட்க,விருப்பமில்லாமல் ஒத்துக்கொண்டான் Jerry..

Jerry வழங்கிய அவகாசத்திற்குள் தேடி வந்த கல் கிடைத்துவிட வேலை சுலபமாக முடிந்துவிட்ட சந்தோஷத்தில் Base நோக்கி கிளம்பினர்..பாதி வழியில் பனி உறைந்து இருக்கும் ஒரு பகுதியில் Dr.Davis காலை வைக்க பனியை உடைத்துக்கொண்டு நீரில் விழுகிறார் Dr.

ஒரு வழியாக Jerry யின் நாய்கள் அவரை காப்பற்ற கால் உடைந்த நிலையில் டாக்டரும் ஜெர்ரியும் Base இற்கு வந்தடைகின்றனர்...
Base இற்கு வந்ததுமே நாய்களை தவிர ஏனையோர் அனைவரும் தலைமையகத்திற்கு செல்ல ஆயத்தமாக,நாய்களை கவனத்திற்கொண்டு Jerry வர மறுக்கிறான்.

ஒருவாறு அவனை சமாதானப்படுத்தி தலைமையகத்திற்கு அழைத்து செல்கின்றனர் குழுவினர்......அதன் பின் நாய்களுக்கு என்ன நடந்தது?அவை புயலில் இருந்து காப்பற்றப்பட்டனவா??நாய்களை பிரிந்து Jerry படும் துயரம்,நாய்களை மீட்க Jerry செய்த ஏற்பாடுகள் என்பனவே படத்தின் மிகுதிக்கதை.....
இந்த படத்தை பொறுத்தவரையில் நாய்கலின் நடிப்பு அபாரம்..மனிதர்களின் நடிப்பை விட 8 நாய்களின் நடிப்பு ரசிக்கக்கூடிய வகையில் இருந்தது.

ACTION தவிர ஏனைய அனைத்தும் இப்படத்தில் உண்டு...மெல்லிய காதல்,நகைச்சுவை,செண்டிமெண்ட் என அனைத்தும்.......இது போன்ற படங்கள் வெளிவருவது மிக அரிதான ஓர் காரியமாக மாறிவிட்டது இந்த கால கட்டங்களில்...
இந்த படத்தை Torrent இல் தரவிறக்கம் செய்ய இங்கே click கவும்
படக்குழுவினர் விபரம் வருமாறு

Paul Walker ... Jerry Shepard
Bruce Greenwood ... Davis McClaren
Moon Bloodgood ... Katie
Wendy Crewson ... Eve McClaren
Gerard Plunkett ... Dr. Andy Harrison
August Schellenberg ... Mindo
Jason Biggs ... Charlie Cooper
D.J. ... Max -a Dog
Timba ... Max - a Dog
Koda ... Maya - a Dog (as Koda Bear)
Jasmin ... Maya - a Dog
Apache ... Old Jack - a Dog
Buck ... Old Jack - a Dog
Noble ... Shadow - a Dog
Troika ... Shadow - a Dog


இந்த படத்தின் ட்ரைலர் வருமாறு




இது போன்ற ஒரு படத்தை பற்றி உங்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி...

மீண்டும் ஒரு இனிய பதிவின் மூலம் சந்திப்போம் -இவன்-Mithoon.

Wednesday, December 8, 2010

இரண்டு சொட்டுக் கண்ணீர்


நேற்று மாலை வேளையில் ஒரு வேலை விஷயமாக கிராம உத்தியோகத்தரின் சான்றிதழை தேடிக்கொண்டிருந்தேன்.பழைய File கலையெல்லாம் உருட்டிக்கொண்டிருந்த பொது "சுயம்"என தலைப்பிடப்பட்ட ஒரு பத்திரிகை கண்ணில் பட்டது...அது 2001 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வெளிவந்ததாகும்.வாசிக்கலாம் என மனம் சொல்ல அதை தனியாக எடுத்து வைத்து விட்டு எனது தேடலில் மீண்டும் மூழ்கினேன்......

இரவு ஒரு 7.20 இருக்கும் என் வீட்டு தொலைக்காட்சியில் "மகராணி"தொடரில் "ராணி"யின் பழிவாங்கும் படலம் "தொடர்ந்து தொடர்ந்துக்கொண்டே"இருந்தது......
அதை பார்க்க விருப்பமில்லை,,,அங்கிருந்து விலகி என் அறை நோக்கி வந்தேன்..வரும் வழியில் கண்ணில் பட்டது எடுத்து வைத்த "சுயம்"

"சுயத்தை"வாசித்த பொது அதில் அதிகமாக அந்த கால கட்டத்தில் குறிப்பிட்ட பாடசாலை ஒன்றில் நிகழ்ந்த குறிப்பிட்ட சம்பவம் ஒன்று தொடர்பாக அதிகமாக எழுதப்பட்டிருந்தது....

