Wednesday, November 24, 2010

Kingdom Of கிழிஞ்சபுறம்

அது 2006ம் ஆண்டு விஜயதசமி நேரம் சரியாக சரஸ்வதி பூஜை தொடங்கி 4வது நாள் இருக்கும்.பாடசாலையில் விஜயதசமி நாள் நிகழ்வுகளுக்காக நிகழ்ச்சிகள் சேகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன...அப்போது நாங்கள் G.C.E O/L பரீட்சைக்காக தயாராகிக்கொண்டிருந்தோம்.
அன்று இரவு நாங்கள் ஆங்கில வகுப்பில் இது சம்பந்தமாக கலந்துரையாட வேண்டிய நிலை ஏற்பட்டது..அப்போது எங்கள் ஆசிரியை எங்களையும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை வழங்குமாறு ஆலோசனை வழங்கினார்...என்ன செய்யலாம் என நீண்ட நேர கலந்துரையாடலுக்கு பிறகு வழக்கம் போல "கல்வியா செல்வமா வீரமா"எனும் தலைப்பில் ஒரு நாடகத்தை அரங்கேற்றிவிடலாம் என நண்பன் ஒருவன் Idea தர அதே நினைவோடு வீடு நோக்கி சென்றோம் நாங்கள்.

மறுநாள் நிகழ்ச்சிப்பொறுப்பாசிரியரிடம் சென்று இந்த விஷியத்தை சொன்னதும் அவர் அதிபரிடம் போய் அனுமதி பெற்று வருமாறு அனுப்பிவிட்டார்..தொடர்ந்து அதிபரிடம் அனுமதி வாங்கும் படலத்திற்காக நாங்கள் நண்பர்கள் சில பேர் அதிபரின் அலுவலகம் சென்று அதிபரிடம் அனுமதி வழங்குமாறு கேட்டோம்..அதற்கு அவர் நாடகத்தின் கதையை கேட்டார்..அதிபரிடம் கதையின் தலைப்பை சொன்னதுமே அவர் எங்களை நிறுத்தச்சொல்லிவிட்டு அவரே கதையை சொல்லி முடித்தார்..!!(இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.காரணம் நாங்கள் கொண்டு சென்ற கதை வழக்கமாக எல்லா விஜய தசமி மேடைகளிலும் அரங்கேறுவது தானே???)கதையை சொல்லி முடித்ததும் அவரே தொடர்ந்தார்...."வேறு ஏதும் புதுசா நல்ல கதையா கொண்டு வாங்க இது சரி வராது"

சினிமா தயாரிப்பாளரிடம் சான்ஸ் கேட்டுச்சென்ற இயக்குனரின் நிலை போல் ஆகி விட்டது எங்கள் நிலையும்...அன்று படிப்பை துறந்து கதை கலந்துரையாடலுக்காக நேரத்தை செலவிட்டோம்...நீண்ட நேர செலவளிப்புக்கு பின் சிக்கியது ஒரு கதை...கதை என்றால் அது கதை அல்ல ஒரு கதைக்கான கரு....

அதாவது இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படம் வெளிவர தயாராக இருந்த சமயம் தான் அது...அதனை நினைவில் கொண்டு ஒரு நண்பன் "ஒரு அரச சபைய மையமா வச்சு கதையை கொண்டுபோனா என்ன?"என்றான்....idea நன்றாக இருக்க எல்லோரும் சம்மதித்தனர்...அந்த நொடியில் இருந்து நாடகம் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற ஆரம்பித்தது...கதைக்கு Script என்று தனியாக எதுவும் இல்லை...அப்போதைய சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற வாறு வாயில் வருவதை சொல்லி சொல்லி கதையை ஓரளவு கட்டி எழுப்பி விட்டோம்.அந்த நேரத்தில் சொல்லப்பட்ட சொற்கள் குறித்து வைக்கப்பட்டு அவையே வசனங்களாக மாறின...3 நாட்கள் தொடர்ந்து கஷ்டப்பட்டு ஒருவாறு நாடகத்தை முழுவதுமாக தயார்படுத்தி விட்டோம்.

எல்லாம் சரியாக இருந்தும் ஏதோ ஒன்று மட்டும் குறையாக இருந்தது...அது வேறொன்றும் இல்லை பின்னணி இசை தான்.Yamaha Keyboard இன் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாக பின்னணி இசையும் உருவானது....குறிப்பாக சொல்லப்போனால் மன்னனுக்காக உருவாக்கப்பட்ட பின்னணி இசை மன்னனின் நடைக்கு கனகச்சிதமாக பொருந்தியது...நாடகத்திற்கான பின்னணி இசையும் தயாரித்தாகி விட்டது.இனி மீதமாக இருந்தது அதிபரின் அனுமதி தான்..
அதிபரிடம் சென்று கதையை சொன்னோம்...அவர் அனுமதியை அளித்து விட்டு "எதுக்கும் சசி மிஸ் கிட்ட ஒரு தடவ நடிச்சு காட்டிருங்க"என்றார்...

விஜய தசமி தினத்திற்கு முதல் நாள் மாலை 4 மணியளவில் பாடசாலைக்கு சென்று சசி மிஸ் முன்னிலையில் நாடகத்தை நடித்துக்காட்டினோம்...நாடகம் அவருக்கு பிடித்துப்போக "நான் தான் உங்களிண்ட Teacher In-Charge OK வா"என்றார்...இது எங்கள் நாடகத்திற்கு கிடைத்த அங்கீகாரம்....சந்தோஷமாக "சரி"என்று சொல்லி வீடு நோக்கி கலைந்து சென்றோம்.
மறுநாள் காலை பாடசாலைக்கு சென்றதும் தனியான இடத்தில் வைத்து ஒரு முறை நாடகத்தை நடித்துப்பார்த்தகிவிட்டது.எல்லோரும் தயார் நிலையில் இருக்க விஜய தசமி விழா நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக மேடையில் அரங்கேறிக்கொண்டிருந்தன எங்களது நாடகம் தான் இறுதி நிகழ்வு...நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் "இப்போது நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வாக தரம் 11 மாணவர்கள் வழங்கும் Kingdom Of கிழிஞ்சபுறம் நகைச்சுவை நாடகம் இடம்பெறும்...தொடர்ந்து நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவுறும்"என்றார்.
எமது நாடகம் மேடையேற்றப்பட்டது.

நகைச்சுவை நாடகம் என்பதால் மாணவர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் ஆசிரியர்கள்,சிறப்பு விருந்தினர்கள் மத்தியிலும் வரவேற்பு பலமாகவே இருந்தது...நாடகத்தின் ஒவ்வொரு கதா பாத்திரங்களின் அறிமுகத்தின் போதும் கைத்தட்டல்கள் அதிக அதிகமாக கிடைத்தன.நாடகம் முடிவடைந்த பின் அனைத்து ஆசிரியர்களும் (அதிபர் உட்பட) எம்மை பாராட்டினர்...அந்த 3 நாட்கள் நாம் பட்ட கஷ்டத்திற்கு பரிசாக சக மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் கரகொஷங்கள் கிடைத்தன.
அப்படி என்னதான் கதை என்று யோசிக்கின்றீர்களா?
முதலில் ஒரு அரச சபையை காட்டுகின்றோம்.அந்த அரச சபையில் ஒரு சிம்மாசனம்,வலது பக்கம் 4 ஆசனங்கள்,இடது பக்கம் 4 ஆசனங்கள் இந்த 8 ஆசனங்களில் ஒரு ஆசனத்தில் மட்டும் அமைச்சர் ஒருவர் தூங்கிக்கொண்டு இருக்கிறார்.சிறிது நேரத்தில் ஒவ்வொரு அமைச்சர்களாக வந்து தத்தமது ஆசனங்களில் அமர்ந்து கொள்கின்றனர்...அமைச்சர்களின் வருகைக்கு பின் கடைசியாக அரசன் அரச சபைக்கு வருகின்றார்...அரசன் தன் அரியாசனையில் அமரும் முன்பே அரச சபை பிரதான காவலன் பதற்றத்துடன் ஓடி வருகின்றான்.பதற்றம் மாறாமல் 2 புலவர்கள் ஒன்றாக சபை நோக்கி வருவதை கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு செல்கிறான்.புலவர்கள் வருவதை அறிந்த மன்னன் சுதாரித்துக் கொண்டு ஆசனத்தில் அமர்கின்றான்.
புலவர்கள் இருவரும் சபைக்கு வந்து மன்னனுக்கு மரியாதையளித்து நாட்டு நடப்புகளை பற்றி பாடலாக பாடிவிட்டு செல்கின்றனர்...அவர்கள் பாடலாக பாடியது மன்னனுக்கு சாதகமாக இருக்கவில்லை மாறாக பாதகமாகவே இருந்தது.நீண்ட நேர சிந்தனைக்கு பிறகு நாட்டை அழிவில் இருந்து எப்படியாவது காப்பாற்றவேண்டும் என முடிவெடுத்து அமைச்சர் சபையுடன் கலந்துரையாடுகிறான்.......அவர்கள் இதற்கு ஒரு யோசனை கூறுகின்றனர்...அதாவது நாட்டில் பிரபலமான துப்பறியும் நிபுணர்கள் இருவரை வரவழைத்து நாட்டு நிலைமை இவ்வாறு சென்றதற்கான காரணத்தை அறிவதே அமைச்சர்களது திட்டமாகும்...யோசனை கூறப்பட்ட சமயத்தில் அவ்விடத்தில் முதலமைச்சர் இருக்கவில்லை....எங்கள் கதை பிரகாரம் முதலமைச்சர் ஒரு உளறுவாயன்..அதனால் இந்த விடயத்தை பற்றி முதலமைச்சரிடம் யாரும் மூச்சு கூட விடக்கூடாது என்பது அரசன் கட்டளை.

துப்பறியும் தொழிலில் சிறந்து விளங்கும் 2 துப்பறியும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விடயம் பற்றி தெளிவாக விளக்கமளிக்கப்பட்டு உண்மையை அறிந்து வருமாறு அரசனால் அனுப்பப்படுகின்றனர்....
அரசனின் கட்டளையை ஏற்று அவர்களும் சபையை விட்டு வெளியே செல்ல அந்த இடத்தில் திரை மூடப்பட்டு மீண்டும் திறக்கப்படுகிறது.
திரையில் அந்த நிபுணர்கள் இருவர் மட்டும் தோன்றுகின்றனர்.எவ்வாறு இதை கண்டுபிடிப்பது என அவர்களுக்குள்ளேயே பேசிக்கொண்டு அரசசபை காவலனின் வீட்டை கடந்து செல்லும் போது உள்ளே இரண்டு பேர் பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்கிறது....
பேசிக்கொண்டிருந்தது காவலனும் காவலனின் மகனும் தான்....அதாவது இந்த காட்சி என்னவென்றால்;காவலின் மகன் தன் படிப்பை தொடர தன் அப்பாவிடம் பணம் கேட்கின்றான்...ஆனால் காவலனிடமோ பணம் இல்லை,என்ன செய்வது என்று அறியாமல் தவிக்கின்றான்...அதற்கு மகன் மன்னன் ஏழைகளின் படிப்புச்செலவுக்காக நிறைய செலவளிக்கின்றார் என வெளியே எல்லோரும் பேசிக்கொள்கின்றனர் எனக்கூற,மனக்குமுறலை அடக்க முடியாதவனாய் காவலன் தனக்குத்தேரிந்த உண்மைகளை மகனிடம் கூறுகின்றான்....அதாவது அரசன் தெரிந்தோ தெரியாமலோ பல நல்ல காரியங்களுக்காக செலவிடும் பணத்தை எல்லாம் அந்த முதலமைச்சர் அரசனுக்கு தெரியாமல் ஆட்டையை போடுவதுதான்.....
இதை வெளியில் நின்று கேட்டுவிட்டனர் உளவாளிகள் இருவரும்....மன்னன் கொடுத்த வேலை சுலபமாக முடிந்துவிட்டது எனினும் அதனை நிரூபிக்க தற்போதைக்கு எம்மிடம் தகுந்த ஆதாரங்கள் எதுவும் இல்லை...அதை திரட்டி மன்னனிடம் சமர்பித்து அந்த முதலமைச்சருக்கு தகுந்த தண்டனை பெற்றுக்கொடுப்போம் என சபதம் மேற்கொண்டு ஆதாரம் திரட்ட கிளம்பினர் இரண்டு உளவாளிகளும்.
இருவரும் முதலமைச்சர் வீட்டுப்பக்கம் சென்று தம் வேலைகளை தொடங்கினர்....நாளடைவில் தேவையான ஆதாரங்களை திரட்டி விட்டு மன்னனிடம் சென்று அவற்றை சமர்ப்பித்து நிகழும் குற்றங்களுக்கு யார் காரணம் என்பதை கூறினர்....செய்வதறியாது குற்றத்தை முதலமைச்சருக்கு ஒத்துக்கொள்ள வேண்டியதாயிற்று
குற்றத்தை ஒத்துக்கொண்ட முதலமைச்சருக்கு தன் பாணியில் தண்டனை வழங்கிவிட்டு இனி இந்த ராஜ்ஜியத்தில் நல்லாட்சி மட்டுமே நிகழ வேண்டும் என Message கூறிவிட்டு சபை இத்துடன் கலையட்டும் என கட்டளையிட்டு அந்த இடத்தை விட்டு நீங்குகிறான் அரசன்.
ஆரம்பத்தை போல ஒவ்வொருவராக சபையை விட்டு கிளம்ப சபை திடீரென அரசன் மட்டும் திரும்பி வருகிறார்.வந்து (ஆரம்பத்தில் சொன்னேனே ஒரு அமைச்சர் மட்டும் தூங்கிக்கொண்டிருக்கிறார் என்று) அமைச்சரை எழுப்பி "நாடகம் முடிந்துவிட்டது வா கிளம்பலாம்"என தன்னுடன் அழைத்துக்கொண்டு செல்கிறார்.....திரை மூடப்படுகிறது..

இது தான் எங்கள் கதை.....இதை வாசிக்கும் போது அந்த அளவு சுவாரசியம் இருக்காது என்பது எனக்குத்தெரியும்...இருந்தாலும் முடிந்தால் நாடகத்தை நேரில் பார்த்த சக மாணவர்களிடம் கேட்டுப்பார்த்தால் சொல்வார்கள்.....இதில் முக்கிய விடயமே வசனங்கள் தான்....4 வருடங்கள் பழமையான வசனங்கள் என்பதால் எங்களில் யாருக்கும் எல்லா வசனங்களும் நினைவில் இல்ல....இந்த நாட்கள் அந்த கால கட்டத்தில் எங்கள் நகரத்தில் பிரபலமாக பேசப்பட்டற்கான காரணம் மேலே கூறப்பட்ட கதையுடன் நகைச்சுவையை தாராளமாக தெளித்துவிட்டிருந்தது தான்.குறிப்பாக மன்னனிடத்தில்.....

பின் குறிப்பு-அந்த கால கட்டத்தில் எங்கள் வயது வெறும் 16 தான்.அதனால் இப்போதெல்லாம் உள்ளது போல நல்ல குவாலிட்டி யான கேமரா,செல்போன் இருக்கவில்லை....அந்த நேரம் எங்களிடம் வெறும் VGA கேமரா Mobile தான் இருந்தது....அதனால் தான் பிரசுரிக்கப்பட்ட படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு தெளிவில்லை என்பதை தாழ்மையோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

கதாபாத்திரமேற்று நடித்தவர்களின் விபரமும் அவர்களின் Facebook Profile பெயரும்.
மன்னன்---------------மணி முடி மகாராஜா---------------Ratheesh Shreeni
முதலமைச்சர்--------மலை முழுங்கி மகாதேவன்------Sujeevan Wijai
புலவர்-1---------------விஜய் முத்துப்பாண்டி--------------Mithoon N-Cage (அட நான் தாங்க)
புலவர்-2--------------அஜித் அருணாசல தேவர்-----------Hariharan Anandarajah
அமைச்சர்-1-----------குடுமித்தேவர்------------------------Kaushigan Kaushi
அமைச்சர்-2-----------வெள்ளைத்தேவர்(தூங்குபவர்)----kawshick Prasanna
காவலனின் மகன்----பெயர் இல்லை-----------------------Selvarajah Nitharshan
முதலமைச்சரின் மகன்---பெயர் இல்லை------------------Kisho Kumar
உளவாளி-1-------------கருத்து கந்தசாமி-------------------Maiuran Ncage
உளவாளி-2-------------நொண்டி லொடுக்கு பாண்டி------Thushanthan Ncage
காவலன்----------------நொண்டி குப்பம் வவ்வாலு--------Prince Viki
இன்னும் நிறைய பேர் நடிச்சாங்க சத்தியமா நினைவுக்கு வரல......

பின்னணி இசை,இயக்கம்------------------------------------Shan Dhanu.
மீண்டும் என் மற்றொரு இனிய அனுபவத்தோடு சந்திப்போம்-இவன்--Mithoon.J

Tuesday, November 23, 2010

வெற்றிக்கு வழி


மின்சாரம் தடைப்படும் போதெல்லாம்
'மெழுகுவர்த்தி'ஏற்றி
ஒளி பெறுவதைப் போல
தோல்வி அடையும் போதெல்லாம்
ஆறுதல் சொல்லி
'வெற்றிக்கு வழி'சொல்வாயே
தோழா.......

Tuesday, November 16, 2010

யப்பா.....இவிங்கலயெல்லாம் வெச்சுக்கிட்டு........


எத்தனை நாட்களுக்கு தான் வெறும் ட்ரைலரை மட்டும் எடுத்துக்கொண்டிருப்பது என வீர வசனமெல்லாம் பேசி ஏதாவது உருப்படியா செய்யணும் னு கேமரா வும் கையுமா ஏற்கனவே பார்த்து வெச்ச நல்ல லொகேஷன் க்கு நாங்க நாலு நண்பர்கள் கிளம்பினோம்......

தீர்மானிக்கப்பட்ட கதை னு ஒன்னும் பெருசா இல்ல...இருந்தாலும் நண்பர்களில் ஒருவன் சுடச்சுட ஆக்கபூர்வமா யோசிக்கக்கூடியவன்...அவன் ஒருத்தனை நம்பி மீதமா இருந்து மூணு பேரும் காட்டு வழி பாதையெல்லாம் கடந்து குறிப்பிட்ட இடத்துக்கு வந்து சேர்ந்தோம்....

மாங்கு மாங்கு னு கஷ்டப்பட்டு ஐந்து,ஆறு மணித்தியாலங்கள செலவு செஞ்சு நிறைய க்ளிப்பிங்க்ஸ் எடுத்தோம்....எங்க நாலு பெற பொறுத்தவரைக்கும் திருப்தியா வந்துச்சு.

wall papers க்கு தேவைப்படும் னு எக்கச்சக்க 4ட்டோஸ் அதாங்க photos வேற எடுத்துகிட்டோம்...

வேகாத வெயில்ல நடை நடையா நடந்து ஒரு மூணு மணிப்போல வீட்டுக்கு வந்து சேர்ந்து Editing (படத்தொகுப்பு) வேலைகள ஆரம்பிச்சோம்.....

Edit பண்ணி முடிச்சுட்டு பார்த்தா.........5,6 மணி நேரங்கள் சுருங்கி ஒன்றரை நிமிஷமா பல்லை காட்டிக்கொண்டு இருந்துச்சு.....

அதா நினைச்சு சத்தியமா சந்தோஷம் தான் பட்டோம்......காரணம் எடுக்கப்பட்ட ஒன்றரை நிமிஷமும் திருப்தியா வந்துருந்துச்சு......

இவ்வளவு நேரம் இத எதுக்கு சொன்னேன்னா நாம எல்லோரும் நாங்க பெருசா செலவெதுவுமில்லாம எடுத்துட்டிருக்க இந்த படத்துக்கே இவ்வளவு கஷ்டப்படனும்னா......நம்ம சினிமா industrie ல எடுக்குற படங்களுக்கு எவ்வளவு கஷ்டப்படுவாங்க..........

so அவங்களுக்கு நாம செய்யக்கூடிய சின்ன உதவி என்னன்னா எல்லா படங்களையும் இல்லன்னாலும் atleast ரொம்ப பிடிச்ச படங்களையாவது திரையரங்குகள்ள போய் பார்க்கிறது தான்.....

இப்போ எங்க மேட்டருக்கு வருவோம்......எங்க பட ஹீரோ ஒரு முக்கியமான விஷியமா அதாவது அவர் படிப்பு விஷியமா அங்க இங்க னு திரிஞ்சுகிட்டு இருப்பதாலும்,,,,,இருந்த 2 நண்பர்கள் மருத்துவ படிப்பை தொடர பல்கலைக்கழகம் செல்வதாலும் எங்க படப்பிடிப்பு சுமார் ஒரு வாரமளவுக்கு ஒத்திவைக்கப்படுகிறது........

ரொம்ப சீக்கிரமா எங்க படத்த நீங்க பார்க்கலாம்.....கவலபடாதிங்க......


நட்பு


உயிர் போகும் நேரத்தில்
முகம் பார்த்து உயிர் பிரிய
வேண்டும் என்று நினைக்கும் உறவு -காதல்
உயிர் போகும் போதும்
உயிர் குடுக்கத் துடிக்கும் உறவு -நட்பு.

கொட்டிக்கிடக்கும் காதல்


என்னிடம்
கொட்டிக்கிடக்கும் காதலை
எதைக் கொடுத்தும்
வங்கி விட முடியாது
காதலைத் தவிர!

Monday, November 15, 2010

ஒதுக்கப்பட்ட மக்களும்,மறுக்கப்பட்ட அங்கீகாரமும்


கடிகார முள் மாலை 4 மணியை தழுவியதுமே அவ்வளவு நேரம் இதமாக வீசிய காற்றின் கோர முகம் லேசாக வெளிப்படத் தொடங்கும் மத்திய மலை நாட்டில்.
எனினும் மனைவி மக்களின் நலன் கருதி வாட்டும் அந்த குளிரை கூட பொருட்படுத்தாமல் முழு மூச்சாக உழைத்துக் கொண்டிருக்கும் நம் மலையகத் தொழிளாலர்களுக்கு தினக்கூலிகள் எனும் பெயர் மட்டும் தான் மிச்சம்.

இந்தியாவில் இருந்து தேயிலையில் மாசி எடுக்க வந்த வம்சாவளி தான் நம் வம்சாவளி என என்னை செதுக்கிய ஆசிரியர்களில் ஒருவர் கூறக்கேட்டுள்ளேன்.அந்த பெயர் இன்னும் மாறிய பாடில்லை.

இன்று காலை வேளையில் என் நண்பர்கள் மூவருடன் photo session இற்காக நகரை விட்டு விலகி நிற்கும் ஒரு புறநகர் தோட்டப்பகுதிக்கு சென்றேன்.நேரம் சரியாக 11 இருக்கும்.சூரியன் உச்சத்தை தொட்டுக்கொண்டிருந்தது.பாதையில் நடந்து சென்ற எங்களுக்கே வியர்த்துக் கொட்டிக்கொட்டியது.ஒரு அளவுக்கு மேல் எங்களால் நடக்க முடியாமல் மரநிழலில் தஞ்சம் புகுந்தோம்.