அதன் கடைசி பக்கத்தில் "இரண்டு சொட்டுக் கண்ணீர்"எனும் தலைப்பில் ஓர் சிறுகதையும் பிரசுரிக்கப்பட்டிருந்தது.அதை வாசித்ததும் உங்களுடன் அதனை பகிர்ந்து கொள்ள வேண்டும் என என்னுள் தோன்றவே இதோ இந்த "POST"உங்களுக்காக.......

"கெம்பஸ் கெடச்சிடும்...கெம்பஸ் கெடச்சிடும்...க.பொ.த.உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் பயின்று இரண்டு A,இரண்டு B என பெறுபேறு வந்த பூரிப்பில் ஆர்ப்பரிக்கின்றேன்.

கட்டிப்பிடித்து முத்தமிட்டு என் சந்தோஷத்தில் இறக்கை கட்டி மேகங்களுக்கிடையில் பறக்கும் தம்பி.
"கெம்பஸ் என்றால் என்ன?"-அடுப்போடு கூடிய திண்ணையில் அமர்ந்து சுவரில் சாய்ந்தபடி அப்பாவியாய் கேட்கும் அம்மா.
அவள் காலடியில் அமர்ந்து மடியில் முகம் புதைத்து சொல்கிறேன்,
"கெம்பஸ் என்றால் பல்கலைக்கழகம்.பல்கலைக்கழகம் என்றால் பட்டப்படிப்பு படிக்கும் இடம்.பட்டப்படிப்பு படிச்சா பெரிய வேலை கிடைக்கும்."
என் கண்களில் ஆனந்தக்கண்ணீர்,அம்மாவின் கண்களிலோ கலவரம்.......

"இன்னும் எம்புட்டுக் காலம் படிக்கணும்?"-அம்மா விசனத்தோடு வினவுகிறாள்
"மூணு வருஷம்,B.COM முடிச்சு வந்தால் Bank ல வேலை கிடைக்கும்;காலம் வரும் ,நம் கஷ்டங்கள் எல்லாம் கலைந்து விடும்.நீ பட்ட துயரங்கள் போதும் தாயே.நீ மலைக்கு போக வேண்டாம்.உன்னை நான் காப்பாற்றுவேன்."

"சரி உன் படிப்புக்கு பெரிய செலவாகுமே!"-அம்மா அங்கலாய்க்கிறாள்.
"யாருகிட்டயாவது கேட்கலாம்.நமக்கின்னு நாலு பேர் இல்லாமலா போயிடுவாங்க?"என்று நம்பிக்கையோடு சொல்ல "சரி எங்க வயித்துக்கு.....எங்க வயித்துக்கு யார் கிட்ட கேட்கிறது?".என்ற அம்மாவின் கேள்வியில் பொட்டிலடித்தாட் போல் நிமிர்கிறேன்.அம்மா தொடர்ந்தால்.

"ஆமா தாயி.இந்த வருஷத்தோட பென்ஷன் எழுதிரலாம் னு நெனக்கிறேன்.என்னால் வர வர மலைக்கு போக முடியல.கை,கால் எல்லாம் நடுங்குது.ஒனக்கு ஒரு வேல கெடச்சிட்டா வீட்ல இருக்கலாம்னு யோசிச்சேன்.நீ இன்னும் மூணு வருஷம் படிகனுங்கிறியே!"

தம்பி மேகங்களுக்கிடையில் பறந்தவன் பூமியில் வீழ்கிறான்."என்னம்மா...மலைநாட்லயிருந்து எத்தனைப்பேர் பல்கலைக்கழகம் போறாங்க..அதுவும் தொழிலாளிங்க புள்ளைக....அக்கா ஒரு சாதனை செஞ்சிருக்கா!எத்தனை சந்தோஷமான விஷியம்.நீ என்னடான்னா கவலைப்படுறியே."
நீயும் அக்கா மாதிரி படிக்கணும்னு தாண்டா எனக்கும் ஆச,ஆனா நமக்கும் வயிருன்னு ஒன்னு இருக்குதே!பசிக்குமே!"