அதாவது கொழும்பு வெயிலை போல் வியர்த்துகொட்டும் வெயில்ல அல்ல என்றாலும் அதை விட கொடுமையான சுட்டெரிக்கும் வெயில் தான் எங்கள் பகுதிகளில் அதிகமாக அடிக்கும்.இன்று கூட அவ்வாறான வெயிலில் தான் மாட்டினோம் நாங்கள்.

மரம் தந்த இதமான நிழல் ஒருபுறமிருக்க அதை அனுபவிக்க முடியாமல் கண் முன் அறங்கேரிக்கொண்டிருந்த காட்சிகள் உறுத்தின.

பாரமான கூடையை முதுகில் சுமந்து முரட்டு தேயிலை செடிகளின் மத்தியில் இல்லாத பாதைகளை கண்டு பிடித்து தேயிலை பறிக்கும் பெண்கள்,கட்டை காற்சட்டையுடன் கையில் கூரான கத்தி சுமந்து கவ்வாத்து வெட்டும் ஆண்கள்....இன்னும் பலவற்றை கூறிக்கொண்டே போகலாம்.

எல்லாவற்றையும் விட கொடுமையாக என் கண்ணில் பட்டது நான் படித்த அதே பாடசாலையில் கல்விகற்ற சகோதரன் ஒருவன் தன முதுகில் மூடையுடனும் கையில் கத்தி கொண்டும் எதிரில் நடந்து வந்தது தான்.என்ன தான் பெரிய கல்லூரியாக இருந்தாலும் எத்தனை நீதவான்கள்,மருத்துவர்,பொருளியலாளர்,முகாமையாளர் களை உருவாக்கிய போதும் மேலே கூறப்பட்ட சகோதரன் போல சிலரையும் உருவாக்கத்தவருவதில்லை.இது பாடசாலையின் பிழையோ அல்லது ஆசிரியர்களின் பிழையோ அல்ல.......சமுதாயத்தின் பிழை.

சமீப காலமாக இனவாதம் ஒடுக்கப்பட்ட நிலையிலும் நம் நாட்டின் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக நிற்கும் தோட்டப்புறத்து மக்களுக்கு கிடைக்கவேண்டிய அங்கீகாரம் இன்னும் கிடைத்தபாடில்லை.

அங்கீகாரம் கிடைக்க இறைவனை பிரார்த்திப்போமாக.

------ஒரு தாய் மக்கள் நாமாவோம்------

அன்புத்தோழி அனுப்பிய அறிவுரை


நீ தேடிப்போகும் அன்பு அழகானது
உன்னைத் தேடி வரும் அன்பு ஆழமானது.

Sunday, November 14, 2010

மைனா......


ட்ரைலர் இல் போட்ட சுவாரசியமான காட்சிகளும் ஒரு குறிப்பிட்ட பாடலின் தாளம் போடும் இசையும் இப்படத்தை பார்த்தே தீர வேண்டும் என எனக்குள் ஆசை லேசாக எட்டிப்பார்த்தது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தர்ப்பமும் சிறப்பாக அமைய என் வீட்டு தியேட்டரில் முதல் முறையாக எனக்கு மட்டும் சிறப்புக்காட்சி காண்பிக்கப்பட்டது.அதாவது நான் மட்டுமே தனியாக இருந்து இந்த படத்தை பார்த்தேன் னு சொல்ல வந்தேங்க.....

இப்போ படத்துக்கு வரலாம்-
இந்தப்படத்தை பார்க்கும் போது தமிழ் சினிமா ஒரு நல்ல இடத்தினை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

இப்படிப்பட்ட படத்தை தம் பேனர்கள் மூலமாக வெளியிட தீர்மானித்த Red Giant Movies-உதயநிதி ஸ்டாலின்,AGS Entertainment-கல்பாத்தி S.அகோரம் ஆகியோர்களுக்கு முதலில் ஒரு சல்யூட்.

கதை ஆரம்பிப்பது தீபாவளிக்கு முதல் நாள் துணை சிறை அலுவலர் பாஸ்கர் வீட்டில் ஒரு தொலை பேசி உரையாடலுடன்.

சற்று மெதுவாக கதை நகர ஆரம்பிக்க லேசாக சூடு பிடிக்க தொடங்கியது மைனா....கிராமத்து பாஷைகள் சூப்பர்......சிறைக்கைதி தப்பியதால் தீபாவளியை கொண்டாட முடியாமல் தவிக்கும் போலீஸ்காரர்களின் நடிப்பு உண்மையான போலீஸ்காரர்களின் நிலையை பிரதிபலிப்பதாக அமைந்திருப்பது சிறப்பு.

கதையின் நாயகன் சுருளி தன் காதலி மைனா வை அடைய பட்டிருக்கும் கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை.

சுருளியும் மைனா வும் சேர்ந்தபின் கஷ்டப்பட்டு பலகாரக்கடை ஆரம்பித்து பெரியாள் ஆவது போன்று காட்டி விட்டு சட்டென்று அது கனவு என தெரியவந்ததும் நாயகி மைனா "3 னே நிமிஷ பாட்ல பெரியாள வந்துட்டா எவ்வளோ நல்லாருக்கும்"னு கேக்குற இடம் கைதட்ட வைக்கிறது.

சுருளியை கைது பண்ணி போலீஸ்காரர்களான பாஸ்கரும் ராமையாவும் நாயகி மைனா வுடன் வழிமாறி மூணாரு வந்து சேர்வது ரசிக்கும் படியாக உள்ளது.

தம்பி ராமையா அந்த கேரக்டர் ஆகவே படம் முழுவதும் வாழ்ந்துள்ளார். மைனாவிட்கு காலில் அடிபட்டதும் அவளை தூக்கிக்கொண்டு பல் மருத்துவமனைக்கு சென்று டாக்டரை மிரட்டி வைத்தியம் செய்யும் இடத்திலும் போலீஸ் இற்கு எதிராக நடு ரோட்டில் சாலை மறியல் செய்யும் இடத்திலும் நாயகன் விதார்த்தின் நடிப்பு சிறப்பாக அமைந்துள்ளது.

தொடர்ந்து வரும் பஸ் பாடல் பார்க்கும் அனைவரையும் தாளம் போட வைத்திருக்கிறது.

பஸ் விபத்துக்குள்ளான பிறகு நடக்கும் அந்த குறிப்பிட்ட செயலுக்கு பிறகு பாஸ்கரும் ராமையா வும் சுருளிக்கு நன்றி சொல்லும் காட்சி நெகிழ வைக்கிறது.

சிறைக்கு வந்து சேர்ந்ததும் சுருளியை மற்ற போலீசார் ஆக்ரோஷமாக தாக்குவது அவர்களது மனக்குமுறலை வெளிக்காட்டுகிறது.

ராமையாவின் மனைவி கேரக்டருக்கு உருவம்,குரல் இல்லாத போதும் செல் போனில் அடிக்கடி வாழ்ந்திருக்கிறார்.

இதற்கு பிறகு கிளைமேக்ஸ்....சோகம் இழையோடுகிறது............

கிளைமேக்ஸ் இல் அப்படி என்ன தான் நடந்தது என்பதை தயவு செய்து படத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்....

இயக்குனர் பிரபு சாலமன் இற்கு ஒரு சிறப்பான வெற்றிப்படமாக மைனா அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை....

மைனா திரைப்பட ட்ரைலரை காண இவ்விடத்தில் click கவும்






Saturday, November 13, 2010

சந்திக்க வேண்டும் காதலியை


காதலை
எப்பொழுது சந்தித்தேனோ
அப்பொழுது தொடங்கியது
என் வாழ்வு
என்றாலும்
வாழ்நாள் முடிவதற்குள்ளாவது
சந்தித்துவிட வேண்டும்
என் காதலியை

Friday, November 12, 2010

அருமையான குழு...அழகான பாடல்....


நா.முத்துக்குமார் வழக்கமாக காதல் பாடல்களில் கலக்குவார்.அவரை பற்றி சொல்லவே தேவையில்லை.இது போன்ற பாடல் புதியது என்றால் அது பாடகர் விஜய் ப்ரகாஷ் இற்கு தான்.இதுவரை காலமும் ஓம் சிவோகம்,ஹோசானா...போன்று சற்று வித்தியாசமான பாடல்கலையே தேர்வு செய்து பாடிக்கொண்டிருந்த இவருக்கு இப்பாடல் சற்று வித்தியாசம்...அதாவது இது கொஞ்சம் பீட் அதிகமான பாடல்...எனினும் சக்கை போடு போட்டிருக்கிறார் விஜய்...இவரது குரலுக்கு இப்பாடல் காண கச்சிதமாக பொருந்தியிருக்கிறது.

அட என்ன பாட்டு னே சொல்லலயா?பாஸ் என்கிற பாஸ்கரன் ல உள்ள ஐலே ஐலே.....தான்..

பாடல் காட்சியாக்கப்பட்ட விதம் சொல்லவே தேவையில்ல...அவ்வளவு சூப்பர்......
நாயகன்,நாயகி யை மிக அழகாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

முத்தத்தை கருவாக வைத்து பாடப்படுகிறது இப்பாடல்.எனினும் எல்லை மீறாமல் நாகரீகத்தோடு ரசிக்கும் படியாக எழுதியிருப்பது நா.முத்துக்குமாரின் திறமைக்கு ஓர் மகுடம்.

யுவனின் இசை நெஞ்சை வருடுகிறது....இது போன்ற பாடல்களை கேட்கும் போது தமிழ் சினிமா வின் trend மாறிக்கொண்டிருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது....

ஆகமொத்தத்தில் இப்படிப்பட்ட ஓர் அருமையான பாடலை வெளியிட்டதில் இப்பாடல் சார்ந்த குழுவிற்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இனி இப்பாடல் வரிகள் உங்களுக்காக என் வலைத்தளத்தில்.


ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே...
ஐலே ஐலே வெண் மேகக்கூட்டங்கள் கீழே..

புடிச்சிருக்கு புடிச்சிருக்கு
கொதிக்குது காய்ச்சல் போலே
அணலிருக்கு குளிரிருக்கு-எல்லாமே உன்னாலே
ஒரு முத்தம் தந்து செல்கிறாய் தண்டவாளத்தை போலே...
மறு முத்தாம் ஜோடி கேட்குதே மீண்டும் தீண்டடி மேலே...
இதழ் மொத்தம் ஈரமானது பாரமானதை போலே
ஏதோ ஓர் மோகம்.....இது ஏகாந்த தாகம்....

அந்நாளில் ஆப்பில் தின்றதடி ஏவாள முத்தாம்.
பின்நாளில் ஆண்கள் வம்சத்திலே அதனால் யுத்தம்
எந்நாளும் கேட்கும் நிற்காமல் முத்தச்சத்தம்...
முத்தங்கள் மோதிக்கொண்டால் தான் உலகம் சுத்தும்.
நம் ஆதியும் அந்தமும் முத்தமே முத்தமே.....
முத்தம் தா முத்தம் தா கண்மணி.....
யாரையும் வீரனாய் முத்தமே மாற்றுமே
முத்தத்தால் தாகம் அது மின்சாரமாகும்.....

அன்பென்னும் வேதம் சொல்லுமடி அன்னை முத்தம்.....
அறிவென்னும் பாடம் சொல்லுமடி தந்தை முத்தம்...
ஆகாயம் தாண்டச்சொல்லுமடி காதல் முத்தம்...
அதனால் தான் எங்கும் கேட்குதடி வெற்றிச்சத்தம்.

என் வாழ்க்கையை மாற்றுதே முத்தமே...முத்தமே..
முத்தம் தா...முத்தம் தா...கண்மணி.......
காலமும் நேரமும் முத்தத்தால் மாறுதே....
முத்தத்தால் தேகம் அது மின்சாரமாகும்.....

இப்பாடலை காண இங்கே click கவும்.

ரயில் பயணம்


இப்பூவுலகினில் அவதரித்திருக்கும் அனைத்து மானிடப்பிறவிகளும் அனுபவிக்க ஏதுவான அம்சமான பயணமே இவ் ரயில் பயணமாகும்.

எனக்கு ரயிலில் பயணித்த அனுபவங்கள் நிறையவே உண்டு.

எனினும் சுமார் மூன்று வருடங்களுக்கு முன் தொடர்ச்சியாக ஒரு ஐந்து,ஆறு மாதங்களாக சென்று வந்த ரயில் பயணங்களை என் கடைசி மூச்சிருக்கும் வரை என்னால் மறக்க முடியாது.

காரணம் அந்த குறிப்பிட்ட காலப்பகுதியில் இந்த ரயில் பயணம் தந்த உறவுகள்,சுவையான அனுபங்கள் என பலவற்றை பட்டியலிட்டு கூறலாம்.

எங்கள் நண்பர் குழு வட்டத்தை தெரிந்தோ தெரியாமலோ ஒரு நல்ல பழக்கம் பற்றிக்கொண்டிருந்தது.வேறொன்றுமில்லை போகும் இடமெல்லாம் புகைப்படங்களை click இட்டு விடுவதுதான்.

அவ்வாறு எடுக்கப்பட்ட படங்களை பார்த்துக்கொண்டிருக்கும் போது தான் என் வலைத்தளத்தில் இதைப்பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் எனை ஆட்கொண்டது.

ஒவ்வொரு படங்களையும் next button ஐ அழுத்தி அழுத்தி பார்க்கும் போது பழைய தமிழ் படங்களில் வருவது போல் சுருள் சுருளாக நினைவுகள் நெஞ்சில் கரைபுரண்டோடுகின்றன.

அந்த காலகட்டத்தில் ஒவ்வொரு வெள்ளியும்,திங்களும் ரயில் பயணம் எங்கள் வாழ்க்கை சக்கரத்தில் இன்றியமையாத ஒரு அம்சமாக மாறிவிட்டிருந்தது.

வேறெதற்காகவும் அல்ல என் நண்பன் ஒருவனின் பதின்ம பருவத்து காதலுக்காக தான்.

ஒருவன் காதலுக்காக சுமார் 10 நண்பர்கள் ரயில் ஏறிய அளவுக்கு அதாவது அந்தளவு உத்தமமான நட்பு எங்களுக்கிடையில்.

அது அப்போது மட்டுமல்ல கடவுள் புண்ணியத்தில் இப்போதும் கூட தொடர்கிறது.

என் நண்பன் காதலித்த அந்தப் பெண் அவள் நண்பர்கள் புடை சூழ தனியார் வகுப்புக்களில் கலந்து கொள்ளும் ஒரே நோக்கோடு மலையகத்தின் முத்தாம் எங்கள் ஹட்டன் நகரை நோக்கி ரயில் மூலம் படையெடுப்பாள் வாரத்தில் இரண்டு நாட்கள்.

அந்த இரண்டு நாட்களும் நாமும் அதே ரயிலில் அவர்கள் பயணத்தில் சரிபாதி வரை கலந்து கொள்ள தவறியதில்லை.

ரயிலின் சக்கரம் போல் காலமும் தா சக்கரத்தை மெதுவாக நகர்த்த ஆரம்பித்த காலம் அது.

நாளடைவில் அந்தப்பெண்ணின் நண்பர் வட்டத்தில் ஒருத்தி என் ஆருயிர் தொழியானால்.

தொடர்ந்து வந்த இரண்டு வருடமும்.அவர்கள் இங்கேயே தம கல்வியை தொடர என் நட்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே சென்றது,சென்றுக்கொண்டிருக்கிறது,நிச்சியம் செல்லும்.

அவர்கள் படிப்பு முடித்து சொந்த ஊர் திரும்பினர்.ஆனால் என் நண்பனின் காதல் இன்னும் ஒரு பக்க சில்லுடைய ரயில் போலவே தொடர்ந்துகொண்டிருக்கிறது.அதாங்க .......ஒருதலைக்காதல்

இப்போதெல்லாம் ரயிலை கண்டாலே இந்த நினைவில் அடிக்கடி மூல்கிவிடுகிறோம் நானும் அந்த குறிப்பிட்ட நண்பனும்.

இன்னும் எத்தனை வருடம் சென்றாலும் இந்த நினைவுகள் மாத்திரம் நெஞ்சை விட்டகலாது.,,,,,,,எனக்கு இந்த ரயில் தந்த அழகிய உறவு,இனிமையான அனுபவங்களை உங்களிடத்தே பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன்......

இன்னும் ஒரே ஒரு விஷியம் சொல்லனும்........
ராயல் பயணங்கள் எப்போதும் முடிவதில்லை என் நண்பனின் காதலைப்போல்.

(பி.கு-மேலே post செய்யப்பட்டுள்ள படம் எங்களால் எடுக்கப்பட்ட ஏகப்பப்பட்ட படங்களில் ஒன்றாகும்.


Thursday, November 11, 2010

முடிவு


"என்ன ஆபீஸ் இது?அஞ்சு நிமிஷம் லேட்டா வர முடியல.எது செஞ்சாலும் பாராட்டவே தெரியாத மேலதிகாரி.எதையும் புரிஞ்சுக்காத சக ஊழியர்கள்.இனியும் இந்த ஆபீஸ்ல வேலை பார்த்தா பைத்தியம் பிடிச்சிடும்.இன்னிக்கே ராஜினாமா கடிதம் கொடுக்க வேண்டியது தான்..."

-இது தான் அவள் காலையில் எடுத்த முடிவு.
லிப்டில் ஏறினாள்.உள்ளே வினு.ஆச்சர்யம்...6 ஆண்டுகளுக்கு பிறகு அவளை பார்க்கிறாள்!

"ஏய் வினு...எப்படி இருக்கடி?எங்க இந்த பக்கம்?
"நல்லா இருக்கேன்.இன்னிக்குதான் இந்த ஆபீஸ்ல செர்ந்திருக்கேன்பா..."
"இங்கயா?"-அதிர்ந்தாள்.
"ஆமாடி.என்னோட பழைய மேலதிகாரிகிட்ட கொஞ்சம் பிரச்சனை..."
"என்ன ஆச்சு வினு?"
"அவரு என்கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணினாரு.அதான்..."

வினுவே தொடர்ந்தாள்..."எல்லோரும் சொன்னாங்க ...'இங்க அஷ்வதான்னு ஒரு மேடம் இருக்காங்க...நல்லா வேல பார்ப்பாங்க,நல்லா பழகுவாங்க'ன்னு .நான் நினைச்சு கூட பார்க்கல.அது நீதான்னு.....உன்மேல எல்லோருமே நல்ல அபிப்பிராயம் வச்சிருக்காங்க....சந்தோஷம்டி.....அப்புறம் பார்க்கலாம்"என்று வினு நகர அஷ்வதா இருக்கைக்கு திரும்பினால்.

வழியில் மேலதிகாரி அழைத்தார்..."என்னம்மா எதாவது பிரச்சனையா?"

"இல்ல சார்"என்றவள் இருக்கையில் அமர்ந்தவுடன் ராஜினாமா கடிதத்தை கிழித்து எறிந்தால்!

சூரன் போர்-சூர சம்ஹாரம்


சூரன் போர் அல்லது சூரசங்காரம் என்னும் கந்தபுராண நிகழ்வு இவ் வருடம் கந்தஷஷ்டி விரத இறுதி நாளான நவம்பர் மாதம் 11ம் திகதி (11.11.2010) வியாழக்கிழமை உலகிலுள்ள அனைத்து முருகன் ஆலயங்களிலும் சிறப்புற இடம்பெற்றது.

கந்தபுராணம் - யுத்தகாண்டம் - கதைச் சுருக்கம்

முருகப்பெருமான் அசுரர்களான சூரபத்மனாதியோரை வதம் செய்த திருவிளையாடலையே நாம் கந்தசஷ்டி விரத விழாவாகக் கொண்டாடுகின்றோம். சூரபத்மன்; ஒருபாதி “நான்” என்கின்ற அகங்காரமும், மற்றொருபாதி “எனது” என்கின்ற மமகாரமாகவும் அமையப் பெற்றவன்.

சூரபன்மன் ஆணவ மலம் கொண்டவன். தாரகாசுரன் மாயா மலம் உடையவன். சிங்கமுகன் கன்ம மலத்தின் வடிவம். இவர்களை ஞானம் என்கின்ற முருகனது வேல் வெல்கிறது. அதாவது எம்மைப் பீடித்துள்ள ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களில் இருந்து வீடுபேறடைய ஞானம் என்ற இறை சக்தியால் மட்டுமே முடியும் என்பதைதே இன் நிகழ்வு எமக்கு அறிவுறுத்துகின்றது.


சூரபத்மனின் வரலாறு

பிரமதேவனுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் தக்கன் சிவனை நோக்கித் கடுந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றிருந்தான். ஆனால் வரத்தின் வலிமையைச் சிரத்தில் கொண்டு சிவனை மதியாது யாகம் செய்ததினால் சிவனால் தோற்றுவிக்கப் பெற்ற வீரபத்திர கடவுளால் கொல்லப்பட்டான்.

காசிபனும் கடுந்தவம் புரிந்து சிவனிடம் இருந்து மேலான சக்தியைப் பெற்றான். ஒருநாள் அசுரர்களின் குருவான சுக்கிரனால் (நவக்கிரகங்களுள் வெள்ளியாக கணிக்கப்பெறுபவர்) ஏவப்பட்ட "மாயை" என்னும் அரக்கப் பெண்ணில் மயங்கி தான் பெற்ற தவ வலிமை எல்லாவற்றையும் இழந்தான்.

இதனைத் தொடந்து காசிபனும் மாயை என்னும் அசுரப் பெண்ணும் இணைந்து மனித தலையுடன் கூடிய சூரபத்மனும், சிங்க முகம் கொண்ட சிங்காசுரனும், யானைமுகம் கொண்ட தாரகாசுரனும், ஆட்டின் முகம் கொண்ட அசமுகி என்ற அசுர குணம் கொண்ட பிள்ளைகளைப் பெற்றனர்.

இவர்களுள் சூரபதுமன் சர்வலோகங்களையும் அரசாளும் சர்வவல்லமைகளைப் பெற எண்ணி சுக்கிலாச்சாரியாரிடம் உபதேசம் பெற்று சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து; 108 யுகங்கள் உயிர் வாழவும், 1008 அண்டங்களையும் ஆரசாளும் வரத்தையும், இந்திரஞாலம் எனும் தேரையும், சிவசக்தியால் அன்றி வேரு ஒரு சக்தியாலும் அவனை அழிக்க முடியாது என்னும் வரத்தையும் பெற்றான். இவ்வரத்தின் பயனாக சூரன் தம்மைப்போல் பலரை உருவாக்கி அண்ட சராசங்களை எல்லாம் ஆண்டு வந்தான்.

சூரபதுமன் பதுமகோமளை என்னும் பெண்ணை மணந்து வீரமகேந்திரபுரியை இராசதானியாகக் கொண்டு ஆண்டுவரும் காலத்தில் அவனுக்கு பதுமகோமளை மூலம்பானுகோபன், அக்கினிமுராசுரன், இரணியன், வச்சிரவாகு ஆகிய புதல்வர்களும், வேறு மனைவியர் மூலம் மூவாயிரவரும் (3000-மூவாயிரம் பேரும்) பிறந்தனர்.

சூரபத்மன் தான் பெற்ற வரத்தின் வலிமையினால் ஆணவம் மிகுந்து கர்வம் கொண்டு இந்திரன் மகனான சயந்தன் முதலான தேவர்களை சிறையிலிட்டு சித்திரவதை செய்து அதர்ம வழியில் ஆட்சிசெய்யலானான்.