"அக்கா,நான் பிரைவேட்டா ஓ,எல் எழுதறேன்.அடுத்த மாசம் புதுசா பொடியன்கள பதியிறாங்கலாம்.நான் பேர் பதிஞ்சிக்கிறேன்.நீ கெம்பசுக்கு போ"-என்றான் பத்தாம் வகுப்புத் தம்பி பாலு.

"லொக்...லொக்...லொக்..-மூவரும் திடுக்கிட்டுத் திரும்புகிறோம்.உள்வீட்டுக் கட்டிலில் படுத்தபடியே இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த பக்க வாதத்து அப்பா தென்னவன் இருமுகிறார்.

மூவரும் ஓடி கைத்தாங்கலாகத் தூக்கி தலையணையை சுவருக்கு முட்டு வைத்து அப்பாவை உட்கார வைக்கிறோம்.நான் மார்பைத் தடவ,தம்பி சலியை துப்ப சிரட்டையை கொடுக்கிறான்.
அப்பா இருமிக் கொண்டே சொல்கிறார்."நீங்க பேசினதை எல்லாம் நான் கேட்டுக்கிட்டு தாம்மா இருந்தேன்.நீ கட்டாயம் படிக்கப் போ.நான் இன்னும் ரெண்டு மாசத்துல செத்துருவேன்...அதுக்கப்புறம் சங்கத்துல கொஞ்சம் காசு கொடுப்பாங்க,நண்பர்களும் பணம் சேர்த்து கொடுப்பாங்க.அத வச்சு நீ பொழச்சுக்க."

வார்த்தைகளின் சோகம் உள்ளத்தை தாக்கி கண்ணீரை வரவழைக்க ஸ்தோப்பிற்கு வருகிறேன்.
-மலையேறி தளிர் பறித்து படிக்க வைத்த அம்மா.
-தன் படிப்பை பணயம் வைத்து படிக்கச்சொள்ளும் தம்பி
-செத்த பிறகு வரும் சங்கப் பணத்தில் என் வாழ்க்கைக்கு ஒளி ஏற்றத் துடிக்கும் அப்பா.....

ஒரு முடிவிற்கு வருகிறேன்.பல்கலைக்கழகம் போவது இல்லை.மாறாக படித்த மலையக இளைஞர்-யுவதிகள் அடைக்கலம் புகும் ஆசிரியர் தொழிலுக்கு விண்ணப்பிக்க போகிறேன்.
என்றாலும் திடீரென்று ஒரு பயம் மனசை ஆட்கொள்கிறது.இன்று ஆசிரிய தொழிலுக்கு சமுதாயத்தில் என்ன மதிப்பு இருக்கிறது? கொஞ்ச நஞ்சம் இருந்த மதிப்பும் மரியாதையும் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடந்த சம்பவங்களால் அடியோடு இல்லாமல் பொய் விட்டதே!இந்த நிலையில் ஆசிரியத் தொழிலை தேர்ந்தெடுப்பது சரி தானா?

இப்படி யோசித்தாலும் என் ஆழ்மனதின் அலாரம் வேறு விதமாக அடித்தது.நான் ஏன் சமுதாயத்திட்கு பயப்பட வேண்டும்?ஆசிரியர் எல்லோரும் பொல்லாதவர்கள் அல்லவே.உண்மையான ஆர்வத்தோடும்,உயர்ந்த மனப்பான்மையோடும்,உள்ள உறுதியோடும் மலையக மாணவர்களின் வளர்ச்சிக்கு உழைக்கும் ஆசிரியர்கள் தான் எத்தனை எத்தனை!
நான் ஏன் அவர்களை உதாரணங்களாய் கொள்ளக்கூடாது?

ஆசிரியப் பணியின் தாற்பரியத்தை,அதன் புனிதத்தை,மகத்துவத்தை புரியாத சிலர் ஆசிரியர் என்னும் போர்வையில் செய்யும் மிலேச்சத்தனமான செயல்களால் நான் ஏன் முழு ஆசிரிய சமூகத்தையும் சபிக்க வேண்டும்?
ஆசிரியத் தொழிலுக்கே விண்ணப்பிபோம்:என்னை போன்ற ஏழை மாணவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றுவோம் என்று என் எண்ணங்கள் உயிர் பெறுகையில் என் கன்னங்களில் இரண்டு சொட்டு கண்ணீர் துளிகள்.
ஒன்று:-பல்கலைக்கழகம் செல்ல முடியவில்லையே என்ற ஏக்கத்தினால்.
இன்னொன்று:-இந்த லயத்து ஜீவன்களின் பாசப்பினைப்புகளினால் ஏற்பட்ட தாக்கத்தினால்.
-டேசி மலர்-நோர்வூட்.