அசுரர்களின் இக் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். இறைவன் அவர்களைக் காப்பாற்ற திருவுளம் கொண்டு சூரபத்மன் முதலான பலம் மிக்க அசுரர்களைகளை அழிக்கும் சக்தி படைத்த ஆறுமுகன் அவதரித்தார்.

ஆறுமுகன் அவதாரம்

தேவர்களை துன்பத்தில் இருந்து காப்பாறும் நோக்குடன் சிவன் தனது நெற்றிக் கண்ணைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஆகிய ஐந்து முகங்களும், இவை தவிர ஞானிகளுக்கு மட்டுமே தெரியக்கூடிய “அதோமுகம்” (மனம்) என்னும் ஆறாவது முகமும் உண்டு.) அவைகளில் இருந்து ஆறு தீப்பொறிகள் வெளிப்பட்டன. அவற்றை வாயுபகவான் ஏந்திச் சென்று வண்ண மீனினம் துள்ளி விளையாடும் தண்மலர் நிரம்பிய சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்களின் மீது சேர்த்தான்.

அந்த தீப்பொறிகள் ஆறும் உலகின் பொன்னெல்லாம் உருக்கி வார்த்ததென ஆறு குழந்தைகளாக தோன்றின. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் சீராட்டி, பாலூட்டி வளர்த்து வரும் வேளை அகிலலோக நாயகி பார்வதி தன் மைந்தர்கள் அறுவரையும் ஒன்றாக அன்புடன் கட்டி அணைத்திட அவையாவும் ஒரு திருமேனியாக வடிவங் கொண்டு ஆறுமுகங்களும் பன்னிரு கரங்களும் உடைய ஒரு திருமுருகனாக தோன்றினன் உலகமுய்ய.

ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய திருவுருவை பெற்றமையால் “ஆறுமுகசுவாமி” எனப் பெயர் பெற்றார். இந்த ஆறு திருமுகங்களும் ஞாலம், ஐஸ்வர்யம், அழகு, வீர்யம், வைராக்கியம், புகழ் என்னும் ஆறு குணங்களைக் குறிக்கும்.

பிரணவ சொரூபியான முருகப் பெருமானிடம் காக்கும் கடவுளான முகுந்தன், அழிக்கும் கடவுளான ருத்திரன், படைக்கும் கடவுளான கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடக்கம். ஆறுமுகன் சிவாக்கினியில் தோன்றியவன். அதனால் “ஆறுமுகமே சிவம், சிவமே ஆறுமுகம்” எனப்பெறுகின்றது.


வீரவாகுதேவர் முதலான இலச்சத்து ஒன்பதின்மர் தோன்றல்

சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் புறப்படும்போது அதில் இருந்து வெளிப்பட்ட வெப்பத்தை தாங்கமுடியாது சிவனருகில் இருந்த பார்வதிதேவி பாய்ந்து ஓடலானார். அப்போது பார்வதிதேவியின் பாதச் சிலம்முகளில் இருந்த நவரத்தினங்கள் சிதறி விழுந்தன. அந்த நவமணிகள் மீது இறைவன்னின் பார்வை பட்டதும் அவைகள் நவசஜ்திஅளாக தோன்றினர். அந்த நவசக்திகளின் வயிற்றில் வீரவாகுதேவர் முதலான இலச்சத்து ஒன்பதுமர் (100009) தோன்றினர். இவர்கள் ஆனைவரும் பின்பு முருகனின் படைவீரர்களாயினர்.

அன்னை வழங்கிய சக்திவேல்

அம்மையும் தன்னைப்போன்ற ஒரு சக்தியை உருவாக்கி அதனை தனது சக்திகள் யாவும் கொண்ட ஓர் வீரவேலாக உருமாற்றினார். அம்மையப்பன் வெற்றிதரும் வீரவேலை முருகனிடம் வழங்கினர். ஏசனும் தன் அம்சமாகிய பதினொரு உருத்திரர்களைப் படைக்கலமாக்கி முருகனிடம் தந்தார்.

அம்மையப்பனிடம் வேல் வாங்கிய முருகன், தேரேறி தெற்கெ இருந்த வீரமகேந்திரபுரியை நோக்கி செல்கையில்; விந்தியமலை அடிவாரத்து மாயா புரத்தை ஆண்ட சூரனின் தம்பி தாரகாசுரன் (ஆனைகுகம் கொண்டவன்) கிரௌஞ்சம் என்னும் பெரிய மலையாய் உருமாறி வழிமறிக்க வீரவாகுதேவர் அவனுடன் போர் புரிகின்றார். ஆனால் தாரகன் தன் மாயையால் வீரவாகுதேவர் முதலான முருகனின் சேனையை அழுத்தி சிறைப்படுத்துகின்றான் அப்போது முருகனின் கூர்வேல் மாயை மலையை பிளக்க தாருகன் அழிகின்றான். வீரவாகுதேவர் முதலானோர் மலைச் சிறையிலிருந்து விடுபடுகின்றனர். (தாரகாசுரன் ஒரு சிவபக்தன். கூடுவிட்டு கூடுபாயும் வரத்தை சிவனிடமிருந்து பெற்றவன். தாரகனின் நண்பனான கிரௌஞ்சம் என்னும் பறவை அகத்தியரின் சாபம் பெற்று மலையுருவானது. அந்தமலையாக தனது மாயை சக்தியால் வீராவாகுதேவர் உள்ளிட்ட முருகனின் சேனையை சிறைப் பிடித்தான்.) சூரபத்மன் இச் செய்தி கேட்டு துடிதுடித்து வீராவேசம் கொண்டான்.

தந்தையிடம் இருந்து முருகன் பாசுபத அஸ்திரம் பெறுதல்:

மன்னி ஆற்றங்கரையில் சிவபிரானுக்கு ஆலயம் எழுப்பச் சொல்லி முருகன் தேவதச்சனைப் பணிக்கிறார். ஈசனும் முருகனுக்கு முன்னே தோன்றி பாசுபதம் என்னும் அஸ்திரம் வழங்குகின்றார். பின்னர் அந்த ஆற்றங்கரையான திருச்செந்தூர் நோக்கி மொத்தப் படையும் கிளப்புகின்றது. முருகன் அம்மையப்பர் ஆசியுடனும் தன் படைகளோடும் திருச்செந்தூர் வந்து தங்கினர். அன்கு பராசர முனிவரின் ஆறு புதல்வர்களும் முருகனை வரவேற்று வீழ்ந்து வணங்குகின்றனர்.

வீரவாகுதேவர் தூது செல்லல்:

முருகப் பெருமான் புதிதாக கட்டப்பெற்ற ஆலயத்தில் அமர்ந்து, தேவகுருவான குருபகவானிடம் சூரபத்மனின் முழுக் கதையையும் சொல்லுமாறு கேட்கின்றார். அதன் பின்னரே வீரவாகுதேவரை மட்டும் சூரபதுமன் ஆட்சிசெய்யும் வீரமகேந்திரபுரத்திற்கு தூது அனுப்ப முடிவாகின்றது.

முருகப் பெருமான் வீரவாகுதேவரை சூரனிடம் தூதனுப்பிச் சிறை வைத்த தேவர்களை விடுதலை செய்யுமாறு செய்தி அனுப்பினார். தூதின்போது, வீரவாகு சிறைப்பட்ட அமரர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு சூரனிடம் தூது உரைக்கின்றான். முருகன் என்ற பாலகனுக்கு அடிபணிந்து நான் தேவர்களை விடுதலை செய்ய வேண்டுமா? அது நடக்காத காரியம் என்று கூறி முழங்கலானான்.

சூரனின் ஆணவத்தால் தூது முறிகின்றது. அது மாத்திரமன்றி தூது சென்ற வீரவாகுதேவரையும் சிறையிலடையுங்கள் என உத்தரவிடுகின்றான். வீரவாகுதேவரை சிறைப்பிடிக்க சென்ற அவுணப் படையுடன் வீரவாகுதேவர் போர்புரிகின்றார். அப்போது நடந்த போரில் சூரனின் புத்திரனான வச்சிரவாகுவும் அசுரர் தலைவனானசகத்திரவாகு, ஆகிய இருவரும் வீரவாகுதேவரினால் கொலை செய்யப்படுகின்றனர்.

திருச்செந்தூரில் ஆறுமுகக்கடவுள், திருமால், பிரமன், இந்திரன் முதலிய தேவர்கள் போற்ற சிங்காசனத்தில் எழுந்தருளி வீற்றிருக்கும் போது வீரவாகுதேவர் திருச்செந்தூர் திரும்ன்பிவந்து முருகனிடம் தூது நிகழ்வுகளை முன் வைக்கிறான்.

முருகனும் இனியும் தாமதிக்கலாகாது என்று செந்தூரில் இருந்து இலங்கை சென்று அங்கிருந்து சூரனின் இராசதானியாகிய வீரமகேந்திரபுரி செல்ல தீர்மானிக்கின்றார்.

கந்தப்பெருமான் வீரபாகு தேவரை நோக்கி "பாவங்களை அளவில்லாமல் புரிந்து கொண்டிருக்கும் சூரபத்மன் முதலான அசுரர்களை அழித்து, தேவர்கள் துன்பம் நீங்கி, உலகம் நலம் பெறுவதற்காக இப்பொழுதே படையெடுத்து வீரமகேந்திரபுரிக்குச் செல்லவேண்டும்."நம் தேரைக் கொண்டுவா" என்று கட்டளையிட்டார்.

தங்கள் துயரம் எல்லாம் நீங்கியது என்று கருதிய தேவர்கள் கந்தப்பெருமானின் கழலிணைகளை வணங்கித் துதித்தனர். முருகவேளின் கட்டளைப்படி வீரவாகு தேவர் மனோவேகத் தேருடன் பாகனையும் அழைத்து வந்தார். சிங்காசனத்தில் இருந்து இறங்கிய எம்பெருமான், " நாம் சூரபன்மனை அழிக்க வீரமகேந்திரபுரி செல்கிறோம். நீங்களும் அவரவரது வாகனங்களில் புறப்பட்டு வாருங்கள்" என்று தேவர்களுக்கு உத்தரவிட்டார்.

பிரம்ம தேவர் அன்னப்பறவை மீதும், திருமால் கருடன் மீதும், இந்திரனும், வீரபாகு தேவரும் லட்சத்து எண்மரான தெய்வ வீரர்களும் மற்றைய தேவர்களும் தத்தம் வாகனங்கள் மீதும் ஏறிக் கந்தவேளைச் சூழ்ந்து சென்றார்கள்.

நினைத்த மாத்திரத்திலேயே எல்லாப் புவனங்களையும் அழிக்கும் ஆற்றல் பெற்ற படைத்தலைவர்கள் நூற்றியெட்டுப் பேரும் தொடர்ந்தார்கள். அதனை அடுத்து இரண்டாயிரம் வெள்ளம் பூதப்படைகளும் ஆரவாரத்துடன் புறப்பட்டன. வானவர்கள் பூ மழை பொழிந்தார்கள்.

பேரிகை, காளம், கரடிகை பல வாத்தியங்கள் முழங்கின. முருகப்பெருமானுடன் சென்ற பூதப்படைகளின் பேரொலி எங்கும் ஒலித்தது. அவர்கள் சென்றபோது ஏற்பட்ட புழுதி சூரிய சந்திரர்களுடைய ஒளியையும் மறைத்துவிட்டதாம். கடலில் பூத சேனைகள் இறங்கினார்கள். அவர்களுக்கு கடலே கணுக்கால் அளவுதான் இருந்தது. கடலில் இருந்து பெரிய பெரிய மீன்களும் திமிங்கிலங்களும் சிறு புழுக்கள் போன்று இருந்தன. பூதப்படை இறங்கி கலக்கியதால் அது சேறானது. அந்த சேறு உலர்ந்தபின் புழுதியாகி எங்கும் பறந்தது.

வீரமகேந்திரபுரி (சூரனின் இராசதானி) தென்கடலில் இருந்த ஒரு தீவு (தற்பொழுது அது நீரில் மூழ்கி உள்ளது). அதற்கு வடக்கே உள்ள தீவு இலங்கை. இலங்கை வழியாகப் எம்பெருமான் வீரமகேந்திரபுரியை நோக்கிச் சென்றபோது; பிரமன், திருமால், இந்திரன் ஆகிய மூவரும் சுவாமியை வணங்கி, "மகா பாவியாக உள்ள சூரபன்மன் இருக்கும் மகேந்திரபுரி தங்கள் திருப்பாதம் பதியத் தகுதி பெற்றதல்ல. அந்நகருக்கு அடுத்த எல்லையாகிய இங்கேயே தங்கியிருந்து போர்செய்வதற்குப் பாசறை அமைத்துக் கொள்ளலாம்" என்று வேண்டிக்கொண்டார்கள். சுவாமி அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்கள்.

தேவதச்சனை அழைத்து "உடனே விரைந்து இங்கு ஒரு பாசறை ஏற்படுத்து" என்று எம்பெருமான் ஆணையிட்டார். தேவதச்சன் உடனே மாடகூடங்களும் மண்டபங்களும் சோலைகளும், வாவிகளும் கொண்ட பாசறை ஒன்றை மனத்தால் நிர்மாணம் செய்து அப்படியே அதை ஸ்தூல வடிவிலும் கட்டினான். அந்தப் பாசறைக்கு "ஏமகூடம்" என்று பெயர் வைத்தார்கள்.

எம்பெருமானின் தேர் கீழே இறங்கியது. சுவாமி ஏமகூடத்தின் வீதிகளில் பூத சேனைகளை நிறுத்தினார். இலச்சத்தொன்பது வீரர்களோடும், தேவர்களோடும் திருக்கோயிலினுள் சென்று அமர்ந்தார் முருகப் பெருமான். அந்த ஏமகூடமே கதிர்காமம் என்பது ஐதீகம்.

[கதிர்காமம் என்றால் ஒளிமயமான விருப்பத்தை எல்லாம் நிறைவேற்றித் தருவது என்று பொருள். அங்கே சுவாமி ஒளிமயமாக விளங்குகிறார். எனவே அவரை நேரே தரிசிக்கக் கூடாதென்று திரை போடப்பட்டுள்ளது. அங்கே உள்ள கற்பூர தீப ஒளியைத் தரிசனம் செய்யவேண்டும்.]

ஏமகூடத்தில் இருந்து (கதிகாமத்தில்) போர் துவங்குகிறது.

பானுகோபன் வதை:

தாரகனையும் அவனுக்குத் துணை நின்ற கிரௌஞ்சத்தையும் பிளந்து அழித்துப் பின், தருமகோபன் (சூரனின் மந்திரி), சூரனின் மகன் அக்கினிமுகாசுரன் உள்ளிட்ட மூவாயிரவர் (3000)ம் இறந்தபின் சூரனின் மகனான பானுகோபன் போருக்குச் செல்கின்றான்.
பானூகோபன் மாயயால வித்தைகள் செய்து போர்செய்யும் வல்லமை படைத்தவன். சிறந்த சிவ பக்தன். நீதியாக நடப்பவன். சிவனே ம்சிர்றியவனாக முருகனாக அவதரித்து போருக்கு வந்துள்ளார். தேவர்களை விடுவித்தால் நாமும் நெடுநாட்கள் வாழலாம் என தந்தையாகிய சூரனுக்குக் கூறியும் அவன் ஆணவம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் தானே போருக்குச் சென்று ம்முருகனையும் அவன் சேனையையும் அழிக்கப் போவதாக வீராவேசம் கொண்டு போருக்குச் செல்ல ஆயத்தமானான். தான் மூத்தமகன் இருக்க தந்தை போருக்கு செல்வது சரியில்லை என கூறிய பானுகோபன் தான் போருக்குச் செல்ல அனுமதி தரும்படி சூரனிடம் வேண்டினான். சூரனும் மகனான பானுகோபனை ஆசீர்வதித்து போருக்கு அனுப்பிவைக்கின்றான். பானுகோபன் நன்நீர்க் கடலில் முருகன் சேனையயை ஆழ்த்த முருகன் அதையும் முறியடித்து விடுகிறார். அதன் போது பானுகோபனும் முருகன் வேலுக்கு பலியாகிறான்.

சிங்கமுகன் வதை:

பானுகோபன் பலியாக சூரனின் தம்பி சிங்காசுரன் போருக்குச் செல்கின்றான். சிங்கமுகன் ஒரு பெரும் ஞானி. மாபெரும் வீரன். முருகனாக வந்திருப்பவர் சிவனே. சிவனுடன் போர்புரிய எம்மால் முடியாது. தேவர்களை விடுதலை செய்தால் நாம் உயிர் வாழலாம் என சூரனுக்கு புத்திமதி கூறியும் அவன் கேட்காமையால் செஞ்சோற்றூக் கடனுக்காக போர்புரியச் செல்கின்றான். இவன் பல மாய வித்தைகள் செய்தும், பல விதமாக முருகவேளுடன் போர் புரிகின்றான். இவனது சிரம் விழுந்தால் உடனே அதற்குப் பதிலாக புதிய சிரம் தோன்றும் வரம் பெற்றவன். அதனால் அவனை முருகப் பெருமான் வேல்கொண்டு கொல்லாது குஞ்சபடையால் நெஞ்சைப் பிளந்து சங்காரம் செய்கின்றான்.

சூரன் சங்காரம்:

சூரன் அண்டம் விட்டு அண்டம் பாயும் வரம் பெற்றவன். சிறந்த சிவபக்தன். ஆணவமலத்தால் பீடிக்கப் பட்டு அதர்மவழியில் சென்று அழிகின்றான். தன் சொந்தபந்தங்களையும், துணை நின்ற படைச் சேனைகளையும் இழந்து செய்வதறியாது நின்ற சூரனின் ஆணவம் அப்போதும் அடங்கவில்லை. தானே போருக்கு செல்வதாக முடிவு செய்து முருகப் பெரூமான் முன் தோன்றி சமாரியாக அம்புக்கணை தொடுத்தான். அவையாவும் முருகவேளின் கடைக்கண் பார்வையால் அழிந்தன. சூரன் தனதுமாயயாலங்களினால் பலவாறாக தோன்றி போர்செய்தான். அப்போது முருகன் சூரனை நோக்கி இப்போதும் நீ உயிர்வாளலாம் தெவர்களை சிறையில் இருந்து விடுவித்து விடு என்று அறிவுறுத்தினார். அப்போதும் அவனின் ஆணவம் அடங்கவில்லை. அதனால் போர்செய்யவே விருப்புக் கொண்டவனாய் போர் செயலானான்.

வீரமகேந்திரபுரத்தில் பலப்பல மாயங்கள் செய்து போர் புரிகிறான் சூரன். கடலாய், இருளாய் மாறி மாறிச் செய்யும் போர் எதுவும் உதவாமல் போனதினால், உதவிசெய்ய இருந்த உற்றமும் சுற்றமும் அழிந்து உறவும் அற்றுப் போனதினால் சூரனும் மயங்கித் தத்தளித்தான். தன்னுடன் போர் செய்ய வந்தது இறைவனே என அறிந்தும், அடிபணிய ஆணவம் விடவில்லை.

முருகன் சூரனின் ஆணவத்தை அடக்கும் பொருட்டு தன் திருப்பெரு வடிவம் (விஸ்வரூபம்) காட்டியும், எல்லாம் வல்ல பரம்பொருள் தாமே என பரமேசுர வடிவம் காட்டியும், சிவனும் அவன் மகனும் மணியும் ஒலியும் போல ஒருவரே என்றுணர்த்தியும், தன் தன்மை மாறாது போர் செயலானான்.

சூரன் போர் செய்த ஒவ்வொரு தினமும் தனது ஆயுதங்களை ஒவ்வொன்றாக இழந்தான். அவன் தனக்கு சிவனால் வழங்கப் பெற்ற "இந்திரஞாலம்" என்னும்தேரை அழைத்து முருகனின்படைச் சேனையையும் துக்கிச் சென்று பிரபஞ்ச உச்சியில் வைக்கும்படி கட்டளை இட்டான். இந்திரஞாலம் என்றதேரும் அவன் கட்டளையை நிறைவேற்ற முருகனின்படையை தூக்கி பிரபஞ்ச உச்சிக்கு கொண்டு செறது. முகனின் வேலானது சீறிப்பாய்ந்து தேரைத் தடுத்து நிறுத்தி முருகனிடம் கொண்டு வந்து சேர்த்தது. முருகன் அத்தேரை தம் வசப்படுதி தன் உடைமையாக்கிக் கொண்டார். இது கண்ட சூரபத்மன் செய்வதறியாது திகைத்தான். அதனால் சிவனால் அவனுக்கு வழங்கப்பெற்றசூலப்படையயை முருகனை அழிக்கும்படி ஏவினான். சூலப்படையும் முருகனை நோக்கி வந்தபோது முருகனின் வேல் அதனை மழுங்கச் செய்து செயலற்றதாக்கி திரும்பிச் செல்லவைத்தது. கடைசியாக சூரன் தனது அம்புப் படையை முருகனை அழிக்க அனுப்பினான். முருகனின் வேல் அதை பொடிப்பொடியாக்கி செயலிழக்கச் செய்தது. முருகனால் இறப்பது நிச்சயம் என உறுதியாக தெரிந்திருந்தும் தேவர்களை விடுதலை செய்வது மானக் குறைவு என எண்ணிய சூரன் ஆணவ மிகுதியால் தொடர்ந்து போராட துணிது சக்கரவானபக்ஷியாக உருமாறி வானில் பறந்து பல அழிவுகளை ஏற்படுத்தியதுடன் முருகனின் முருகனின் சேனையையும் சீண்டத் தொடங்கினான். இது கண்ட முருகப் பெருமான் இந்திரனை மயிலாக உருமாறும்படி கூறி அதன் மீது பறந்து சூரனை தாக்கலானார். சூரனும் தனது மாயாயால வித்தைகளினால் மறைந்து தாக்கி மறைந்தான்.

தனது படையினரையும், படைக் கலங்களையும் இழந்த சூரன் அண்டங்கள் எல்லாம் மறைந்து ஒழிக்கலானான். கடைசியாக முருகப் பெருமான் எய்திய வேலானது அவன் சென்ற இடமெல்லாம் துரத்திச் சென்று கடைசியாக நடுக்கடலடியில் மாமரமாய் மாறுவேடத்தில் நின்ற சூரனை; நீரினுள் சென்று மாமரத்தை இருகூறாக்கி சூரனை சங்காரம் செய்தார்.

ஆணவம் அழியப் பெற்ற சூரன் தம் தவறை உணர்ந்து; தன்னை மன்னித்து, ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடி முருகனை வேண்டி நிற்க; அவன்மேல் இரக்கம் கொண்டு; பிளவுபட்ட மாமர பாதிகள் இரண்டையும் முருகன் தன் அருளால் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி, மயிலை வாகனமாகவும் சேவலைக் கொடியிலும் தன்னுடன் பிணைத்துக் கொண்டார்.

கந்த புராணக் கதையைச் "சங்கரன் மகன் சட்டியில் மாவறுத்தான்" என்ற சொற்றொடர் மூலம் நகைச் சுவையாக பயன் கூறுவார்கள். சங்கரன் புதல்வராகிய முருகப் பெருமான் சஷ்டித் திதியிலே மாமரமாக வந்த சூரனை இரண்டாக அரிந்தார் என்பது இதன் பொருள்.
முருகனின் ஆணைப்படி, வருணன் வீர மகேந்திரபுரியைக் கடலுக்கு அடியில் மூழ்கடிக்க, போர் முடிகிறது.

வெற்றி வீரத் திருமகனாய், முருகப் பெருமான் திருச்செந்தூர் திரும்புகின்றான். சூரனுடன் முருகப் பெருமான் போர் புரிந்து அவனது ஆணவத்தினை அடக்கி ஆட்கொண்ட நாளே இறுதி நாளாகிய சஷ்டி எனப்படும். சஷ்டி என்பது திதியாகும். இவர்கள் இருவருக்கும் இடையில் போர் நடந்த இடம் முருகப் பெரமான் குடிகொண்டுள்ள ஆறுபடை வீடுகளில் ஒன்றாகியதும், கடலும், கடல் சார்ந்த பிரதேசமாகிய நெய்தல் நிலமாகிய திருச்செந்தூர் என்னும் தலமென கூறுவாருமுளர்.

சூரனை அழித்த மனக்கேதம் தீர, செந்தூரில் போருக்கு முன்னரே கட்டப்பட்ட ஈசனின் ஆலயத்தில், கைகளில் ஜபமாலையோடு, சிவ பூசை செய்கிறான் முருகன். இந்தக் கோலமே நாம் இன்றும் திருச்செந்தூர் கருவறையில் காண்பது. கைகளில் ஜப மாலையுடன் செந்தூர் மூலத்தானத்து முதல்வன் நிற்க, சற்று எட்டிப் பார்த்தால், கருவறைக்குள் சிவலிங்கமும் தெரியும்.

இங்கே முருகப் பெருமான் அபயம்/வரம் தரும் கோலத்தில் இல்லாமல், ஜபம் செய்யும் கோலத்தில் உள்ளான். கையில் வேல் கிடையாது. அலங்காரத்துக்காக மட்டும் வேலையோ/யோக தண்டத்தையோ தோள் மீது சார்த்தி வைத்திருப்பார்கள்; பின் கரம் சத்திப்படை ஏந்தி, இன்னொரு கரம் ஜபமாலை தாங்கி நிற்க, தியானத்தில் முழந்தாளில் கைவைத்து, ஈசனை மலர்களால் அர்ச்சிக்கும் இன்னொரு கரம்.

முருகனுக்கு இடப்பக்கத்தில் உலகீசர் (ஜகன்னாதர்) என்னும் சிவலிங்கம்! அவருக்கே முதல் பூசைகள் செய்யப்படுகின்றன!
மூலவரின் காலடியில் இரு மருங்கிலும் அவரைப் போலவே சின்னஞ் சிறு சிலைகள்! வெள்ளியில் ஒன்று; தங்கத்தில் ஒன்று! திருவெளி (ஸ்ரீவேளி/சீவேளி என்று திரிந்து விட்டது). கருவறையைக் காலையிலும் மாலையிலும் வெளி-வலம் வரும் மூர்த்திகளாக அவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.

ஆலயத்தில் சிறு சிவப்புக் குன்று-செம்பாறைகளை குடைந்தே கருவறை அமைந்துள்ளது அதனால்தான் செந்து+இல்=செந்தில் என பெயர் ஆனது. பின்னாளில் பிரகாரங்கள் (வீதிகள்) என்று பெருகிப் பாறைக் குன்றுகள் மறைந்தாலும், இன்றும் இந்தச் செந்திலில் உள்ளவனே மூலத்தானத்து முதல்வன்.

கிழக்கே கடலைப் பார்த்த திருமுகம். ஒருமுகம். சிரிமுகம். பாலமுகம். சிறு பாலகன் ஆதலால், அதே உயரம் தான் ஆளுயரம். இல்லை! தலைமுடி மாலை சூடி, மணி முடி தரித்து, வங்கார மார்பில் அணிப் பதக்கமும் தரித்து, வெற்றிப் பீடத்தில் ஏறி நிற்கும் காட்சி!

சூரசம்ஹாரம் நடைபெறும் தினத்தில் திருச்செந்தூர் ஆலயக் கடல் நீரானது சம்ஹாரம் நடைபெறுவதற்கு வசதியாக செந்தில் ஆண்டவனின் அருள் கருணையால் உள் முகமாகச் சென்று சூரசம்ஹாரம் முடிந்து செந்தில் ஆண்டவர் இருப்பிடம் திரும்பும் போது கடலானது பழைய நிலைக்கு வருவதை காண முடிவதுடன் கருவறையில் உள்ள மூலவரின் முகத்தில் சூரசம்ஹார களைப்பினால் ஏற்பட்ட வியர்வைத் துளிகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

முருகப் பெருமான் சூரபத்மனோடும் அவனது படையினருடனும். பத்து தினங்கள் நடந்த போரில் அசுரர்களை வென்று சூரபத்மனை மயிலாகவும், சேவலாகவும் மாற்றினார். மயில் முருகனுக்கு வாகனம் ஆகியது. சேவல் முருகனின் வெற்றிக்கொடி ஆகியது.

சூரசங்காரங்கள் முடிந்த பின்னர், அமரேந்திரன் (இந்திரன்) தேவயானையை முருகப் பெருமானிடமே ஒப்படைக்க விழைகிறான். முருகனும் சரவணப் பொய்கையில் முன்னர் தாம் அருளிய வாக்கின் படியே, தேவானை அம்மையைப் திருப்பரங்குன்றில் மணக்கிறார். பின்னர், அவ்வண்ணமே வள்ளி அம்மையையும், திருத்தணிகையில் மணம் புரிகிறார்.

நல்லூர் கந்தன் ஆலய சூரன் போர் நிகழ்வை காண இங்கே click கவும்


Wednesday, November 10, 2010

மதன் காக்கி-தமிழ் சினிமாவின் அடுத்த முத்து.



தனது பாடல் வரிகளால் உலகையே கட்டிப்போடக்கூடிய திறமை படைத்தவர் கவிஞர்.வைரமுத்து.

வைரமுத்து வின் வாரிசு தான் இந்த மதன் காக்கி.

மதன் காக்கி யின் தமிழ் சினிமா நுழைவு மிக பிரம்மாண்டமானது.தமிழ் சினிமா வரலாற்றிலே அதிகம் செலவு செய்து எடுக்கப்பட்ட திரைப்படம் எந்திரன்.எந்திரன் படத்தில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் "இரும்பிலே ஓர் இருதயம்"பாடல் இவரால் எழுதப்பட்டது.

ஓர் இயந்திரம் ஓர் மனதிடம் காதல் சொல்வது தமிழ் சினிமாவிற்கு ரொம்ப ரொம்ப புதுசு.அப்பேற்பட்ட சவாலை எதிர்கொண்டு தனது கண்ணிபாடலை மாபெரும் வெற்றியடைய செய்திருக்கும் இவருக்கு என் சல்யூட்.

தொடர்ந்து வரும் காலங்களில் இதுபோன்ற வித்தியாசமான பாடல்கள் அதிகமாக வரக்கூடிய வாய்ப்பு தமிழ் சினிமாவை பொறுத்தவரை வளர்ந்துக்கொண்டே செல்கிறது.

இனி இவரது வரிகள் உங்கள் பார்வைக்காக......

இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ.
முதல் முறை காதல் அழைக்குதோ.

பூஜ்ஜியம் ஒன்றோடு
பூவாசம் இன்றோடு
விண்மீன்கள் விண்ணோடு
மின்னல்கள் கண்ணோடு
கூகிள் கள் காணாத தேடல்கள் என்னோடு
காலங்கள் காண காதல் பெண் பூவே உன்னோடு

ஐ ரோபோ உன் காதில் ஐ லவ் யூ சொல்லட்டா?

ஐ ஏம் எ சூப்பர் கேர்ள்
உன் காதல் ரேப்பர் கேர்ள்

என்னுள்ளே எண்ணேல்லாம்
நீ தானே நீ தானே
உன் நீலக்கண்ணோரம் மின்சாரம் பறிப்பேன்
என் நீலப்பல்லாலே உன்னோடு சிரிப்பேன்
என் நெஞ்சின் நெஞ்சோடு
உன் நெஞ்சை அணைப்பேன்
நீ தூங்கும் நேரத்தில் நான் உன்னை அணைப்பேன்
எந்நாளும் எப்போதும்
உன் கையில் பொம்மையாய்

வாட்ச் மீ ரோபோ ஷேக் இட்
ஐ நோ யூ வோன்ட் டு ப்ரேக் இட்
தொட்டுப்பெசும் போது ஷாக் அடிக்கக்கூடும்
காதல் செய்யும் நேரம் மோட்டார் வேகம் கூடும்
இரவில் நடுவில் பேட்டரி தான் தீரும்

மெமரியில் குமரியை தனிச்சிறை பிடித்தேன்.
ஷட்டவுன் செய்யாமல் இரவினில் துடித்தேன்.
சென்சார் எல்லாம் தேயத்தேய நாளும் உன்னை படித்தேன்
உன்னாலே தானே எந்தன் விதிகளை மறந்தேன்
எச்சில் இல்லா எந்தன் முத்தம் சர்ச்சை இன்றி கொள்வாயா?
இரத்தம் இல்லாக்காதல் என்று ஒத்திப்போகச்சொல்வாயா?
உயிரியல் மொழிகளில் எந்திரன் தானடி
உளவியல் மொழிகளில் இந்திரன் நானடி
சாதல் இல்ல சாபம் வாங்கி வந்தேனே வந்தேனே
தெயமானமே இல்லா காதல் கொண்டு வந்தேனே

ஹே ரோபோ மயக்கதே
u wanna come & gei it boy
or r u just a robo toy
i dnt wnt to brk through
i dnt even need a clue
you be my man's back up
i thnk u need a checkup
i can melt your heart
down maybe if you got one
we doing that far ages
since in time of serjes
முட்டதே ஓரம்போ நீ என் காலைச்சுற்றும் பாம்போ
காதல் செய்யும் ரோபோ நீ தேவையில்லை போ போ

மதன் காக்கி முதல் முதலாக எழுதிய பாடல் இதுவாகினும் இவர் எழுதி முதல் முதலாக வெளிவந்த பாடல் கண்டேன் காதலை திரைப்படத்தில் "ஓடோடிப்போறேன்"எனும் பாடலாகும்.

இரும்பிலே ஓர் இருதயம் பாடலை காண இவ்விடத்தில் clickகவும்



இலக்கிய மயமான ஓர் தொழில்நுட்பப் பாடல்


குழு- இவன் பேரைச்சொன்னதும் பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கை தட்டும்.
இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தரை முட்டும்.
அடி அழகே உலகழகே!
இந்த எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்.


ஆயிரம் அரிமா-உன்போல்
பொன்மான் கிடைத்தால்-யம்மா
சும்மா விடுமா?
ராஜாத்தி உலோகத்தில்
ஆசைத்தீ பொங்குதடி

நான் அட்லாண்டிக்கை ஊற்றிப்பர்த்தேன்
அக்கினி அணையலையே

உன் பச்சைத்தேனை ஊற்று
என் இச்சைத்தீயை ஆற்று
அடி கச்சைக்கனியே பந்தி நடத்து
கட்டில் இலை போட்டு.

சிற்றின்ப நரம்பில் சேமித்த இரும்பில்
சற்றேன்று மோகம் கொண்டிற்றே.
பெ- ராட்சசன் வேண்டாம்
ரசிகன் வேண்டும்
பெண் உள்ளம் உன்னை கேஞ்சிற்றே.......
பெண் உள்ளம் உன்னை கேஞ்சிற்றே.......

ஆ- நான் மனிதன் அல்ல
ஆக்ரினையின் அரசன் நான்
காமுன்டக் கணினி நான்
சின்னஞ் சிறுசின் இதயம்
தின்னும் சிலிக்கான் சிங்கம் நான்.
எந்திரா எந்திரா எந்திரா எந்திரா
எந்திரா எந்திரா எந்திரா எந்திரா ........................................................................(அரிமா)

பெ- மேகத்தை உடுத்தும் மின்னல் தான் நான் என்று
ஐசுக்கே ஐஸை வைக்காதே........

ஆ- வயறேல்லாம் ஓசை
உயிரெல்லாம் ஆசை
ரோபோ வை போ போ என்றாதே.

பெ- ஏ ஏழாம் அறிவே உன் மூளை திருடுகிறாய்
உயிரோடு உண்ணுகிறாய்-நீ
உண்டு முடித்த மிச்சம் எதுவோ அது தான்
நான் என்றாய்

குழு- இவன் பேரை கேட்டதும் பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கை தட்டும்.
இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தரை முட்டும்.
அடி அழகே உலகழகே
இந்த எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்.................................................(அரிமா)

எந்திரா எந்திரா எந்திரா..................................................

பாடம்


கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெறுமா என பரபரப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான் மகேஷ்

ஸ்ரீதர் அலுவலகம் முடிந்து வந்ததும் ரிமோட்டைப் பிடுங்கி டி.வி.யை நிறுத்தினார்.சமையல் செய்து கொண்டிருந்த மனைவியிடம் "இதெல்லாம் நீ பாக்குறதில்லையா?"என்றார் கோபத்துடன்."இப்பதான் கிரைண்டர்ல அரிசி போட்டுருக்கேன் .கிரிக்கட் பார்க்க எங்கங்க நேரம்!"என்று சலித்துக்கொண்டாள் அவள்.

எரிச்சலடைந்த ஸ்ரீதர் "என்ன விளையாடுறீங்களா?பாடத்தை படிக்காம கிரிக்கட் பார்த்துட்டுருக்கான்.இதை கண்டிக்காம,நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க?"என்று காட்டுக்கத்தல் கத்த,அறைக்குள் ஓடிச்சென்று தாழிட்டு படிக்க ஆரம்பித்தான் மகேஷ்.

உடைமாற்றிவந்த ஸ்ரீதர் டி.வி யில் நியூஸ் பார்க்கத்தொடங்கினான்.வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டிய தேதி இன்றுடன் முடிவடைகிறது என்பதை அறிந்ததும் தலையில் கை வைத்து "அய்யோ....."என்றார்.
அருகில் இருந்த ஸ்ரீதரின் அப்பா "தலை வலிக்குதா?" என்றார்.
"இல்லப்பா...வருமான வரி ரிட்டர்ன் சமர்ப்பிக்க மறந்திட்டேன்!"என்றான் ஸ்ரீதர்.

"ஏன்டா....என்னோட பேரன் நாளைக்கு செய்யவேண்டிய வேலைய செய்யலைன்னு திட்டினியே....நீ இன்னைக்கு செய்யவேண்டிய வேலைய கோட்டை விட்டிட்டு வந்திருக்க!"

அப்பா கொடுத்த சாட்டையடியில்,ஸ்ரீதரின் தலை நிமிரவே இல்லை.

நன்றி-விகடன்.

நட்புப் பூங்கா.


மார்கழி மாதக் குளிரில்
உன் கம்பளி போர்வையை
போர்த்தினாய் எனக்கு
மயிலுக்கு பேகன்
எனக்கு நீ
ஞாபகம் வருதே-இப்போதும்
ஒவ்வொரு மார்கழியிலும்.

Monday, November 8, 2010

ஹர்பஜன் நிதானம்.......தப்பியது இந்தியா


முதல் இன்னிங்சில் அபாரமான துடுப்பாட்ட திறமைகளை வெளிப்படுத்திய இந்தியா அதே நம்பிக்கையோடு இரண்டாம் இன்னிங்சுக்கும் களமிறங்கியது.ஆனால் இந்தியாவுக்கு காத்திருந்ததோ பேரதிர்ச்சிதான்.முதலாவது ஓவரில் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட கம்பீர் மார்டின் இன் பந்து வீச்சில் ஹோப்கிங்க்ஸ் இடம் பிடிகொடுத்து ஓட்டம் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்தார்.

சரி இந்திய கிரிக்கட் வரலாற்றில் இதெல்லாம் சகஜம் தானே என மனதை தேற்றிக்கொண்டு சேவாக் இன் அதிரடியை பார்க்கலாம் என்றிருந்தபோது இடி போல இறங்கியது அடுத்த அதிர்ச்சி.வழமை போல சேவாக் தன் அவசரம் காரணமாக ஒரே ஒரு ஓட்டத்தை பெற்ற போது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

நம்பிக்கை டிராவிட் பக்கம் திரும்ப அவரும் கையை விரித்தார்.முன்று ஓட்டங்களுக்கு முன்று விக்கட்டுக்களை இழந்த நிலையில் களமிறங்கினார் லக்ஸ்மன்.

இந்திய அணி பதினைந்தாவது ஓட்டத்தை பெற்றிருந்த போது இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் மார்டின் இன் பந்துவீச்சில் நேரடியாக போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழக்க டிரா செய்யும் நம்பிக்கை கூட கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் போனது.

தொடர்ந்து வந்த ரெய்னா வும் எவ்வித ஓட்டங்களையும் பெறாமல் ஆட்டமிழந்ததால் கவுத்துட்டாய்ங்கையா கவுத்துட்டாய்ங்ய என கோரஸ் பாடியது ஆள்மனசு.

நம்பிக்கையே இல்லாமல் பார்த்துக்கொண்டிருந்த போது தோனி கூட வெறும் 22 ஓட்டங்களுடனே ஆட்டமிழக்க இந்தியாவின் தோல்வி மிகத் தேளிவாக கண்ணுக்கு தெரிந்தது.

தொடர்ந்து வந்த ஹர்பஜன் என்ன நினைத்தாரோ ஏது நினைத்தாரோ வழமைக்கு மாறாக நிதானமாக துடுப்பெடுத்தாடினார்.

சாதரணமாக ஆரம்பித்த லக்ஸ்மன்-ஹர்பஜன் இற்கு இடையிலான partnership பிரம்மாண்டமாக உருவெடுத்து 165 ஓட்டங்களாக வந்து நின்றது.228 ஓட்டங்களை பெற்ற வேலையில் லக்ஸ்மன் ஆட்டமிழக்க தொடர்ந்து துடுப்பெடுத்தடினார் ஹர்பஜன்.

தனது கிரிக்கட் வாழ்க்கையில் முதலாவது சதத்தை பூர்த்தி செய்தார்.தான் 115 ஓட்டங்களையும் அணி 260 ஓட்டங்களையும் பெற்றவேலையில் ஆட்டமிழந்தார் ஹர்பஜன்.

266 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது இந்தியா.

294 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்படுத்தாட வந்து நியூசிலாந்து அணியின் முதல் விக்கட் முதலாவது ஓவரிலேயே சாகிர் கான் மூலம் வீழ்த்தப்பட்டது.

22-1 எனும் நிலையில் இருந்த போது போட்டி வெற்றி தோல்வி இன்றிய நிலையில் முடிவுக்கு வந்தது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக முதல் இன்னிங்சில் 69 ஓட்டங்களையும் இரண்டாம் இன்னிங்சில் 115 ஓட்டங்களையும் பெற்ற ஹர்பஜன் சிங் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்திய நியூசிலாந்து அணிகள் பங்கு கொள்ளும் இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஹைதராபாத் இல் இடம்பெற உள்ளது.

Sunday, November 7, 2010

அவுஸ்திரேலியா அபார வெற்றி


அடுத்தடுத்தாக 2 போட்டிகளில் படு தோல்வியடைந்த அவுஸ்திரேலிய அணி இன்று பிரிஸ்பேனில் தனது ஆறுதல் வெற்றியை பெற்றுக்கொண்டது.

இன்றைய போட்டியிலும் வெற்றி பெரும் இலக்கோடு களமிறங்கிய இலங்கை அணியின் விக்கட்டுகள் அடுத்தடுத்தாக சரியத்தொடங்கியது.

தில்ஷான் 1 ஓட்டத்துடனும் சங்கக்கார,மஹேல ஆகியோர் ஓட்டம் எதனையும் பெறாமலும் களத்தை விட்டு வெளியேறினர்.

இரட்டை இழக்க ஓட்டங்களை 2 வீரர்களே தாண்டினார்.

தரங்க 28 ஓட்டங்களையும்,சில்வா 33 ஓட்டங்களையும் பெற்றனர்.இவர்களுக்கு அடுத்ததாக மேத்திவ்ஸ் 9 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

32 ஓவர்களுக்கு முகம் கொடுத்த இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 115 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி தனது முதல் விக்கட்டை 35 ஓட்டங்களை பெற்ற வேலையில் இழந்தது.வாட்சன் 15 ஓட்டங்களை பெற்ற வேலையில் தில்ஹார வின் பந்து வீச்சில் மேத்திவ்ஸ் இடம் பிடி கொடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்த அவுஸ்திரேலிய விக்கட் 84 வது ஓட்டத்தை பெற்ற வேலையில் இழக்கப்பட்டது.ஹட்டின் 34 ஓட்டங்களை பெற்ற வேலையில் தில்ஹார வின் பந்து வீச்சில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த ஹசி 6 ஓட்டங்களுடனும் கிளார்க் 50 ஓட்டங்களையும் பெற்ற வேலையில் அவுஸ்திரேலிய அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.

ஆட்டநாயகனாக 33 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை வீழ்த்திய அவுஸ்திரேலிய அணியின் மெக்கே தெரிவுசெய்யப்பட்டார்.

Saturday, November 6, 2010

புரமோஷன்


பத்து ஆண்டுகளுக்கு பின் பாண்டியனுக்கு புரமோஷன்.சக ஊழியர்களுக்கும் சந்தோஷம் தான் அனைவரின் வாழ்த்து மழையிலும் நனைந்த அவன்,இந்த மாதம் முதல் ஹெட் கிளார்க்.

ஆபீஸ் முடிந்தமும் வழக்கத்தை விட 5 முழம் மல்லிகைப்பூ அதிகம் வாங்கினான்.ஸ்பெஷல் அல்வா அரைகிலோ வாங்கினான்.குழந்தைகளுக்கு பொம்மைகளும் புத்தகங்களும் வாங்கினான்.

சம்பளத்தில் நான்காயிரம் அதிகரிக்கிறது.பத்து வருஷம் ஓட்டின மொபட்டை மாற்றிவிட்டு,புது பைக் வாங்கவேண்டும்.செய்தி கேட்டு மனைவி ரொம்ப சந்தோஷப்படுவாள்.மனதில் கூடுதல் உற்சாகத்துடன் புதிய திட்டங்களோடும் வீட்டுக்கு கிளம்பினான் பாண்டியன்.

வாசலிலேயே நின்றிருந்தாள் மனைவி மாலதி.அவளிடம் புரமோஷன் செய்தியை சொன்னான்.மாலதி முகத்தில் ஆயிரம் சூரியன்களின் பிரகாசம்.

அரை மணி நேரத்தில் ஸ்பெஷல் டிபன் தயாரித்து பரிமாறிய கையோடு சொன்னாள்...

"என்னங்க!நமக்கு நல்ல காலம் வருதுன்னு நேத்து குடுகுடுப்பைக்காரன் சொல்லிட்டு போனது பலிச்சுருச்சு!என் கழுத்துல ஒத்தச் செயினும்,கையிலே கண்ணாடி வளையலும் போட்டுக்கிட்டு இருப்பதற்கு விடிவு காலம் வந்தாச்சு.சீக்கிரமா என் கழுத்துக்கு ரெட்டை வட செயினும்,கைக்கு நாலு தங்க வளையல்களும் வாங்கிடனும்!"

மனைவியின் "ஆசை புரமோஷ"னில் அசந்து அமர்ந்தான் பாண்டியன்.

நன்றி-விகடன்.